ஆட்குறைப்பு: கூகல் ஊழியர்கள் விரக்தி

2 mins read
860ad8c9-adfc-48a3-bde2-c2105d903514
-

அமெரிக்காவின் பன்னாட்டுத் தொழில்நுட்ப நிறுவனமான அல்ஃபபெட் தமது கூகல் நிறுவனத்தில் 12,000 பேரை ஆட்குறைப்பு செய்வதாக அறிவித்ததைத் தொடர்ந்து நீக்கப்பட்ட பலர் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். ஜெரமி ஜோச லின் என்பவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் தகவலில், "இருபது ஆண்டுகளுக்கு மேலாக கூகலில் பாடுபட்டும் இன்று நான் நீக்கப்பட்டதை ஏற்கக் கடினமாக உள்ளது," என்று கூறியுள்ளார். மென்பொருள் பொறியாளரான இவர் ஆட்குறைப்பு செய்யப்பட்டது மின்னஞ்சல் மூலம் இவருக்குத் தெரியப்படுத்தப்பட்டது. அதனை அறிந்ததும் தாம் அதிர்ச்சியுற்றதாக திரு ஜெரமி தெரிவித்துள்ளார்.

மற்றொருவரான மேத்யூ மெக்நல்டி, "எனது பத்தாண்டு பணி இன்று நிறைவுக்கு வந்து உள்ளது. எப்படியும் ஒருநாள் நீக்கப்படுவோம் என்பது தெரிந்து இருந்ததால் திடீரென எனக்கான முடிவு அறிவிக்கப் பட்டதும் திடமாக இருந்தேன். சக ஊழியர்களிடம் இருந்து விடைபெறுவது கவலையாக இருந்தபோதிலும் பல வாய்ப்பு கள் வெளியில் காத்திருக்கும் என்பதை எனது பணி உணர்த்தி இருக்கிறது," என்று டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

அண்மைக் காலமாக தொழில்நுட்பப் பெருநிறுவனங் களான அமேசான், ஃபேஸ்புக், மைக்ரோசாஃப்ட் ஆகியவற்றைத் தொடர்ந்து கூகலும் ஆட்களை குறைத்துள்ளது. கூகல் நிறு வனத்தின் செயற்கை நுண் ணறிவுப் பிரிவில் பணிபுரியும் ஊழியர்கள் மட்டும் பாதிக்கப்பட வில்லை.

நீக்கப்பட்ட பெரும்பாலான ஊழியர்கள் அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள். ஆட்குறைப்பு செய்யப்படுவதற்காக தாம் மன்னிப்புக் கேட்டுக்கொள் வதாக அல்ஃபபெட் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை தமது கடிதத்தில் கூறியுள்ளார்.

சீனப் புத்­தாண்டு தினத்தையொட்டி தமிழ்­மு­ரசு

அலு­வ­ல­கத்­துக்கு இன்று

விடு­முறை என்­ப­தால்

நாளை ஒரு­நாள் மட்­டும்

முரசு நாளி­தழ் வெளி­வ­ராது