'பணவீக்கம் குறையும் என சிங்கப்பூரர்கள் நம்புகின்றனர்'

'பணவீக்கம் குறையும் என சிங்கப்பூரர்கள் நம்புகின்றனர்'

2 mins read
ae2d09c1-4da3-42ab-a9b4-fa74c64d5eaf
இம்­முறை பண­வீக்க எதிர்­பார்ப்பு குறைந்­துள்­ள­போ­தி­லும் 2011ஆம் ஆண்­டை­விட அதி­க­மாக இருக்­கிறது என்று டிபி­எஸ் வங்­கி­யும் சிங்­கப்­பூர் நிர்­வா­கப் பல்­க­லைக்­க­ழ­க­மும் இணைந்து வெளி­யிட்ட சின்­டெக்ஸ் ஆய்வு அறிக்­கை­யில் தெரி­ய­வந்­துள்­ளது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்­கப்­பூ­ரில் பண­வீக்­கம் உச்­ச­ம் அடைந்­து­விட்­ட­தா­க­வும் அடுத்த ஓராண்­டில் அது குறை­யும் என்­றும் சிங்­கப்­பூ­ரர்­கள் நம்­பு­வ­தாக ஆய்வு தெரி­விக்­கிறது. இதற்குப் பொரு­ளி­யல் வளர்ச்சி மெது­

வ­டைந்­தி­ருப்­ப­தும் அதி­க­ரிக்­கும் வட்டி விகி­தங்­களும் கார­ணம் என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இவ்­வாண்­டுக்­கான பண­வீக்க எதிர்­பார்ப்பு கடந்த மாதம் 3.8 விழுக்­காடு குறைந்­தது. கடந்த ஆண்டு செப்­டம்­பர் மாதத்­தில் அது 11 ஆண்­டு­கள் இல்­லாத அள­வில் அதி­க­மாக இருந்­த­தாக (4.6%) சிங்­கப்­பூர் பண­வீக்க எதிர்­பார்ப்பு குறி­யீட்­டின் (சின்­டெக்ஸ்) ஆக அண்­மைய காலாண்டு அறிக்­கை­யில் குறிப்­பி­டப்­

பட்­டுள்­ளது.

பண­வீக்­கம் 3.2 விழுக்­கா­டாக இருக்­கும் என்று சிங்­கப்­பூ­ரர்­கள் நம்­பி­ய­தாக 2011ஆம் ஆண்­டில் நடத்­தப்­பட்ட ஆய்­வில் தெரி­ய­வந்­தது. இம்­முறை பண­வீக்க எதிர்­பார்ப்பு குறைந்­துள்­ள­போ­தி­லும் 2011ஆம் ஆண்­டை­விட அதி­க­மாக இருக்­கிறது என்று டிபி­எஸ் வங்­கி­யும் சிங்­கப்­பூர் நிர்­வா­கப் பல்­க­லைக்­க­ழ­க­மும் இணைந்து வெளி­யிட்ட சின்­டெக்ஸ் ஆய்வு அறிக்­கை­யில் தெரி­ய­வந்­துள்­ளது.

இருப்­பி­னும், சிங்­கப்­பூர் நாணய ஆணை­யத்­தின் இவ்­வாண்­டுக்­கான பண­வீக்க முன்­னு­ரைப்­பை­விட சின்­டெக்ஸ் காட்­டும் விகி­தம் குறை­வாக உள்­ளது.

பண­வீக்­கம் இவ்­வாண்டு 5.5 விழுக்­காட்­டுக்­கும் 6.5 விழுக்­காட்­டுக்­கும் இடைப்­பட்டு இருக்­கும் என்று ஆணை­யம் நம்­பு­கிறது. இது அனைத்து அம்­சங்­

க­ளையும் கருத்­தில் கொண்டு முன்­வைக்­கப்­பட்­டுள்ள முன்­

னு­ரைப்பு. இதில் இவ்­வாண்­டி­

லி­ருந்து நடை­மு­றைப்­ப­டுத்­தப்­படும் பொருள், சேவை வரி அதி­க­ரிப்­பும் அடங்­கும்.

பொருள், சேவை வரி அதி­

க­ரிப்­பால் ஏற்­படும் மாற்­றங்­

க­ளைச் சேர்த்­துக்­கொள்­ளா­மல் பண­வீக்­கம் 4.5 விழுக்­காட்­டி­

லி­ருந்து 5.5 விழுக்­கா­டாக இருக்­கும் என்று ஆணை­யம் எதிர்­பார்க்­கிறது. உல­க­ளா­விய உண­வுப்­பொ­ருள்­களும் எரி­சக்தி விலை­களும் கடந்த ஆண்டு உச்­சம் எட்டி தற்­போது குறைந்து வரு­கிறது. அதைப்­போ­லவே பண­வீக்க எதிர்­பார்ப்­பும் குறை­கிறது.

சிங்­கப்­பூ­ரின் பண­வீக்­கம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7.5 விழுக்­காடு பதி­வாகி உச்­சம் எட்­டி­யது.

கடந்த ஆண்டு நவம்­பர் மாதத்­தில் பண­வீக்­கம் 6.7 விழுக்­கா­டா­கப் பதி­வா­னது என்று சிங்­கப்­பூர் நாணய ஆணை­ய­மும் வர்த்­தக, தொழில் அமைச்­சும் தெரி­வித்­தன.

"பிற நாடு­களில் இருக்­கும் பண­வீக்க எதிர்­பார்ப்­புக்கு இணங்க சிங்­கப்­பூ­ரி­லும் கடந்த ஆண்­டின் மூன்­றா­வது காலாண்­டுக்­கும் நான்­கா­வது காலாண்­டுக்­கும் இடைப்­பட்ட கால­கட்­டத்­தில் பண­வீக்க எதிர்­பார்ப்பு குறைந்­தது," என்று சிங்­கப்­பூர் நிர்­வா­கப் பல்­க­லைக்­க­ழ­கத்­தின் சிம் கீ பூன் நிதிப் பொரு­ளி­யல் கழ­கத்­தைச் சேர்ந்த பேரா­சி­ரி­யர் டேவ் ஃபெர்னாண்­டஸ் தெரி­வித்­தார்.

ஆஸ்­தி­ரே­லி­யா­வில் பண­வீக்க எதிர்­பார்ப்பு 6.3 விழுக்­காட்­டி­

லி­ருந்து 5.2 விழுக்­கா­டா­கக் குறைந்­தி­ருப்­ப­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது.