நேப்பாளத்தில் விமானம் நொறுங்கியது: 68 பேர் பலி

நேப்பாளத்தில் விமானம் நொறுங்கியது: 68 பேர் பலி

2 mins read
8262cdfb-8f5d-4ddc-b046-dae42320e51a
-

தரையிறங்குவதற்கு முன்னர் பள்ளத்தாக்கு அருகே விழுந்து எரிந்தது

நேப்­பா­ளத்­தில் நேற்­று நிகழ்ந்த விமான விபத்­தில் இரவில் கிடைத்த கடைசி நில­வ­ரப்­படி 68 பேர் உயி­ரி­ழந்­து­விட்­ட­தாக அறி­விக்­கப்­பட்­டது.

'யெட்டி ஏர்­லைன்ஸ்' என்­னும் உள்­ளூர் விமான நிறு­வ­னத்­துக்­குச் சொந்­த­மான அந்­தப் பய­ணி­கள் விமா­னம் 72 பேரு­டன் தலை­ந­கர் காத்­மாண்­டு­வில் இருந்து புறப்­பட்­டுச் சென்­றது. இவர்­களில் 68 பேர் பய­ணி­கள்; நால்­வர் விமான ஊழி­யர்­கள்.

பொக்­காரா விமான நிலை­யத்­தில் தரை இறங்­கு­வ­தற்கு முன்­னர் அந்த விமா­னம் அப் பகு­தி­யின் ஆற்­றுப் பள்­ளத்­தாக்கு அருகே விழுந்து நொறுங்கி தீப்­பற்றி எரிந்த

தாகக் கூறப்­பட்­டது. ஓடுதளத் திலிருந்து விலகி விமானம் விபத்தில் சிக்கியதாக ஒரு தக வலும் வெளியானது.

வானிலை தெளி­வாக இருந்த நிலை­யி­லும் விமா­னம் விபத்­தில் சிக்­கி­யதாக நேப்­பாள விமா­னப் போக்­கு­வ­ரத்து ஆணை­யத்­தின் பேச்­சா­ளர் ஜெக­நாத் நிரோலா கூறி­னார்.

"30 உடல்­கள் மீட்­கப்­பட்டு மருத்­து­வ­ம­னை­க­ளுக்­குக் கொண்டு செல்­லப்­பட்­டு­விட்­டன. பெரும் பள்­ளத்­தி­னுள் மீட்க முடி­யாத அள­வுக்கு 14 உடல்­கள் விழுந்­துள்­ளன. பாரந்­தூக்­கி­கள் வர­வ­ழைக்­கப்­பட்டு மீட்பு முயற்­சி­கள் தொடங்­கப்­பட்டு உள்­ளன," என்று நேற்று பிற்­ப­க­லில் அவர் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் தெரி­வித்­தார்.

விமா­னம் சுக்­கு­நூ­றாக நொறுங்­கி­விட்­டது என்று ராணு­வப் பேச்­சா­ளர் கிருஷ்ண பண்­டாரி கூறி­யி­ருந்­தார். நொறுங்­கிய விமா­னத்­தின் பாகங்­களை மீட்­புப் பணி­யா­ளர்­கள் சேக­ரிப்­பதை உள்­ளூர் தொலைக்­காட்­சி­கள் காட்­டின. சம்­பவ இடத்­தில் எரிந்த பொருள்­களும் தீப்­பி­ழம்­பு­களும் காணப்­பட்­டன. விமா­னத்­தின் பாதி மட்­டுமே மலைப்­ப­கு­தி­யில் கிடந்­த­தாக உள்­ளூர்­வாசி ஒரு­வர் கூறி­னார்.

அந்த மலைப் பகு­தி­யில் நூற்­றுக்­கும் மேற்­பட்­ட­வர்­கள் மீட்­புப் பணி­களில் ஈடு­பட்­டி­ருந்­த­னர். விமா­னம் இன்­னும் எரிந்­து­கொண்டு இருப்­ப­தாக காவல்­துறை பேச்­சா­ளர் அஜய் கேசி முன்னதாக தொலைக்­காட்­சி­செய்தியில் கூறியிருந்தார்.

காலை 10.50 மணி­ய­ள­வில் ஆற்­றின் அருகே பறந்­த­போது விமான நிலை­யத்­து­டன் விமா­னம் தொடர்­பு­கொண்­ட­தா­க­வும் அதன் பின்­னர் அது விபத்­தில் சிக்­கி­ய­தா­க­வும் விமா­னப் போக்கு வ­ரத்து ஆணை­யம் தனது அறிக்­கை­யில் குறிப்­பிட்­டது.

இதற்­கி­டையே, விமா­னப் பய­ணி­களில் இரு குழந்­தை­கள் இருந்­த­தா­க­வும் பத்­துப் பேர் வெளி­நாட்­டி­னர் என்­றும் அவர்களில் ஐவர் இந்தியர் என்றும் விமான நிறு­வ­ன பேச்­சா­ளர் சுதர்­ஷன் பார்த்­தாவ்லா கூறி­னார்.

1992ஆம் ஆண்­டுக்­குப் பின்­னர் நேப்­பா­ளத்­தில் நிகழ்ந்­தி­ருக்­கும் ஆக மோச­மான விமான விபத்து இது என்று விமா­னப் போக்கு­வ­ரத்து பாது­காப்­புக் கட்­ட­மைப்­பின் தர­வு­கள் தெரி­வித்­தன. விபத்­துக்­கான கார­ணத்­தைக் கண்­ட­றிய ஐவர் கொண்ட விசா­ர­ணைக் குழு அமைக்­கப்­பட்டுள்­ளது. நேப்­பாள அரசு இன்று ஒரு நாள் துக்­கம் அறி­வித்துள்­ளது.