'சீனப் புத்தாண்டு காலத்தில் ஒரே நாளில் 36,000 கொவிட்-19 மரணங்கள் நேரலாம்'

'சீனப் புத்தாண்டு காலத்தில் ஒரே நாளில் 36,000 கொவிட்-19 மரணங்கள் நேரலாம்'

2 mins read
32e45bd2-7ac8-464e-8c88-dc5f83b19708
சீனா­வில் கொள்­ளை­நோய் தாக்­கம், வரும் நாட்­க­ளி­லேயே மர­ணத்­திற்கு வழி செய்­யும் ஆகக் கொடி­ய­தாக இருக்­கும் என்று கூறப்­ப­டு­கிறது. படம்: ராய்ட்டர்ஸ் -

சீனப் புத்­தாண்டு விடு­மு­றைக் காலத்­தில் நாளுக்கு சுமார் 36,000 பேர் சீனா­வில் கொவிட்-19 கிரு­மித்­தொற்­றால் உயி­ரிழக்­கக்­கூ­டும் என்று முன்­னு­ரைக்­கப்­பட்­டு உள்­ளது.

சீனா­வில் கொள்­ளை­நோய் தாக்­கம், வரும் நாட்­க­ளி­லேயே மர­ணத்­திற்கு வழி செய்­யும் ஆகக் கொடி­ய­தாக இருக்­கும் என்று கூறப்­ப­டு­கிறது.

கடந்­தாண்டு டிசம்­பர் 29ஆம் தேதி­அன்று வெளி­யி­டப்­பட்ட அதன் முன்­னுரைப்பை 'ஏர்­ஃபி­னிட்டி' என்ற சுயேச்சை முன்­னு­ரைப்பு நிறு­வ­னம் மாற்­றி­யதை அடுத்து இந்­தத் தக­வல் வெளி­வந்­துள்­ளது.

கொவிட்-19 கொள்­ளை­நோய் அதிர்ச்சி­ய­ளிக்­கும் வேகத்­தில் பரவி வரு­வ­து­டன் மக்­கள்­தொகை அதி­க­முள்ள நாடான சீனா­வில் கிரு­மிப் பர­வல் நிலை குறித்த தெளி­வான தக­வல்­கள் இல்­லா­த­தால் இந்த முன்­னு­ரைப்பு வந்­துள்­ளது.

சீனப் புத்­தாண்டை முன்­னிட்டு மில்­லி­யன் கணக்­கான மக்­கள் தங்­க­ளின் குடும்­பங்­க­ளு­டன் இணை­வ­தற்­குப் பய­ணம் மேற்­கொண்டு வரும் நிலை­யில் கிரு­மிப் பர­வ­லும் அதி­க­ரிக்­க­லாம் என்­ப­தால் சீனா 'நீண்­ட­தொரு, மேலும் கடு­மை­யான கொவிட்-19 அலை'யைச் சந்­திக்­க­லாம் என்று முன்­னு­ரைக்­கப்­ப­டு­கிறது.

"அடுத்த இரண்டு வாரங்­க­ளுக்கு சீனா­வின் சுகா­தா­ரப் பரா­ம­ரிப்­புக் கட்­டமைப்­பின் மீது கணி­ச­மான சுமை ஏற்­படும் என்று எங்­க­ளின் முன்­னு­ரைப்பு கூறு­கிறது," என்­றார் 'ஏர்­ஃபி­னிட்டி'யின் பகுப்­பாய்வு இயக்­கு­நர் டாக்­டர் மேட் லின்லி.

சிகிச்­சை­யின் மூலம் குண­ம­டை­யக்­கூ­டிய நோயா­ளி­களும் கூட்­டம் நிரம்பி வழி­யும் மருத்­து­வ­ம­னை­க­ளா­லும் பரா­மரிப்­பின்­மை­யா­லும் உயி­ரி­ழக்­கக்­கூ­டும் என்­றார் அவர்.

சீனா­வின் ஒரு சில மாநிலங்­களில் கிரு­மித்­தொற்­றுச் சம்­ப­வங்­க­ளின் எண்­ணிக்கை உச்­சத்தை எட்­டி­யி­ருக்­க­லாம் என்ற அறிக்­கை­க­ளைக் கருத்­தில் கொண்டு இந்த முன்­னு­ரைப்பு வெளி­யிடப்­பட்­டுள்­ளது.

கடந்த மாதத்­தி­லி­ருந்து இது­வ­ரை­யில் சீனா­வில் ஏற்­பட்­டுள்ள கொவிட்-19 மரண எண்­ணிக்கை 608,000 ஆக இருக்­க­லாம் என்று 'ஏர்­ஃபி­னிட்டி' மதிப்­பி­டு­கிறது.

இதற்­கி­டையே, சீனப் புத்­தாண்டு காலத்­தில் 2.1 பில்­லி­யன் பேர் பய­ணம் மேற்­கொள்­வர் என்று சீன அர­சாங்­கம் கணித்­துள்­ளது. இது 2022ஆம் ஆண்­டைக் காட்­டி­லும் இரு­ம­டங்கு அதி­கம் என்­றும் கூறப்­ப­டு­கிறது.