நேப்பாள விமான விபத்து: உறையவைக்கும் காணொளி

நேப்பாள விமான விபத்து: உறையவைக்கும் காணொளி

2 mins read

நேப்­பா­ளத்­தில் கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை காலை நடு­வா­னில் வெடித்­துச் சித­றிய விமா­னத்­தில் இருந்த பய­ணி­கள், சிப்­பந்­தி­கள் அனை­வ­ரும் உயி­ரி­ழந்­தி­ருக்­கக்­கூ­டும் என்று அந்­நாட்டு அதி­

கா­ரி­கள் தெரி­வித்­துள்­ள­னர்.

எவ­ரும் உயிர் பிழைத்­தி­ருக்க முடி­யாது என்று அஞ்­சப்­ப­டு­கிறது. இருப்­பி­னும், தேடு­தல் பணி தொடர்­கிறது. உருத் தெரி­யா­மல் அழிந்த யெட்டி ஏர்­லைன்ஸ் விமா­னம் விழுந்து நொறுங்­கி­ய­போது அதில் 72 பேர் இருந்­த­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது.

நேற்று மாலை நில­வ­ரப்­படி 68 பேர் மாண்­டு­விட்­ட­தாக சில ஊட­கங்­கள் தெரி­வித்­தன.

300 மீட்­டர் ஆழ­முள்ள பள்­ளத்­தாக்­கி­லி­ருந்து சட­லங்­களை மீட்க நேப்­பாள ராணுவ வீரர்­கள்

கயி­று­க­ளை­யும் தூக்­குப் படுக்­கை­க­ளை­யும் பயன்­ப­டுத்­தி­னர்.

மீட்­புப் பணி­கள் இடை­வி­டாது நடைபெறுவதாக நேப்­பாள அதி­கா­ரி­கள் கூறி­னர்.

இருப்­பி­னும், நேரம் ஆக ஆக உயிர் பிழைத்­தோ­ரைத் தேடும் நம்­பிக்கை குறைந்து வரு­வ­தாக அவர்­கள் தெரிவித்தனர்.

1992ஆம் ஆண்­டுக்­குப் பிறகு இதுவே நேப்­பா­ளத்­தில் நிகழ்ந்த ஆக மோச­மான விமா­னப் பேரி­டர் என்று தெரி­விக்­கப்­பட்­டது.

அந்த விமா­னம் கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை காலை பொக்­காரா நகரை நெருங்­கி­ய­போது அதில் திடீ­ரென்று வெடிப்பு ஏற்­பட்­ட­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது.

காணொ­ளி­ காட்டும் பயங்­க­ரம்

அதற்கு முன்பு விமா­னத்­தில் பய­ணம் செய்­து­கொண்­டி­ருந்த இந்­தி­யா­வின் உத்­த­ரப் பிர­தே­சத்­தைச் சேர்ந்த நான்கு இளை­யர்­கள் ஃபேஸ்புக்­கில் நேரடி ஒளி

­ப­ரப்பு செய்­து­கொண்­டி­ருந்­த­னர்.

அப்­போது அவர்­கள் எடுத்த காணொ­ளி­யில் பதி­வான காட்­சி­கள் பார்ப்­ப­வ­ரின் மனதை உறைய­ வைத்­துள்­ளன.

நால்வரும் சிரித்­துப் பேசிக்­கொண்­டி­ருந்­ததைக் காணொ­ளி­யில் காண முடிந்­தது.

சன்­னல் ஓர­மாக அமர்ந்­தி­ருந்த ஒரு­வர் காணொளி எடுத்­துக்­கொண்­டி­ருந்­தார். அப்­போது யாரும் எதிர்­பா­ராத வகை­யில் வெடிப்பு ஏற்­பட்­டது.

கண்­ணி­மைக்­கும் நேரத்­தில் விமா­னம் தீப்­பி­டித்­துக்­கொண்­டது. அதில் இருந்­தோ­ரின் அல­றல் சத்­தத்தை அந்­தக் காணொ­ளி­யில் தெளி­வா­கக் கேட்க முடிந்­தது.

இதற்­கி­டையே, விமா­னத்­தின் கருப்­புப் பெட்டி மீட்­கப்­பட்­டு­விட்­ட­தா­க­வும் இந்­தத் துய­ரச் சம்­ப­வத்­துக்­கான கார­ணத்­தைக் கண்­ட­றிய தீவிர விசா­ரணை மேற்­கொள்­ளப்­படும் என்­றும் அதி­காரி­கள் உறுதி அளித்­துள்­ள­னர்.

மாண்­டோ­ருக்கு மரி­யாதை செலுத்­தும் வகை­யில் நேப்­பா­ளத்­தில் நேற்று ஒரு­நாள் துக்­கம் அனு­ச­ரிக்­கப்­பட்­டது.

2006ல் கணவர் பலி, 2023ல் மனைவி பலி

2006ஆம் ஆண்­டில் யெட்டி ஏர்­லைன்ஸ் விமா­னம் நேப்­பா­ளத்­தில் விழுந்து நொறுங்­கி­யது. விபத்தில் அதன் விமானி தீபக் பொக்­ரேல் மாண்­டார். நான்கு ஆண்­டு­கள் கழித்து, அவ­ரது மனை­வி­யான திருவாட்டி அஞ்சு கட்­டி­வாடா (படம்) நேப்பா­ளத்­தின் உள்­நாட்டு விமானச் சேவை­யான அதே யெட்டி ஏர்­லைன்­ஸில் விமா­னி­யாகச் சேர்ந்­தார்.

கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை நடு­வா­னில் வெடித்­துச் சிதறி விழுந்து நொறுங்­கிய விமா­னத்­தின் விமானி இவரே. கண­வர் இறந்து 16 ஆண்­டு­கள் கழித்து, அவ­ரைப் போலவே நேப்­பா­ளத்­தில் நிகழ்ந்த யெட்டி ஏர்­லைன்ஸ் விமான விபத்தில் திரு­வாட்டி கட்­டி­வா­டா­வும் உயி­ரி­ழந்­து­விட்­டார்.

கண­வர் இறந்­ததை அடுத்து, தமக்­குக் கிடைத்த காப்புறுதிப் பணத்­தைக் கொண்டு அவர் விமா­னம் ஓட்­டக் கற்றுக்­கொண்டு விமா­னி­யா­ன­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது.