சீனாவில் கடந்த 35 நாள்களில் கொவிட்-19 கிருமித்தொற்று சார்ந்த 60,000 மரணங்கள் பதிவாகியுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
சென்ற மாதம் 8ஆம் தேதி முதல் இம்மாதம் 12ஆம் தேதிவரை கொவிட்-19 தொற்றால் 59,938 பேர் மாண்டதாகத் தெரிவிக்கப்பட்டது. கிருமிப் பரவலும் அவசர சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கையும் உச்சம் அடைந்துவிட்டதாகவும் இருப்பினும் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையும் புதிதாக நோய்த்தொற்று உறுதிசெய்யப்படுவோரின் எண்ணிக்கையும் தொடர்ந்து குறைந்து வருவதாகவும் கூறப்பட்டது.

