உழவுத்தொழிலுக்கு உற்ற தோழனாய் விளங்கும் கால்நடைகளைச் சிறப்பிக்கும் வகையில், மாட்டுப் பொங்கல் நேற்று லிட்டில் இந்தியாவில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. திறந்தவெளியில் மாடுகளைக் காண ஏராளமான மக்கள் திரண்டனர். மாடுகளுக்குப் பட்டாடை அணிவித்து, மலர்மாலை சூட்டி, மஞ்சள் குங்குமம் இட்டு அழகுபடுத்தப்பட்டது. மாட்டுக்கு சர்க்கரைப் பொங்கலும் வெண் பொங்கலும் ஊட்டுகிறார் ஜோதி புஷ்பக்கடை உரிமையாளர் ராஜ்குமார் சந்திரா (வலது).
செய்தி, படம்:
அனுஷா செல்வமணி

