51 நாள் ஆற்றுவழி சொகுசுக் கப்பல் சேவையைத் தொடங்கிவைத்தார் மோடி

51 நாள் ஆற்றுவழி சொகுசுக் கப்பல் சேவையைத் தொடங்கிவைத்தார் மோடி

2 mins read
7c37e7a3-f0a6-4b24-ad3d-3a32fc9b225a
-

உல­கின் ஆக நீள­மான ஆற்­று­வழி சொகு­சுக் கப்­பல் சேவையை இந்­தி­யப் பிர­த­மர் நரேந்­திர மோடி நேற்று தொடங்­கி­வைத்­தார்.

எம்வி கங்கா விலாஸ் என்று பெய­ரி­டப்­பட்­டுள்ள அந்­தச் சொகு­சுக் கப்­பல் தனது 51 நாள்

பய­ணத்தை வார­ணாசி­யி­லி­ருந்து தொடங்­கி­யது. வரும் மார்ச் மாதம் 1ஆம் தேதி­யன்று அசாம் மாநி­லத்­தில் உள்ள திப்­ரு­கரை அது சென்­ற­டை­யும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

"உல­கின் ஆக நீள­மான

ஆற்­று­வழி சொகு­சுக் கப்­பல் சேவை கங்கை ஆற்­றில் தொடங்­கி­யி­ருப்­பது ஒரு மைல்­கல்­லா­கும். இந்­திய சுற்­றுப்­ப­ய­ணத்­துறை புதிய அத்­தி­யா­யத்­திற்­குள் அடி­யெ­டுத்து வைத்­தி­ருப்­பதை இது பறை­சாற்­று­கிறது," என்று மெய்­நி­கர் வாயி­லாக சொகு­சுக் கப்­பல் சேவை­யைத் தொடங்­கி­வைத்­துத் தெரி­வித்­தார் பிரதமர் மோடி.

இந்த ஆற்­று­வழி சொகு­சுக் கப்­பல் சேவை சுற்­றுப்­ப­ய­ணத்­

து­றைக்­குக் கூடு­தல் வருமானத்தைக் கொண்­டு­

வ­ரு­வ­து­டன் புதிய வேலைவாய்ப்பு ­களையும் உரு­வாக்­கும் என்­றார் பிரதமர் மோடி.

"இந்­தி­யாவை வெறும் வார்த்­தை­க­ளால் உள்­ள­டக்­கி­விட முடி­யாது. அதை இத­ய­பூர்­வ­மாக மட்­டுமே உணர்ந்து அனு­ப­விக்க முடி­யும்," என்று கங்கை ஆற்­றில் தனது கன்­னிப் பய­ணத்­தைத் தொடங்­கிய எம்வி கங்கா விலா­ஸில் இருந்த வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளி­டம் மோடி கூறி­னார்.

அடுத்த 51 நாள்­களில் ஏறத்­தாழ 3,200 கிலோ­மீட்­டர் தூரம் கடந்து, 27 ஆறு­க­ளை­யும் பல மாநி­லங்­க­ளை­யும் கடந்­து சென்று திப்­ரு­கரை கங்கா விலாஸ் சென்­ற­டை­யும்.

கங்கா விலாஸில் பய­ணம் செய்­ப­வர்­கள் உலக மர­பு­டை­மைத் தளங்­கள், தேசி­யப் பூங்­காக்­கள், ஆறு­களில் உள்ள கப்­பல்து­றை­கள், பீகார் தலை­ந­கர் பாட்னா, ஜார்­கண்ட் மாநி­லத்­தின் சாஹிப்­கஞ்ச், மேற்கு வங்­கா­ளத் தலை­

ந­கர் கோல்­கத்தா, பங்­ளாதேஷ் தலை­ந­கர் டாக்கா, அசா­மின் கௌஹாத்தி உட்­பட 50 சுற்­று­லாத் தலங்­க­ளுக்­குச் சென்று அவற்றை நேரில் பார்த்து ரசிக்­க­லாம்.

அது­மட்­டு­மல்லாது, வார­ணா­சி ­யில் தினந்­தோ­றும் நடை­பெ­றும் பிர­சித்­தி­பெற்ற 'கங்கா ஆரத்தி'யையும் பய­ணி­கள் பார்க்­கும் வகை­யில் சொகு­சுக் கப்­பல் அங்கு சிறிது நேரம் நங்­கூ­ர­மிடப்படும்.

சார­னாத்­தில் உள்ள பௌத்த சம­யத் தலம், அசா­மில் உள்ள ஆகப் பெரிய ஆற்­றுத் தீவான மஜு­லி­யை­யும் பய­ணி­கள் கண்டு களிக்கலாம்.

பீகார் யோகா பள்ளி, விக்­ரம்­ஷிலா பல்­க­லைக்­க­ழ­கத்­துக்­கும் பய­ணி­கள் அழைத்­துச் செல்­லப்­ப­டு­வர். வங்­கக் கடல் டெல்டா பகுதி வழி­யா­க­வும் காசி­ரங்கா தேசிய பூங்கா வழி­யா­க­வும் சொகு­சுக் கப்­பல் செல்­லும்.

கங்கா விலாஸ் சொகு­சுக் கப்­பல் மூன்று மாடி­க­ளைக் கொண்­டது. 18 சொகுசு அறை­

க­ளைக் கொண்­டுள்ள அக்­கப்­ப­லில் அனைத்து வச­தி­க­ளு­டன் ஒரே நேரத்­தில் 36 சுற்­றுப்­ப­ய­ணி­கள் பய­ணம் செய்­ய­லாம்.

கங்கா விலாஸின் கன்னிப் பயணத்தில் தற்போது சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த 32 பயணிகள் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இந்த சொகுசுக் கப்பல் பயணத்துக்கான ஒருநாள் செலவு ஏறத்தாழ 25,000 ரூபாய் (ஒரு பயணிக்கான கட்டணம்).