மலேசியாவில் இரு நாள்களுக்கு சாலைக் கட்டணம் இல்லை

மலேசியாவில் இரு நாள்களுக்கு சாலைக் கட்டணம் இல்லை

1 mins read
cf919e99-c572-401a-bb68-a5ef008a6c4a
சீனப் புத்தாண்டை முன்னிட்டு அனைத்து வகை வாகனங்களுக்கும் மலேசியாவில் சாலைக் கட்டண விலக்கு அளிக்கப்பட உள்ளதாக மலேசிய பிரதமர் அன்வார் இப்ராகிம் அறிவித்துள்ளார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சீனப் புத்தாண்டை முன்னிட்டு அனைத்து வகை வாகனங்களுக்கும் மலேசியாவில் சாலைக் கட்டண விலக்கு அளிக்கப்பட உள்ளதாக மலேசிய பிரதமர் அன்வார் இப்ராகிம் அறிவித்துள்ளார். நாளை தொடங்கி சனிக்கிழமை வரை இந்த விலக்கு அளிக்கப்படும் என்றார் அவர்.

கட்டண விலக்கால் அரசாங்கத்திற்குக் கிட்டத்தட்ட 40 மில்லியன் ரிங்கிட் இழப்பு ஏற்படும் என்றும் கூறப்பட்டது. இந்த வார இறுதி தொடங்கி நாட்டின் அனைத்து நெடுஞ்சாலைகளிலும் சுமார் 3.8 மில்லியன் வாகனங்கள் செல்லும் என எதிர்பார்ப்பதாக அண்மையில் மலேசிய பொதுப்பணித்துறை அமைச்சர் அலெக்சாண்டர் நந்தா லிங்கி கூறியிருந்தார்.

இந்நிலையில், சீனப் புத்தாண்டு விடுமுறைக் காலத்தில் இரண்டு மில்லியன் வாகனங்கள் ஜோகூருக்குள் வந்து போவதை எதிர்பார்க்கலாம் என்று ஜோகூர் சாலைப் போக்குவரத்துத் துறையின் துணை இயக்குநர் நேற்று தெரிவித்தார். சாலைப் பாதுகாப்பை உறுதிப்படுத்த அமலாக்க முயற்சிகள் முடுக்கிவிடப்படும் என்றும் அவர் கூறினார்.