சீனாவின் கிராமப்புறங்களுக்கு கொவிட்-19 பரவக்கூடும்

சீனாவின் கிராமப்புறங்களுக்கு கொவிட்-19 பரவக்கூடும்

2 mins read

சீனா­வில் கொவிட்-19 பாதிப்பு உச்­ச­ம­டைந்­துள்­ளது. இந்த நிலை அடுத்த இரண்டு அல்­லது மூன்று மாதங்­க­ளுக்கு நீடிக்­கும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

ஆனால் அத்­து­டன் பிரச்­சினை தீர்ந்­து­வி­டாது என்­றும் சீனா­வின் கிரா­மப்­பு­றங்­க­ளுக்கு கொவிட்-19 கிருமி பர­வக்­கூ­டும் என்றும் சீனா­வின் நோய்க்

கட்­டுப்­பாடு, தடுப்பு மையத்­தின் முன்­னாள் தலைமை தொற்­று­நோய் நிபு­ணர் டாக்­டர் செங் குவாங் தெரி­வித்­தார்.

சீனக் கிரா­மங்­களில் மருத்­துவ வச­தி­கள் குறை­வாக இருப்­ப­தால் அங்கு கிரு­மிப் பர­வல் அதி­க­மா­னால் நிலைமை கட்­டுக்­க­டங்­கா­மல் போகக்­கூ­டும் என்று அவர் கவலை தெரி­வித்­தார்.

சீனா­வின் சீனப் புத்­தாண்டு விடு­முறை இம்­மா­தம் 21ஆம் தேதி­யன்று தொடங்­கு­கிறது.

அப்­போது மில்­லி­யன்­க­ணக்­

கா­னோர் தங்­கள் சொந்த ஊர்

­க­ளுக்­குத் திரும்­பு­வர் என்­றும் இந்­தப் பய­ணங்­கள் கார­ண­மாக மில்­லி­யன்­ க­ணக்­கா­னோ­ருக்­குக் கிரு­மித்­தொற்று ஏற்­படும் சாத்­தி­யம் அதி­கம் இருப்­ப­தாகவும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

கடந்த மூன்று ஆண்­டு­க­ளாக கொவிட்-19 அறவே இல்­லாத அணு­கு­மு­றையை சீனா இலக்­காக கொண்­டி­ருந்­தது.

இலக்கை எட்ட அது மிகக் கடு­மை­யான கட்­டுப்­பா­டு­களை விதித்­தது. இத­னால் சீன நாட்­ட­வர்­க­ளி­டையே கொந்­த­ளிப்பு ஏற்­பட்டு ஆர்ப்­பாட்­டங்­கள் ஆங்காங்கே வெடித்தன.

இதை­ய­டுத்து, சீனா கட்­டுப்­பா­டு­க­ளைத் தளர்த்தி அதன் எல்­லை­களை மீண்­டும் திறந்­தது.

திடீ­ரென்று கட்­டுப்­பா­டு­

க­ளைத் தளர்த்­தி­ய­தா­லும் சீனா­வில் பலர் இன்­னும் கொவிட்-19 தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ளா­த­

தா­லும் சீனா­வில் கொவிட்-19 கிருமி வேக­மா­கப் பரவி வரு­

வ­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இருப்­பி­னும், கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்­டோர், மாண்­டோர் எண்­ணிக்­கையை சீனா குறைத்­துக் காட்­டு­வ­தாக மேற்­கத்­திய நாடு­கள் குறை­கூ­று­

கின்­றன.

இதற்­குச் சீனா மறுப்பு தெரி­வித்து மேற்கத்­திய நாடு­க­ளின் இந்­தக் கருத்­துக்­குக் கடும்

கண்­ட­னம் தெரி­வித்­துள்­ளது.

கிரு­மித்­தொற்று கார­ண­மாக சீனா­வில் நிலைமை மோச­ம­டை­யும் என்று டாக்­டர் செங் கூறி­னார்.

"பெரிய நக­ரங்­களில் மட்­டுமே கிரு­மிப் பர­வல் நட­வ­டிக்­கை­கள் தொடர்­பா­க கவ­னம் செலுத்­தப்­

ப­டு­கிறது. கிரா­மங்­க­ளி­லும் கிரு­மிப் பர­வல் தடுப்பு நட­வ­டிக்­கை­களை முடுக்­கி­வி­டும் நேரம் வந்­து­விட்­டது," என்று அவர் தெரி­வித்­தார்.

சீனாவெங்கும் மருத்துவ சாதனங்கள், மருந்துகள் கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்து வருவதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.