மக்களின் அடிப்படைத் தேவைகளுக்கு உதவிக்கரம்

மக்களின் அடிப்படைத் தேவைகளுக்கு உதவிக்கரம்

3 mins read

பொரு­ளி­யல் வளர்ச்­சி­யில் ஏற்­படும் இடை­யூ­று­கள், நிலை­

யற்­ற­தன்மை ஆகி­ய­வற்­றால் ஓய்வு­க்கா­லத்­துக்­காக சேமிப்­பது சவால்­மிக்­க­தாகி வரு­கிறது.

இருப்­பி­னும், சிங்­கப்­பூ­ரர்­கள் வேலை செய்து தங்­கள் மத்­திய சேம­நிதி கணக்­கில் அடிக்­கடி பணம் நிரப்­பி­னால் போதும், அவர்­க­ளது அடிப்­படை ஓய்­வுக்­கா­லத் தேவை­க­ளைப் பூர்த்தி செய்­து­வி­ட­லாம் என்று துணைப் பிர­த­ம­ரும் நிதி அமைச்­ச­ரு­மான லாரன்ஸ் வோங் நேற்று தெரி­வித்­தார்.

வேலை செய்ய முடி­யா­த­வர்­க­ளுக்கும் மத்­திய சேம­நிதி கணக்­கில் பணம் நிரப்பி சேமிக்க முடி­யா­த­வர்­க­ளுக்கும் உதவ அர­சாங்­கம் வழி­வ­கை­

க­ளை ஆராய்ந்து வருவதாக அவர் குறிப்­பிட்­டார்.

கொள்கை ஆய்­வுக் கழ­கத்­தின் ஏற்­பாட்டில் நடை­பெற்ற சிங்­கப்­பூர் பெர்ஸ்­பெக்­டிவ் மாநாட்­டின் கடைசி நாளான நேற்று திரு வோங் உரை­யாற்­றி­னார். இந்த மாநாடு, வேலை என்ற கருப்­பொ­ரு­ளு­டன் மரினா சேண்ட்ஸ் கண்­காட்சி, மாநாட்டு மையத்­தில் நடை­பெற்­றது.

சிங்­கப்­பூர் ஊழி­ய­ரணியும் தொழி­லா­ளர் சந்தையும் எதிர்­கொள்­ளும் சவால்­களை திரு வோங் முன்வைத்தார்.

தொழில்­து­றை­களில் மாற்­றங்­க­ளைக் கொண்டு வரும் தொழில்­நுட்ப மேம்­பா­டு­களை அவர் உதா­ர­ணம் காட்­டி­னார்.

இத்­த­கைய மாற்­றங்­கள் அனை­வ­ருக்­கும் சம­மான பலனைத் தராது என்­றார் அவர். தகுந்த, தேவை­யான திறன்

­க­ளைக் கொண்­டி­ருப்­ப­வர்­கள் கிடைக்­கும் வாய்ப்­பு­க­ளை நன்கு பயன்­ப­டுத்­திக்­கொள்­வர் என்று திரு வோங் தெரி­வித்­தார்.

சில­ரால் மாற்­றங்­க­ளைச் சமா­ளிக்க முடி­யாது என்­றும் இதன் விளை­வாக அவர்­கள் பதற்­றம் அடை­யக்­கூ­டும் என்­றும் அவர் கூறி­னார்.

குறிப்­பாக, மூத்த, பணி­

யி­டைக்­கால ஊழி­யர்­கள் ஆகி­யோ­ருக்கு இந்­நிலை ஏற்­ப­டக்­கூ­டும் என்­றார் அவர்.

மத்­திய சேம­நிதி கடந்த பல ஆண்­டு­க­ளாக வளர்ச்­சி கண்டு மாறி­யி­ருப்­பதை திரு வோங் சுட்­டி­னார்.

சம்­பா­திக்­க­வும் ஒய்­வுக்

­கா­லத்­துக்­கா­கக் கூடு­தல் பணம் சேமிக்­க­வும் சிங்­கப்­பூ­ரர்­க­ளுக்கு உத­வும் வகை­யில் அண்மை ஆண்­டு­களில் அர­சாங்­கம் கூடு­தலாகப் பங்­க­ளித்து வருவதாக அவர் கூறி­னார்.

உதா­ர­ணத்­துக்கு, மத்­திய சேம­நிதிக் கணக்­கில் குறை­வான தொகை வைத்­தி­ருப்­ப­வர்­

க­ளுக்குக் கூடு­தல் வட்டி தரப்­

ப­டு­­கிறது. குறைந்த வரு­மான ஊழி­யர்­க­ளுக்கு வேலை நலத் திட்­டம், படிப்­ப­டி­யாக உயர்த்­தப்­படும் சம்­ப­ளத் திட்­டம் மூலம் ஊதி­யம் உயர்த்­தப்­பட்­டுள்­ளது.

இருப்­பி­னும், சிலர் இன்­னும் சிரமப்­ப­டு­வ­தா­கத் தெரி­விக்­கப்­

ப­டு­கிறது. 50 வய­துக்­கும் 60 வய­துக்­கும் இடைப்­பட்­ட­வர்­கள், 60 வய­துக்­குக்­கும் 65 வய­துக்­கும் இடைப்­பட்­ட­வர்­களில் சிலர் ஏதோ ஒரு கார­ணத்­தி­னால் இயல்­பான வேலை முறை­யைக் கடைப்­பி­டிக்க முடி­யாத சூழ்­நிலை ஏற்­ப­டு­கிறது.

இத­னால் அவர்­க­ளால் தங்­கள் மத்­திய சேம­நிதி கணக்­கில் பணம் சேமித்து பல­ன­டைய முடி­வ­தில்லை.

இத்­த­கை­யோ­ரின் அடிப்­படை ஓய்­வுக்கா­லத் தேவை­களைப் பூர்த்தி செய்ய எவ்­வாறு உத­வ­லாம் என்­பது குறித்து அர­சாங்­கம் ஆராய்ந்து வரு­வ­தாக திரு வோங் தெரி­வித்­தார்.

விநி­யோ­கத் தள ஊழி­யர்­கள், உடற்­கு­றை­யுள்­ளோர், உடற்­கு­றை­யுள்­ளோ­ரைப் பரா­ம­ரிப்­

பவர்கள் ஆகி­யோ­ரின் நல­னில் அர­சாங்­கம் தொடர்ந்து அக்­கறை செலுத்­தும் என்று உறுதி அளிக்­கப்­பட்­டது.

ஊழி­ய­ர­ணி­யில் புதி­தா­கச் சேரு­ப­வர்­களும் இளம் ஊழி­யர்­களும் ஓய்­வு­பெற இன்­னும் பல ஆண்­டு­கள் இருப்­ப­தால் தொடர்ந்து வேலை செய்­வ­தை­யும் திறன்­களை மேம்­ப­டுத்­திக்­கொள்­வ­தை­யும் அவர்­கள் இலக்­கா­கக் கொண்­டி­ருக்க வேண்­டும் என்று திரு வோங் வலி­யு­றுத்­தி­னார்.

திறன்­கள், மனி­த­வ­ளம் ஆகிய­வற்­றில் முத­லீடு செய்வது குறித்து அர­சாங்­கம் பரி­சீலித்து வரு­வ­தா­க­வும் தெரி­விக்­கப்­

பட்­டுள்­ள­து.

சிங்­கப்­பூ­ரர்­கள் வாழ்­வில் செழித்­தோங்க வேலை முக்­கிய இடம் வகிப்­பது உறுதி செய்­யப்­படும். திறன்­கள், பயிற்சி ஆகி­ய­வற்றை எவ்­வாறு வலுப்­

ப­டுத்­து­வது என்­பது குறித்து மிகுந்த கவ­னத்­து­டன்

பரி­சீ­லிக்க வேண்­டும் என்று திரு வோங் தெரி­வித்­தார்.