புத்தாண்டில் தொற்றுப்பரவலைச் சமாளிக்க சீனா சிரமப்படும்

புத்தாண்டில் தொற்றுப்பரவலைச் சமாளிக்க சீனா சிரமப்படும்

2 mins read
775d02e9-39f9-4286-ac83-11808c88b89e
-

சீனா கிரு­மித்­தொற்று பற்றி போது­மான புள்­ளி­வி­வ­ரங்­களை வெளி­யி­டா­த­தால் சீனப் புத்­தாண்டு நேரத்­தில் தொற்­றுப் பர­வல் அபா­யத்­தைச் சமா­ளிப்­ப­தில் சீனா­வுக்கு உத­வு­வது சவா­லாய் இருக்­கும் என்று உல­க சுகா­தார நிறுவனம் தெரி­வித்­தி­ருக்­கிறது.

அத்­து­டன், சீனா அதன் தொற்று எண்­ணிக்­கையை முழு­மை­யாக வெளி­யி­டா­த­தால் உலக அள­வில் தொற்று எண்­ணிக்கை குறைந்­துள்­ள­தா­க­வும் நிறுவனம் கூறி­யது.

உண்­மை­யான நில­வ­ரத்தை சீனா மூடி மறைக்­கிறது என்ற அச்­சத்தை அதி­க­ரிக்­கும் வகை­யில் சீனா அதன் அன்­றா­டத் தொற்று எண்­ணிக்­கையை கடந்த மூன்று நாள்­க­ளாக வெளி­யி­டு­வதை நிறுத்­தி­யுள்­ளது.

வேலை­யின் பொருட்டு வேறு நக­ரங்­களில் வசிக்­கும் பல மில்­லி­யன் சீனர்­கள் சீனப் புத்­தாண்­டின்­போது புத்­தாண்­டுக் கொண்­டாட்­டங்­க­ளுக்­காக தங்­கள் சொந்த ஊர்­க­ளுக்­குத் திரும்­பு­வர் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது. இத­னால் கொவிட்-19 கிரு­மித் தொற்று பன்­ம­டங்கு பெரு­கும் என்று அஞ்­சப்­ப­டு­கிறது.

புத்­தாண்­டுப் பய­ணங்­க­ளால் ஏற்­படும் தொற்று அபா­யத்­தைச் சமா­ளிப்­ப­தி­லும் சீனா­வு­டன் ஒத்­து­ழைப்­ப­தில் சவால்­கள் இருப்­ப­தாக உலக சுகா­தார நிறுவனம் கூறி­யது.

தொற்று அதி­க­ரிப்­பின் அபா­யத்தை முழு­மை­யாக மதிப்­பிட சீனா போதிய தக­வல்­க­ளைத் தர­வில்லை என்று உலக சுகா­தார நிறுவனத்தின் எச்­ச­ரிக்கை, மருத்­துவ உத­வித் துறை இயக்­கு­நர் ரஹ்மான் மஹ­முட் நேற்று கூறி­னார்.

சீனா­வில் புது­வகை கிரு­மி­கள் பர­வு­கின்­ற­னவா, நக­ரங்­களில் தொற்­றுச் சம்­ப­வங்­கள் கூடு­கின்­ற­னவா, குறை­கின்­ற­னவா என்­ப­து­போன்ற தக­வல்­களை வழங்­கும்­படி அவர் சீனா­வைக் கேட்­டுக்­கொண்­டார்

உலக சுகா­தார அமைப்­பின் தலை­மை இயக்குனர் டெட்­ரோஸ் கெப்­ரி­யே­சஸ், கொவிட்-19 தொற்­றால் ஏற்­படும் மர­ணங்­க­ளின் எண்­ணிக்­கையை சீனா குறைத்­துக் கூறு­வ­தாக நேற்று தெரி­வித்­தார். கடந்த டிசம்­ப­ரி­லி­ருந்து இது­வரை கிரு­மித் தொற்­றால் 40 மர­ணங்­கள் நிகழ்ந்­துள்­ள­தாக சீனா முன்­னர் கூறி­யது. ஆனால் நக­ரங்­க­ளின் சவக் கிடங்­கு­கள், தக­னச் சாலை­களில் உள்ள நெரி­சல் நிலைமை வேறுவிதமாக இருப்பதைக் காட்டுகின்றன.

சீனாவின் அன்­றா­டத் தொற்று நில­வ­ரம் கடை­சி­யாக திங்­கட்­கிழமை அன்று வெளி­யி­டப்­பட்­டது. தொற்று நில­வ­ரத்தை வெளி­யி­டு­வதை விரை­வில் நிறுத்­தப் போவ­தாக சீனா கடந்த மாதம் கூறி­யி­ருந்­தது.

சீனப் புத்­தாண்டு நேரத்­தில் ஊர் திரும்பி தங்­கள் குடும்­பத்­தில் உள்ள முதி­ய­வர்­க­ளைச் சந்­திக்க வேண்­டாம் என்­றும் சீனர்­கள் கேட்­டுக்கொள்­ளப்­பட்டு வரு­கின்­ற­னர். முக்­கிய மருத்­துவ நிபு­ணர்­கள் அந்த எச்­ச­ரிக்­கையை விடுப்­ப­தாக தி குளோ­பல் டைம்ஸ் போன்ற சீனா­வின் முக்­கிய செய்­தித்­தாள்­கள் தெரி­வித்­துள்­ளன.

சீன நாட்­ட­வர் அதி­கம் பயன்­ படுத்­தும் வெய்போ சமூக ஊட­கத்­தி­லும் ஊர் திரும்ப வேண்­டாம் என்ற அறி­வு­றுத்­தல்­கள் பரவி வரு­கின்­றன.

சீனா, கடந்த 8ஆம் தேதி அதன் எல்­லை­க­ளைத் திறந்­து­விட்டு வெளி­நாட்­டுப் பய­ணங்­க­ளுக்கு வழி­விட்டது.

தொற்­றுப் பர­வ­லுக்­கும் புது­ வ­கைக் கிரு­மி­க­ளுக்­கும் பல நாடு­களும் அஞ்சி சீனப் பய­ணி­ க­ளுக்கு கட்­டுப்­பா­டு­கள் விதிக்­கப்­பட்­டுள்­ளன. இத­னால் சின­ம் அடைந்த சீனா, தென் கொரியா, ஜப்­பான் குடி­மக்­க­ளுக்கு விசா வழங்­கு­வதை நிறுத்­தி­யுள்­ளது.