சீன குடிமக்கள் கொவிட்-19 கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்கப்பட்ட நிலையில் மூன்றாண்டு
களுக்குப் பின்னர் நிம்மதியான கொண்டாட்டங்களில் ஈடுபட சொந்த ஊர் திரும்பினர்.
மாநிலம் விட்டு மாநிலம் செல்ல எல்லைக் கட்டுப்பாடுகள் இல்லாததால் ஏராளமானோர் தங்களது சொந்த ஊருக்குத் திரும்பினர். ரயில் நிலையங்களிலும் விமான நிலையங்களிலும் கடந்த சில நாள்களாக ஏராளமான மக்கள் பயணம் செய்ததைக் காணமுடிந்தது.
சீனப் புத்தாண்டைக் குறிக்கும் வசந்த காலத் திருவிழா இம்மாதம் 7ஆம் தேதி தொடங்கியது முதல் கடந்த புதன்
கிழமை வரை 480 மில்லியன் பயணங்கள் மேற்கொள்ளப்பட்டதாக சீனாவின் அதிகாரத்துவத் தரவுகள் தெரிவித்தன.
கொவிட்-19 கொள்ளைநோய் பரவத் தொடங்கிய 2020ஆம் ஆண்டு கொண்டாட்டத்தின்போது மேற்கொள்ளப்பட்ட பயணங்களைக் காட்டிலும் இந்த எண்ணிக்கை 47.1 விழுக்காடு அதிகம்.
இருப்பினும் கொள்ளைநோய்க்கு முந்திய 2019ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 47.3 விழுக்காடு குறைவு.
40 நாள்களுக்கு நீடிக்கும் இவ்வாண்டின் வசந்தகாலத் திருவிழாவின்போது சீனாவில் 2.1 பில்லியன் பயணங்கள் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கு முன்னர், ஆக உச்சமாக 3 பில்லியன் பயணங்கள் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் இருமுறை அங்கு நிகழ்ந்துள்ளது.
3 பில்லியன் என்பது சீனாவின் ஒட்டுமொத்த மக்கள்தொகைக்கு ஒப்பானது.
சீனர்களின் வசந்தகாலத் திருவிழா என்பது உலகின் ஆக அதிக மக்கள் நடமாட்டம் நிறைந்தது.
இந்தத் திருவிழா சீனர்
களுக்கு மிகவும் முக்கியமானது என்று தலைநகர் பெய்ஜிங்கில் உள்ள 'எஸ்எம்சி சைனா' என்னும் தொழிற்சாலையின் பொது மேலாளர் மா கிங்ஹாய் கூறினார்.
"இந்த விழாக்கால விடு
முறையை அனுபவிக்க, வேலை செய்வதை விடுத்து சொந்த ஊர் செல்லுமாறு ஊழியர்கள் கேட்டுக்கொள்ளப்படுவார்கள்," என்றார் அவர்.
கடந்த ஈராண்டுகளாக, கொவிட்-19 கட்டுப்பாடுகள் காரணமாக பெய்ஜிங்கில் உள்ள 80 விழுக்காட்டு ஊழியர்கள் தங்களது சொந்த ஊர் திரும்ப இயலாமல் தவித்து வந்தனர்.
தற்போது கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால் அவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் ஊர் போய்ச் சேந்தனர்.

