இலங்கையில் இனப் பிரச்சினைக்குத் தீர்வுகாண, முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி, முன்னாள் இலங்கை அதிபர் ஜே.ஆர். ஜெயவர்தன ஆகியோர் இணைந்து 1987 ஜுலை 29ஆம் தேதி இலங்கை அரசமைப்புச் சட்டத்தில் 13வது திருத்தம் செய்வதற்கான உடன்பாடு ஒன்றை உருவாக்கினர். அரசமைப்புச் சட்டம் 13ஏ தமிழ்ச் சமூகத்திற்கு அதிகாரப் பகிர்வு வழங்குகிறது. அரசமைப்புச் சட்டத்தின் 13வது திருத்தத்தை முழுமையாக அமல்படுத்துவதன் மூலம் நாட்டில் உள்ள எல்லா சமூகமக்களிடத்திலும் ஒற்றுமையை ஏற்படுத்த முடியும். இந்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என இலங்கையின் பெரும்பாலான தமிழ்க் கட்சிகள் கோரி வருகின்றன. இந்தியாவும் அவர்களின் குரலுக்கு ஆதரவாக இருந்து வருகிறது. தற்போதைய இலங்கை அரசாங்கம் இந்தக் குரலுக்குச் செவிசாய்க்குமா என்பது போகப்போகத் தெரியவரும்.
இலங்கைத் தமிழர்களுக்கு அதிகாரம் வழங்கும் சட்டத்திருத்தம்
1 mins read

