'டத்தோ' பட்டம் விற்கப்பட்ட விவகாரம்; 29 பெயர்களை வெளியிட்ட பாஹாங் அரசு

'டத்தோ' பட்டம் விற்கப்பட்ட விவகாரம்; 29 பெயர்களை வெளியிட்ட பாஹாங் அரசு

2 mins read
7bdd9157-761c-4468-a8e7-cafedc0874cd
பாஹாங் சுல்­தா­னி­ட­மி­ருந்து பெறப்­படும் 'டத்தோ', 'டத்­தோஸ்ரீ' பட்­டம் பெற்­ற­வர்­க­ளின் பட்­டி­யலை சிலர் திருத்தி மோசடி செய்­துள்­ள­னர். படம்: பிக்ஸாபே -

மலே­சி­யா­வின் பாஹாங் மாநில சுல்­தா­னி­ட­மி­ருந்து மதிப்­பிற்­கு­ரிய பதக்­கம் பெற்­ற­வர்­க­ளின் பட்­டி­ய­லில் 29 பேர் போலி­யாக இடம் பெற்­றுள்­ள­னர்.

இந்த அதிர்ச்சி தரும் தக­வலை பாஹாங் அர­சாங்­கம் வெளி­யிட்­டுள்­ளது.

பொது எச்­ச­ரிக்­கை­யாக 29 பெயர்­களை வெளி­யிட்­டுள்ள அந்த அர­சாங்­கம் இதற்கு கார­ண­மா­ன­வர்­கள் மீது தகுந்த நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் எனக் கூறி­யுள்­ளது.

பாஹாங் சுல்­தா­னி­ட­மி­ருந்து பெறப்­படும் 'டத்தோ', 'டத்­தோஸ்ரீ' பட்­டம் பெற்­ற­வர்­க­ளின் பட்­டி­யலை சிலர் திருத்தி மோசடி செய்­துள்­ள­னர். இதை­ய­டுத்து பாஹாங் அர­சாங்­கத்­தின் அதி­கா­ர­பூர்வ ஃபேஸ்புக் பக்­கத்­தில் போலி­யாக இடம்­பெற்­ற­வர்­க­ளின் பெயர்­களை அம்­மா­நில அர­சாங்க தலை­மைச் செய­லா­ளர் டாக்­டர் சாலே­ஹு­யு­டின் இஷாக் பகி­ரங்­க­மாக வெளி­யிட்­டுள்­ளார்.

கடந்த ஆண்டு டிசம்­பர் 28ஆம் தேதி இணை­யத்­த­ளத்­தில் இடம்­பெற்ற கௌரவ பதக்­கப்­பட்­டி­யலை அனு­ம­தி­யின்றி மாற்­றி­ய­தாக அர­சாங்க தலை­மைச் செய­ல­கத்­தின் இரண்டு முன்­னாள் அர­சாங்க ஊழி­யர்­கள் மீது 29 குற்­றச்­சாட்­டு­கள் கொண்டு வரப்­பட்­டன.

முஹ­மட் இஸா முஹ­மட் யூசோஃப், 36, என்­ப­வர் 29 தனிப்­பட்­ட­வர்­க­ளை­யும் வெளி­நாட்­டைச் சேர்ந்த பெயர்­க­ளை­யும் மோச­டி­யாக பட்­டி­ய­லில் சேர்த்த 26 குற்­றச்­சாட்­டு­களை எதிர்­நோக்­கு­கி­றார். அதே இணை­யத் தளத்­தில் மூவ­ரின் பெயர்­களை சேர்த்­த­தற்­காக முஹ­மட் அமர் சியா­ஃபிக் அஸிஸ், 30, மூன்று குற்­றச்­சாட்­டு­களை எதிர்­நோக்­கு­கி­றார்.

1997ஆம் ஆண்­டின் கணினி குற்­ற­வி­யல் சட்­டப்­பி­ரிவு 5ன் கீழ் அவர்­கள் மீது குற்­றச்­சாட்­டு­கள் சுமத்­தப்­பட்­டுள்­ளன. வழக்­கில் குற்­ற­வாளி என நிரூ­பிக்­கப்­பட்­டால் அதி­க­பட்­ச­மாக 100,000 ரிங்­கிட் அப­ரா­தம் அல்­லது ஏழு ஆண்­டு­கள் வரை சிறை அல்­லது இரண்­டும் விதிக்­க­ப்­ப­ட­லாம்.

ஆனால் டத்தோ, டத்­தோஸ்ரீ பட்­டம் விற்­கப்­பட்ட விவ­கா­ரத்­தில் தாங்­கள் குற்­ற­மற்­ற­வர்­கள் என்று இரு­வ­ரும் கூறி­யுள்­ள­னர்.