தமிழருடன் இணக்கம் காண இலங்கையில் அதிகாரப் பகிர்வு முக்கியம்: இந்தியா

தமிழருடன் இணக்கம் காண இலங்கையில் அதிகாரப் பகிர்வு முக்கியம்: இந்தியா

1 mins read

இலங்­கை­யில் உள்ள சிறு­பான்மை தமிழ் மக்­க­ளி­டம் இணக்­க­மான சூழ்­நி­லையை உரு­வாக்க இலங்கை அரசமைப்புச் சட்டத் தின் 13வது திருத்தத்தை அந்­நாடு முழு­மை­யாக அமல்­ப­டுத்­து­வது முக்­கி­யம் என்று இந்­தியா கரு­து­கிறது. இதனை கொழும்பு சென்­றி­ருக்­கும் இந்­திய வெளி­யு­றவு அமைச்­சர் எஸ். ஜெய்­சங்­கர் தெரி­வித்து உள்­ளார்.

தமி­ழர்­க­ளுக்கு அதி­கா­ரப் பகிர்­வுக்கு வகை செய்­யும் இந்த சட்­டத்­தி­ருத்­ததை அமல்­ப­டுத்­து­மாறு இலங்­கைக்கு இந்­தியா அழுத்­தம் கொடுத்து வரு­வ­தா­க­வும் அவர் நேற்று முன்­தி­னம் அறிக்கை ஒன்­றில் தெரி­வித்­தார். இலங்கை அதி­பர் ரணில் விக்­ர­ம­சிங்க, இலங்கை வெளி­யு­றவு அமைச்­சர் அலி சப்ரி ஆகி­யோ­ரைச் சந்­தித்த பின்­னர் திரு ஜெய்­சங்­கள் இந்த அறிக்­கையை வெளி­யிட்­டார்.

இலங்­கை­யில் அர­சி­யல், பொரு­ளி­யல் நிலைத்­தன்மை ஏற்­ப­ட­வேண்­டும் என்­பதை இந்­தியா எப்­போ­தும் ஆத­ரித்து வருவ­தாக அவர் அதில் குறிப்­பிட்­டார்.

"இந்த நிலைத்­தன்­மைக்கு 13வது சட்­டத்­தி­ருத்­தத்தை முழு­மை­யாக அமல்­ப­டுத்­து­வ­தும் மாகாண சபைத் தேர்­தலை முன்­கூட்­டியே நடத்­து­வ­தும் அவ­சி­யம் என்ற இந்­தி­யா­வின் கருத்தை அதி­பர் விக்­ர­ம­சிங்­க­வு­டன் பகிர்ந்து­கொண்­டேன். இந்­திய வம்­சா­வளி தமிழ்ச் சமூ­கத்­தின் தேவை­களில் சிறப்­புக் கவ­னம் செலுத்­தப்­பட வேண்­டி­ய­தன் அவ­சி­யம் குறித்­தும் அவ­ரு­டன் விவா­தித்­தேன்," என திரு ஜெய்­சங்­கர் அறிக்­கை­யில் கூறியுள்­ளார்.