அமெரிக்க துப்பாக்கிச்சூடு: உயிரை மாய்த்துக்கொண்ட சந்தேக நபர்

அமெரிக்க துப்பாக்கிச்சூடு: உயிரை மாய்த்துக்கொண்ட சந்தேக நபர்

2 mins read
17932a92-03f4-4c2d-ae0b-2b8f494f8b47
-
multi-img1 of 2

அமெ­ரிக்­கா­வின் கலி­ஃபோர்­னியா மாநி­லத்­தில் உள்ள மாண்­டெரே பார்க் எனு­மி­டத்­தில் உள்­ளூர் நேரப்­படி சென்ற சனிக்­கி­ழமை இரவு பத்து மணி­ய­ள­வில் துப்­பாக்­கிச்­சூடு நடந்தது. இதைச் செய்ததாக சந்­தே­கிக்­கப்­படும் 72 வயது ஆட­வர், கிட்­டத்­தட்ட 12 மணி நேரம் கழித்­துக் காவல்­து­றை­யி­னர் அணு­கி­ய­போது தன்­னைத் தானே சுட்­டுக்­கொண்டு மாண்­ட­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

நட­னக்­கூ­டம் ஒன்­றில் நடத்­தப்­பட்ட துப்­பாக்­கிச்­சூட்­டில் பத்­துப் பேர் உயி­ரி­ழந்­த­னர். மேலும் பத்­துப் பேர் காய­ம­டைந்­த­னர்.

அந்­தச் சம்­ப­வம் நடந்து ஏறக்­கு­றைய 20 நிமி­டங்­கள் கழித்து, அரு­கில் உள்ள அல்­ஹாம்­பரா எனும் நக­ரி­லும் அந்த ஆட­வர் துப்­பாக்­கிச்­சூடு நடத்த முயன்­றார். ஆனால் அங்கு நின்­றி­ருந்த இரு­வர், ஆட­வர் சுடு­வ­தற்கு முன்­பாக அவ­ரது துப்­பாக்­கி­யைத் தட்­டி­விட்­ட­தால் ஆட­வர் அங்­கி­ருந்து தப்­பி­யோ­டி­விட்­ட­தாக காவல்­துறை அதி­கா­ரி­கள் கூறி­னர்.

சந்­தேக நபர் ஹூ கன் டிரான் என்று அடை­யா­ளம் காணப்­பட்­ட­தாக லாஸ் ஏஞ்­ச­லிஸ் மாநில காவல்துறைத் தலைவர் ராபர்ட் லூனா தெரிவித்தார்.

தாக்­கு­த­லுக்­கான நோக்­கம் இன்­னும் கண்­ட­றி­யப்­ப­ட­வில்லை.

துப்­பாக்­கிச்­சூட்­டில் உயி­ரி­ழந்­தோ­ரின் பெயர்­க­ளைக் காவல்­துறை வெளி­யி­ட­வில்லை.

இருப்­பி­னும் அவர்­களில் ஐவர் ஆட­வர், ஐவர் பெண்­கள் என்­றும் அனை­வ­ரும் 50 வய­துக்கு மேற்­பட்­ட­வர்­கள் என்­றும் அதி­கா­ரி­கள் கூறி­னர்.

டிரான் பயன்­ப­டுத்­திய துப்­பாக்கி கலி­ஃபோர்­னி­யா­வில் தடை­செய்­யப்­பட்ட ஒன்று என்­றார் திரு லூனா.

மாண்­டெரே பார்க் துப்­பாக்­கிச்­சூட்­டிற்கு மறு­நாள் அங்­கி­ருந்து ஏறக்­கு­றைய 34 கிலோ­மீட்­டர் தொலை­வில் வெள்ளை வேனை ஓட்­டிச்­சென்ற டிரா­னைக் காவல்­து­றை­யி­னர் நெருங்­கி­னர். அப்­போது ஆட­வர் தன்­னைத் தானே சுட்­டுக்­கொண்­ட­தாகக் கூறப்பட்டது.

துப்­பாக்­கிச் சூட்­டில் காய­ம் அடைந்­த­வர்­களில் ஏழு பேர் மருத்­து­வ­ம­னை­யில் சிகிச்சை பெறு­வ­தா­க­வும் அவர்­களில் ஒரு­வ­ரின் உடல்­நிலை கவ­லைக்­கி­ட­மாக இருப்­ப­தா­க­வும் காவல்­துறை தெரி­வித்­தது.

ஏறத்­தாழ 60,000 பேர் வசிக்­கும் மாண்­டெரே பார்க் நக­ரம் பொது­வா­கவே அமை­தி­யான, அழ­கான நக­ரம் என்று லாஸ் ஏஞ்­ச­லிஸ் சீன வர்த்­தக சபை கூறி­யது.

அந்த நக­ரின் குடி­யி­ருப்­பா­ளர்­களில் ஏறத்தாழ 65 விழுக்­காட்­டி­னர் ஆசி­யர்­கள் என்­றும் சீனா­வில் இருந்து குடி­யே­றும் பல­ரும் விரும்பி அந்நகரைத் தங்கள் வசிப்­பி­ட­மா­கத் தேர்ந்­தெ­டுப்­ப­தா­க­வும் கூறப்­ப­டு­கிறது.

துப்பாக்கிச்சூடு நடந்த 'ஸ்டார் பால்­ரூம் டான்ஸ் ஸ்டு­டியோ' நட­னக்­கூ­டத்­தில் சீனப் புத்­தாண்­டுக் கொண்­டாட்­டங்­கள் நடை­பெ­று­வது வழக்­கம்.

பெரும்­பா­லும் அந்த நடனக்கூடத்திற்கு நடுத்­தர வய­தி­ன­ரும் மூத்­தோ­ரும் அதி­கம் செல்­வர் என்று கூறப்­பட்­டது.

அமெ­ரிக்க அதி­பர் ஜோ பைட­னும் அவ­ரது துணை­வி­யா­ரும் மாண்­டெரே பார்க் துப்­பாக்­கிச்­சூட்­டில் உயி­ரி­ழந்­தோர், காய­ம­டைந்­தோர் ஆகி­யோ­ருக்­காக பிரார்த்­தனை செய்­வ­தா­கக் கூறி­யுள்­ள­னர்.

பாதிக்­கப்­பட்­டோ­ருக்கு மரி­யாதை செலுத்­தும் வண்­ணம், இம்­மா­தம் 26ஆம் தேதி மாலை வரை அமெரிக்க அர­சாங்­கக் கட்­ட­டங்­கள் அனைத்­தி­லும் தேசி­யக் கொடியை அரைக் கம்­பத்­தில் பறக்­க­வி­டும்­படி அதி­பர் ஜோ பைடன் உத்­த­ர­விட்­டுள்­ளார்.