இந்தியாவின் உத்தராகண்ட் மா
நிலத்தில் உள்ள ஜோஷிமத் நகரம் மெது மெதுவாக மண்ணில் புதையுண்டு வருவதைக் காட்டும் செயற்கைக்கோள் படங்களை இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு (இஸ்ரோ) வெளி
யிட்டுள்ளது.
இமயமலை நகரமான ஜோஷிமத் வெறும் 12 நாள்களில் 5.4 சென்டிமீட்டர் அளவில்
மண்ணுக்குள் இறங்கியிருப்பதை அது காட்டுவதாக நிபுணர்கள் தெரிவித்தனர்.
ஜோஷிமத் நகரம் வாயிலாக இந்துக்களின் புனிதத்தலமான பத்ரிநாத்துக்கும் சீக்கியர்களின் புனிதத்தலமான ஹெம்குந்த் சாஹிப் குருத்வாராவுக்கும்
பிரசித்தி பெற்ற அனைத்துலகப் பனிச்சறுக்குத் தலமான ஔலி ஆகியவற்றுக்கும் செல்லலாம்.
ஆனால் தற்போது அந்த
நகரம் மண்ணில் புதையுண்டு வருவதால் அங்குள்ள மக்கள் துயரில் ஆழ்ந்துள்ளனர்.
இந்நிலையில், ஜோஷிமத்தில் நிலவும் அபாயகரமான சூழல் குறித்து இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆய்வு நடத்தியுள்ளார்.
அங்குள்ள மக்கள் எதிர்கொள்ளும் சிரமத்துக்கு உடனடி யாகத் தீர்வுகாண்பது குறித்து அமைச்சர்கள், நிதின் கட்கரி, ஆர்.கே. சிங், புபேந்திரா யாதவ், கஜேந்திரா சிங் ஆகியோருடனும் உயர் அதிகாரிகளுடனும் அவர் அவசரக் கூட்டம் நடத்தியுள்ளார்.
இதுவரை ஜோஷிமத் நகரைச் சேர்ந்த 169 குடும்பங்களைச் சேர்ந்த 589 பேர் துயர்துடைப்பு மையங்களுக்கு அற்புறப்படுத்தப்
பட்டுள்ளனர்.
ஜோஷிமத்திலும் பிபல்கோட்டி யிலும் உள்ள துயர்துடைப்பு மையங்களில் 835 அறைகள் இருப்பதாகவும் அங்கு மொத்தம் 3,630 பேர் தங்கலாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதற்கிடையே, ஜோஷிமத் நகரம் மண்ணில் புதையுண்டு வருவது போல கிழக்கு, மேற்கு தொடர்ச்சிமலைகளிலும் நிகழக்கூடும் என்று புவியியல் நிபுணர்களும் விஞ்ஞானிகளும்
எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அங்கு மேற்கொள்ளப்படும் மேம்பாட்டுப் பணிகளை நிறுத்தாவிடில் அவ்விடங்களும் மண்ணில் புதைந்துவிடும் என்று அவர்கள் கவலை தெரிவித்தனர்.
அடிக்கடி நிகழும் நிலநடுக்கம், நிலச்சரிவுகள், வெள்ளம் ஆகியவற்றின் மூலம் கிழக்கு, மேற்குத் தொடர்ச்சிமலைகள் எச்சரிக்கை மணி ஒலித்து வருவதாகப் புவியியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.
இந்த எச்சரிக்கையை மத்திய அரசாங்கம், மாநில அரசாங்கங்கள், அப்பகுதியில் வாழ்பவர்கள் புறக்கணித்துவிடக்கூடாது என்று அவர்கள் வலியுறுத்துகின்றனர்.
சாலைகள், சொகுசு விடுதிகள் போன்றவற்றுக்கான கட்டுமானப் பணிகளுக்குத் தேவைப்படும் கற்களைப் பெறுவதற்காக கிழக்கு, மேற்குத் தொடர்ச்சி
மலைகளில் வெடிவைத்து தகர்க்கும் நடவடிக்கைகளை காலம் தாழ்த்தாமல் நிறுத்த வேண்டும் என்று அவர்கள் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர்.

