2023ல் கட்டுமானத் துறை: நிலையான தேவை

2023ல் கட்டுமானத் துறை: நிலையான தேவை

3 mins read

2023ஆம் ஆண்­டில் சிங்­கப்­பூ­ரில் கட்­டு­மா­னத்­துக்­கான தேவை நிலை­யாக இருக்­கும் என்­றும் அர­சாங்­கத் துறைத் திட்­டங்­கள் அதில் பெரும்­பங்கு வகிக்­க­வுள்­ள­தாகவும் கட்­டட, கட்­டு­மான ஆணை­யம் கூறி­யுள்­ளது.

தேவைக்­கேற்ப கட்­டித் தரப்­படும் (பிடிஒ) வீடு­கள், எம்­ஆர்டி ரயில் பாதை­கள், தண்­ணீர் சுத்­தி­க­ரிப்பு ஆலை­கள் போன்­ற­வற்றை அர­சாங்­கம் திட்­ட­மிட்டு வரு­கிறது.

சிங்­கப்­பூ­ரில் இந்த ஆண்டு சுமார் $27 பில்­லி­யன் முதல் $32 பில்­லி­யன் வரை மதிப்­பி­லான கட்­டு­மா­னத் திட்­டங்­க­ளுக்­கான குத்­த­கை­கள் ஒட்­டு­மொத்­த­மாக வழங்­கப்­படும் என்று ஆணை­யம் மதிப்­பிட்­டது.

2021ஆம் ஆண்டு, 2022ஆம் ஆண்டு இரண்­டி­லும் ஏறத்­தாழ அதே அள­வி­லான குத்­த­கை­கள் வழங்­கப்­பட்­டன.

கட்­டு­மா­னத் தேவை­யில் அர­சாங்­கத் துறைத் திட்­டங்­கள் 60 விழுக்­காட்­டுப் பங்கை வகிக்­கக்­கூ­டும். அதா­வது சுமார் $16 பில்­லி­ய­னி­லி­ருந்து $19 பில்­லி­யன் வரை­யி­லான கட்­டு­மா­னத் திட்­டங்­க­ளுக்­கான குத்­த­கையை அர­சாங்­கத் துறை வழங்­கும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

கட்­டு­மா­னத்­துக்­கான தேவை நிலை­யாய் இருப்­ப­தா­கத் தோன்­றி­னா­லும், எதிர்­கா­லச் சவால்­களை நிறு­வ­னங்­கள் கருத்­தில் கொள்­ள­வேண்­டும் என்று தேசிய வளர்ச்சி அமைச்­சர் டெல்­மண்ட் லீ கூறி­னார். முக்­கிய பொரு­ளி­யல்­களில் வளர்ச்சி மந்தநிலை ஏற்­படும் அபா­யம் அதி­க­ரிப்­பது, விநி­யோக சங்­கி­லி­களில் ஏற்­பட்­டுள்ள பிரச்­சி­னை­கள், பரு­வ­நிலை மாற்­றம் போன்­ற­வை அந்தச் சவால்கள்.

கட்­டட, கட்­டு­மா­ன ஆணை­ய­மும் ரிடாஸ் எனப்­படும் சொத்­துச் சந்தை மேப்­பாட்­டா­ளர்­கள் சங்­க­மும் இணைந்து, கிராண்ட் கோப்­தோர்ன் ஹோட்­ட­லில் நடத்­திய கருத்­த­ரங்­கில் அமைச்­சர் நேற்று பேசி­னார்.

"அண்­மைய ஆண்­டு­களில் கற்ற பாடங்­க­ளைக் கருத்­தில் கொண்டு கட்­ட­டத் துறை­யின் மீள்­தி­றனை வலுப் படுத்­து­வது முக்­கி­யம். ஆள்­ப­லத்தை அதி­கம் பயன்­ப­டுத்­தும் பணி­க­ளுக்­காக வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளைச் சார்ந்­தி­ருப்­ப­தைக் குறைப்­பது, நிகர அள­வில் கரிம வெளி­யேற்­றத்தை முற்­றி­லும் அகற்­று­வது உள்­ளிட்­ட­வற்றை நாம் செய்ய வேண்­டும்," என்­றார் திரு லீ.

2023ல் தனி­யார் துறைக் கட்­டு­மா­னத் திட்­டங்­க­ளின் மதிப்பு சுமார் $11 பில்­லி­யன் முதல் $13 பில்­லி­யன் வரை இருக்­க­லாம் என்று மதிப்­பி­டப்­பட்­டுள்­ளது. இது சென்ற ஆண்­டுத் தேவைக்கு ஒப்­பா­னது.

புதிய கொண்­டோ­மினி­யம் தனி­யார் அடுக்­கு­மாடி குடி­யி­ருப்­பு­களும் கடும் தேவை­க­ளுக்கு ஏற்ப மிக­வும் உயர்ந்த தரத்­தில் அமை­யும் தொழிற்­து­றைக் கட்­ட­டங்­கள் போன்­றவை தனி­யார் துறை­யில் இவ்­வாண்டு கட்­டப்­ப­ட­வுள்­ளன.

சில முக்­கிய திட்­டங்­கள் 2022லிருந்து 2023க்கு மாற்­றப்­பட்­டுள்­ள­தா­லும் சொத்து மதிப்பை உயர்த்த சில பழைய கட்­ட­டங்­கள் புதுப்­பிக்­கப்­பட உள்­ள­தா­லும் வணி­கக் கட்­ட­டங்­க­ளுக்­கான கட்­டு­மா­னத் தேவை அதி­க­ரிக்­க­வுள்­ளது என்று ஆணை­யம் தெரி­வித்­தது.

கடந்த 2021ல் 17.8 பில்­லி­யன் வெள்­ளி­யாக இருந்த அர­சாங்­கத் துறை கட்­டு­மா­னத் தேவை, 2022ல் சற்று உயர்ந்து $17.9 பில்­லி­யன் ஆனது. குறுக்கு ரயில் பாதை­யின் முதல் கட்­டம், ஜூரோங் வட்­டார ரயில் பாதை, சுகா­தார அமைச்­சின் ­சில மருத்­துவ நிலை­யங்­கள் ஆகி­ய­வற்­றின் கட்­டு­மா­னத்­தால் அந்த உயர்வு ஏற்­பட்­டது.

தனி­யார் துறை­யில் சென்ற ஆண்டு கட்­டு­மா­னத் துறைத் தேவை சற்று குறைந்­தது. 2021ல் $12.1 பில்­லி­ய­னாக இருந்த அத்­தொகை, 2022ல் $11.9 பில்­லி­ய­னா­கக் குறைந்­தது. சில பொரு­ளி­யல் சரி­வு­கள் இதற்­குக் கார­ண­மாய் இருந்­தன.