இலங்கையின் முன்னைய அதிபர் சிரிசேனா 2019 தாக்குதல்களுக்கு இழப்பீடு தர உத்தரவு

இலங்கையின் முன்னைய அதிபர் சிரிசேனா 2019 தாக்குதல்களுக்கு இழப்பீடு தர உத்தரவு

1 mins read

இலங்­கை­யின் முன்­னைய அதி­பர் மைத்­தி­ரி­பால சிரி­சே­னா­வும் இன்­னும் நான்கு அதி­கா­ரி­களும் செயல்­ப­டத் தவ­றி­ய­தால்­தான் 2019ஆம் ஆண்டு ஈஸ்­டர் ஞாயிற்­றுக்­கி­ழமை அன்று தேவா­ல­யங்­களில் வெடி­குண்­டுத் தாக்­கு­தல்­கள் நிகழ்த்தப்பட்டதாக அந்­நாட்டு உச்­ச­நீ­தி­மன்­றம் தீர்ப்­ப­ளித்­துள்­ளது.

பயங்­க­ர­வா­தத் தாக்­கு­தல்­களில் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு திரு சிரி­சேனா தமது பணத்­தி­லி­ருந்து 100 மில்­லி­யன் இலங்கை ரூபாயை (S$361,496) இழப்­பீ­டா­கத் தர­வேண்­டும் என்­றும் உச்­ச­நீ­தி­மன்­றம் உத்­த­ர­விட்­டது. மாண்­ட­வர்­கள் மற்­றும் அவர்­ க­ளின் குடும்­பத்­தா­ரின் அடிப்­படை மனித உரி­மை­களை திரு சிரி­சே­னா­வும் நான்கு உயர் அதி­கா­ரி­களும் மீறி­னர் என்று அது தெரி­வித்­தது.

அப்­போ­தைய காவல்­து­றைத் தலை­வர், உள­வுத் துறை மூத்த அதி­கா­ரி­கள், தற்­காப்பு அமைச்சு செய­லா­ளர் ஆகி­யோர் அந்த மற்ற நான்கு அதி­கா­ரி­கள் ஆவர். அவர்­கள் இழப்­பீ­டாக 210 மில்­லி­யன் இலங்கை ரூபாய் (S$758,962) செலுத்­த­வேண்­டும் என்­றும் நீதி­மன்­றம் கூறி­யது. தற்­காப்பு அமைச்­ச­ரா­க­வும் அப்­போது பொறுப்பு வகித்த திரு சிரி­சே­னா­வுக்­கும் அப்­போ­தைய பிர­த­ம­ருக்­கும் இடையே தொடர்­பில்லை. மேலும் உளவுத் துறை தகவல்களின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று உச்­ச­நீ­தி­மன்­றம் கூறி­யது.

மூன்று தேவா­ல­யங்­க­ளி­லும் மூன்று ஹோட்­டல்­க­ளி­லும் ஏறத்­தாழ ஒரே நேரத்­தில் நடத்­தப்­பட்ட ஆறு ­தாக்­குல்­களில் கிட்­டத்­தட்ட 270 பேர் மடிந்­த­னர்.