இதற்கிடையே, கொவிட்-19 தொற்று நிலவரம் தொடர்பான கூடுதல் தகவல்களை வெளி
யிடுமாறு சீனாவை உலக சுகாதார நிறுவனம் கேட்டுக்கொண்டு உள்ளது. டிசம்பர் முதல் வாரம் தொடங்கி ஒரு மாத காலத்தில் கிட்டத்தட்ட 60,000 பேர் உயிரிழந்துவிட்டதாக சீன அரசாங்கம் அறிவித்ததைத் தொடர்ந்து இந்த அமைப்பு இவ்வாறு வலியுறுத்தி உள்ளது.
தொற்று நிலவரம் குறித்த உண்மை நிலவரத்தை உலகுக்குச் சொல்ல சீனா மறுப்பதாக கடந்த சில வாரங்களாக புகார்கள் கூறப்பட்டு வந்த நிலையில் சீனா கொவிட்-19 மரண எண்ணிக்கையை அறிவித்து உள்ளது.
2022 டிசம்பர் 8ஆம் தேதிக்கும் இந்த மாதம் 12ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலத்தில் 5,503 பேர் கொவிட்-19 தொற்றால் மூச்சுத்திணறி இறந்ததாகவும் 54,435 பேர் இதய நோய், புற்றுநோய் மற்றும் கொவிட்-19 தொற்றுடன் தொடர்புடைய இணை நோய்கள் காரணமாக உயிரிழந்ததாகவும் சீனா நேற்று முன்தினம் அதிகாரபூர்வமாக அறிவித்தது.
இதனை உடனடியாக வரவேற்று அறிக்கை வெளியிட்ட உலக சுகாதார நிறுவனம், இந்த அறிவிப்பால் கொவிட்-19 நில
வரத்தை சிறந்த முறையில் புரிந்துகொள்ள முடிகிறது என்றது.
நிறுவனத்தின் தலைமை இயக்குநர் டெட்ரோஸ் அதனோம் சீனாவின் தேசிய சுகாதார ஆணையர் டாக்டர் மா ஸியாவெய்யுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியதாகவும் தொற்று நிலவரம் தொடர்பாக கூடுதல் விவரங்களை சீனா வெளியிட வேண்டும் என அப்போது அவரிடம் திரு டெட்ரோஸ் வலியுறுத்தியதாகவும் அறிக்கை கூறியது.
தான் வெளியிட்டிருக்கும் மரண எண்ணிக்கை மருத்துவ
மனைகளின் கணக்கெடுப்பு மட்டுமே என்றும் வீட்டில் உயிரிழந்தோரின் விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை என்றும் சீன சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது. எல்லா பாதிப்புகளை யும் உள்ளடக்கிய முழுவிவரம் எப்போது வெளியிடப்படும் என்று அது தெரிவிக்கவில்லை.

