40 ஆண்டு காணாத வீழ்ச்சி; பாதாளத்தில் சீனப் பொருளியல்

40 ஆண்டு காணாத வீழ்ச்சி; பாதாளத்தில் சீனப் பொருளியல்

2 mins read

உல­கின் இரண்­டா­வது பெரிய பொரு­ளி­யல் நாடா­கக் கரு­தப்­படும் சீனா கடந்த ஆண்டு 40 ஆண்­டு­கள் காணாத சரி­வைச் சந்­தித்துள்ளதாக பொரு­ளி­யல் நிபு­ணர்­கள் கணித்து உள்­ள­னர்.

கொவிட்-19 கொள்­ளை­நோய், சொத்­துப் பிரச்­சி­னை­கள் ஆகிய இரண்­டும் சீனா­வின் பொரு­ளி­யல் வளர்ச்­சி­யைச் சிதைத்­து­விட்­ட­தாக பத்து பகுப்­பாய்­வா­ளர்­கள் தெரி­வித்து உள்­ள­னர்.

ஆண்­டுக்­காண்டு அடிப்­ப­டை­யி­லான மொத்த உள்­நாட்டு உற்­பத்தி (பொரு­ளி­யல்) 2022ஆம் ஆண்­டில் எதிர்­பார்த்­த­தை­வி­டக் குறை­வாக 2.7 விழுக்­காடு மட்­டுமே இருக்­கும் என்று அவர்­கள் முன்­னு­ரைத்து உள்­ள­னர்.

அதற்கு முந்­திய ஆண்­டான 2021ல் 8 விழுக்­காட்­டைத் தொட்ட வளர்ச்சி ஒரே ஆண்­டில் மிகப் பெரிய சரி­வைச் சந்­தித்துள்ள தாகக் கூறு­கின்­ற­னர் அவர்­கள்.

சீனா­வின் பொரு­ளி­யல் இதற்கு முன்­னர் 1976ஆம் ஆண்டு 1.6 விழுக்­காடு என்­னும் ஆகக் குறை­வான வளர்ச்­சி­யைச் சந்­தித்தது.

அப்­போ­தைய அதி­பர் மா சே துங் மர­ண­ம­டைந்­த­தைத் தொடர்ந்து இந்த வீழ்ச்சி ஏற்­பட்­டது.

அதற்­குப் பின்­னர் கடந்த ஆண்­டு­தான் அப்­ப­டி­யொரு அத­ல­பா­தாள வீழ்ச்­சியை சீனா சந்­தித்ததாக பத்து பகுப்­பாய்­வா­ளர்­களும் ஒன்­றா­கக் கணித்­துள்­ள­னர்.

இந்­தக் கணக்­கில் கொவிட்-19 கொள்­ளை­நோய் மிகுந்­தி­ருந்த 2020ஆம் ஆண்டு சேர்க்­கப்­ப­ட­வில்லை.

பெய்­ஜிங் 2022ஆம் ஆண்­டுக்­கான பொரு­ளி­யல் வளர்ச்சி 5.5 விழுக்­காட்­டைத் தொட­வேண்­டும் என்று இலக்கு நிர்­ண­யித்து இருந்­தது. இருப்­பி­னும் பகுப்­பாய்­வா­ளர்­கள் முன்­னு­ரைத்து உள்ள வளர்ச்சி கிட்­டத்­தட்ட இதில் பாதி­ய­ள­வு­தான்.

கொவிட்-19 கொள்­ளை­நோய் அறவே இருக்­கக்­கூ­டாது என்­னும் சீனா­வின் அணு­கு­முறை வளர்ச்­சி­யைப் பெரி­தும் பாதித்­த­தா­கக் கரு­தப்­ப­டு­கிறது. முக்­கி­ய­மாக, உற்­பத்தி செயல்­பா­டு­களும் பொது­மக்­க­ளின் பய­னீ­டும் இந்த அணு­கு­மு­றை­யால் முடங்­கிப் போயின.

கடு­மை­யான முடக்­க­நிலை, தனிமை உத்­த­ரவு, கட்­டா­யப் பரி­சோ­தனை போன்­றவை உற்­பத்­தித் தொழிற்­சா­லை­கள் பல மூடப்­ப­டு­வ­தற்­கும் ஸெங்ஸோ போன்ற பெரும் வர்த்­தக மையங்­கள் முடங்­கு­வ­தற்­கும் கார­ணங்­

க­ளாக அமைந்­தன.

உல­கின் ஆகப்­பெ­ரிய ஐஃபோன் கைபேசித் தயா­ரிப்­புத் தொழிற்­சாலை ஸெங்ஸோ நக­ரில்தான் உள்­ளது.