ஜோகூர் பாரு சுங்கச்சாவடியில் சிங்கப்பூரர்களும் இனி மின்-நுழைவாயிலைப் பயன்படுத்தலாம் புதிய வசதி நேற்று முதல் நடப்புக்கு வந்தது

ஜோகூர் பாரு சுங்கச்சாவடியில் சிங்கப்பூரர்களும் இனி மின்-நுழைவாயிலைப் பயன்படுத்தலாம் புதிய வசதி நேற்று முதல் நடப்புக்கு வந்தது

2 mins read

ஜோகூர்­பா­ரு­வில் உள்ள இரு தரை­வழி நுழை­வு­வா­யில்­களில் மின்­னணு வாயில் (இ-கேட்) வச­தி­களை சிங்­கப்­பூ­ரர்­கள் பயன்­ப­டுத்­த­லாம் என்று மலே­சிய உள்­துறை அமைச்­சர் சைபு­தீன் நசு­ஷோன் இஸ்­மா­யில் நேற்று அறி­வித்­துள்­ளார்.

"இதற்கு முன்­னர் மலே­சிய கட­வுச்­சீட்டு வைத்­தி­ருப்­ப­வர்­கள் மட்­டுமே இந்த மின்-நுழை­வாயில்­க­ளைப் பயன்­ப­டுத்த முடிந்­தது.

"நேற்று முதல் மின்-கட­வுச்­சீட்­டைப் பயன்­ப­டுத்­தும் சிங்­கப்­பூ­ரர்­க­ளுக்­கும் மின்-நுழை­வாயிலைப் பயன்படுத்தும் வசதியை வழங்­கு­கி­றோம்," என்று திரு சைபு­தீன் கூறி­ய­தாக மலாய் மெயில் செய்தி வெளி­யிட்­டுள்­ளது.

இரு சோத­னைச் சாவ­டி­க­ளி­லும் கூட்ட நெரி­ச­லைக் குறைக்­கும் குறு­கிய கால தீர்­வு­களில் இது­வும் ஒன்று என்­றார் அவர்.

சுல்­தான் இஸ்­கந்­தர் கட்­ட­டத்­தின் சுங்­கச்­சா­வடி, குடி­நு­ழைவு, தனி­மைப்­ப­டுத்­தல் வளா­கத்­தில் நேற்று நடை­பெற்ற ஜோகூர் கடற்­பா­லத்­தில் கூட்ட நெரி­ச­லைச் சமா­ளிப்­பது பற்­றிய கூட்டத்­திற்கு தலைமை தாங்­கிய பின்­னர், திரு சைபு­தீன் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசி­னார்.

மின்-நுழை­வா­யில் வச­தி­யைப் பயன்­ப­டுத்த விரும்­பும் சிங்­கப்­பூ­ரர்­கள் குறைந்­த­பட்­சம் மூன்று மாதம் செல்­லு­ப­டி­யா­கும் மின்-கட­வுச் சீட்டை வைத்­தி­ருக்க வேண்­டும்.

சிங்­கப்­பூர் வரு­கை­யா­ளர்­கள் பய­ணத்­திற்கு மூன்று நாள்­களுக்கு முன்­னர் மலே­சிய மின்னி­லக்க வருகை அட்டையை இணை­யத்­தில் சமர்ப்­பிக்க வேண்­டும் என்­றும் அமைச்சர் சைபு­தீன் கூறி­னார்,

முதல் முறை­யா­கச் செல்­வோர் சுங்­கச்­சா­வடி முகப்­பில் தங்­கள் அங்க அடை­யா­ளத்தை உறு­திப்­ப­டுத்த வேண்­டும்.

திரு சைபு­தீன் அர­சாங்க அதி­கா­ரி­க­ளு­டன் நேற்­றுக் காலை 5 மணிக்கு ஜோகூர் கடற்­பா­லத்தை பார்­வை­யிட்­டார்.

புருணை, பிரிட்­டன், நியூ­சி­லாந்து, ஆஸ்­தி­ரே­லியா, ஜப்­பான் போன்ற குறைந்த கிரு­மித்­தொற்று ஆபத்­துள்ள நாடு­க­ளி­லி­ருந்து வரும் பய­ணி­க­ளுக்­கும் மின்-நுழை­வா­யில் பயன்­பாட்டை குடி­நு­ழை­வுத் துறை விரி­வு­ப­டுத்­தும் என்­றார் அவர்.

சிங்­கப்­பூ­ரின் குடி­நு­ழைவு, சோத­னைச் சாவடி ஆணை­யம் (ஐசிஏ) தகு­தி­யுள்ள மலே­சி­யர்­க­ளுக்­குத் தானி­யக்க வாயில் வச­தியை வழங்­கு­கிறது.

தகுதி பெற்ற மலே­சி­யக் குடி­மக்­கள், சிங்­கப்­பூ­ரில் உள்ள அனைத்து சோத­னைச் சாவ­டி­களி­லும் தானி­யங்கி தடங்­களைப் பயன்­ப­டுத்­து­வ­தற்கு பதிவு செய்­து­கொள்­ளும் வசதியை கடந்த 2022ஆம் ஆண்டு மே மாதம் முதல் ஐசிஏ செயல்­ப­டுத்­தி­யுள்­ளது.

சோத­னைச்­சா­வ­டி­யின் சோதனை முகப்­பு­களில் குடி­நுழைவு அனு­ம­தி­யின்­போது இதற்­கான பதிவு தானா­கவே செய்­யப்­படும்.

அவ்வாறு பதிவு செய்­தோருக்கு அவர்­கள் 'எஸ்ஜி வருகை அட்­டை­'யில் தெரி­வித்­தி­ருந்த மின்னஞ்­ச­லுக்கு மின்­னி­லக்க வருகை அட்டை வழி­யா­கத் தெரி­விக்­கப்­படும்.

முன்­ன­தாக, தகு­தி­யு­டைய மலே­சிய குடி­மக்­கள் தானி­யங்கி வாயில் பயன்­பாட்­டிற்­காக பதி­வு­செய்ய முகப்பு பதிவு மையங்­களை அணுக வேண்­டி­யி­ருந்­தது.