வேலையிட மரணங்கள் குறைந்தன: அமைச்சு

வேலையிட மரணங்கள் குறைந்தன: அமைச்சு

2 mins read
2ca15916-d365-4393-b92a-ef4eb244192f
-

மனி­த­வள அமைச்சு அறி­மு­கப்­ப­டுத்­திய உயர் பாது­காப்பு காலக்­கட்­டத்­தில் மர­ணங்­கள் குறைந்­தன. இருந்­தா­லும் காயங்­களை ஏற்­ப­டுத்­திய பெரிய சம்­ப­வங்­க­ளைத் தடுக்க முடி­ய­வில்லை.

இந்த நிலையில் பாது­காப்பு தொடர்­பான சிக்­கல்­கள் தொடர்ந்து நீடிக்­கும் என அமைச்சு தெரி­வித்­துள்­ளது.

கடந்த ஆண்டு செப்­டம்­பர் மாதம் உயர் பாது­காப்பு திட்­டத்தை மனி­த­வள அமைச்சு அறி­மு­கப்­ப­டுத்­தி­யது.

2022 ஜன­வ­ரி­யி­லி­ருந்து ஆகஸ்ட் வரை­யில் மாதத்­திற்கு சரா­ச­ரி­யாக 49.1 காயம் ஏற்­ப­டுத்­திய சம்­ப­வங்­கள் நடந்­துள்­ளன. இது, செப்­டம்­பர் முதல் டிசம்­பர் வரை­யில் 55.3ஆக இருந்­தது என்று அமைச்சு நேற்று வெளி­யிட்ட தக­வ­லில் தெரி­வித்­தது.

அதே சம­யத்­தில் அண்­மைய மாதங்­ க­ளாக வேலை­யி­டங்­களில் நிக­ழும் மர­ணங்­கள் குறைந்­துள்­ளன. இதன் கார­ண­மாக உயர்­பா­து­காப்பு காலக்­கட்­டத்தை பிப்­ர­வ­ரிக்­குப் பிற­கும் நீட்­டிப்­பது குறித்து அமைச்சு ஆராய்ந்து வரு­வ­தாக மனி­த­வள மூத்த துணை அமைச்­சர் ஸாக்கி முகம்­மது தெரி­வித்­துள்­ளார்.

கடு­மை­யான பாது­காப்பு விதி­மு­றை­கள் அமல்­ப­டுத்­து­வ­தற்கு முன்பு 100,000 ஊழி­யர்­க­ளுக்கு 1.6 என்ற விகிதத்தில் வேலை­யிட மர­ணங்­கள் நிகழ்ந்­தன.

இந்­தக் கால­கட்­டத்­தில் கடு­மை­யா­னப் பாது­காப்பு அம்­சங்­களை மீறி உயிர்ச்­சே­தங்­களை ஏற்­ப­டுத்­தும் நிறு­வ­னங்­க­ளுக்கு மூன்று மாதங்­கள் வெளி­நாட்டு ஊழி­யர்­களை வேலைக்கு அமர்த்த தடை விதிக்­கப்­பட்­டது.

கடந்த ஆண்டு செப்­டம்­பர் முதல் டிசம்­பர் வரை­யில் 100,000 ஊழி­யர்­க­ளுக்கு மரண விகி­தம் 0.9க்கு குறைந்­தது. இது, 2022 முழு­வ­தும் 100,000 ஊழி­யர்­க­ளுக்கு 1.3ஆக இருந்­தது.

இதே ஆண்­டில் 46 வேலை­யிட மர­ணங்­கள் நிகழ்ந்­துள்­ளன. இதற்கு முன்பு கடை­சி­யாக 2016ஆம் ஆண்­டில் ஆக அதி­க­மாக 66 மர­ணங்­கள் பதி­வா­கி­யி­ருந்­தன.

இதற்­கி­டையே நேற்று நடை­பெற்ற நிகழ்ச்சி ஒன்­றில் பேசிய அமைச்­சர் ஸாக்கி, வேலை­யி­டப் பாது­காப்பு, சுகா­தா­ரத்­துக்­கான அனைத்­து­லக ஆலோ­ச­னைக் குழு வழங்­கிய பரிந்­து­ரை­களை அர­சாங்­கம் முழு­மை­யாக ஏற்­றுக்கொள்­வ­தாக அறி­வித்­தார்.

"உயர் பாது­காப்பு கால­கட்­டம் சிந்­திக்க நேரம் கொடுத்­தது. நாம் என்ன வித்­தி­யாச மாக செய்ய முடி­யும் என்­ப­தைப் பற்றி ஆராய முடிந்­தது," என்று திரு ஸாக்கி முகம்­மது மேலும் தெரி­வித்­தார்.