வூஹான் மக்கள்: கொவிட்-19 குறித்து இனி பயமில்லை

வூஹான் மக்கள்: கொவிட்-19 குறித்து இனி பயமில்லை

2 mins read

கொவிட்-19 கிரு­மிப்­ ப­ர­வலை முன்­னிட்டு மூன்று ஆண்­டு­களுக்கு முன்­னர் முடக்­கப்­பட்ட சீனா­வின் வூஹான் நகர மக்­கள், எதிர்­கா­லம் குறித்து நம்­பிக்­கை­யு­டன் இருப்­ப­தா­க­வும் கிரு­மித்­தொற்று குறித்து இனி­யும் பய­மில்லை என்­றும் கூறி­யுள்­ள­னர்.

ஜன­வரி 2020ல் சீனா அந்த நகரை முடக்­கி­ய­போ­தும் உல­கெங்­கும் மில்­லி­யன்­க­ணக்­கா­னோர் உயி­ரி­ழக்­கக் கார­ண­மா­ன­து­டன் உல­கப் பொரு­ளியலையும் புரட்­டிப் போட்­டது கிரு­மிப்­ப­ர­வல்.

கிட்­டத்­தட்ட மூன்று ஆண்­டு­களாக உலக நாடு­கள் கடு­மை­யான முடக்­கங்­களை அறி­வித்­த­து­டன் பெரிய அள­வி­லான கிரு­மித்­தொற்­றுப் பரி­சோ­த­னை­களும் கட்­டா­ய­மாக்­கப்­பட்­டன.

கிருமிப் பரவல் அறவே இல்லாத நிலை எனும் கொள்கையைச் சீனா சென்ற மாதம் கைவிட்டது.

சீனர்­கள் இந்த வாரம் சீனப் புத்­தாண்­டைக் கொண்­டா­டி­வ­ரும் வேளை­யில், 2020 தொடக்­கத்­தில் உல­கின் ஒட்­டு­மொத்த கவ­னத்­தை­யும் ஈர்த்­த­து­போல இப்­போது வூஹான் முக்­கி­யத்­து­வம் பெற­வில்லை.

உள்­ளூர்­வா­சி­கள் குளி­ரைப் பொருட்­ப­டுத்­தா­மல் சந்­தை­களில் குவி­வ­தை­யும் குடும்­ப­மாக யாங்ட்ஸி ஆற்­றைக் காணச் செல்­வ­தை­யும் பார்க்க முடி­கிறது. சிலர் முகக்­க­வ­சம் அணி­ய­வில்லை.

வாழ்க்கை வழக்க நிலைக்­குத் திரும்­பு­வது குறித்து மகிழ்ச்சி தெரி­வித்­த­னர் பலர். தங்­கள் மன­வு­ளைச்­சல், கவ­லை­கள் ஆகி­ய­வற்­றுக்­குத் தீர்வு கிடைத்­தி­ருப்­ப­தாக ஏஎ­ஃப்பி செய்தி நிறு­வ­னத்­தி­டம் அவர்­கள் கூறி­னர்.

ஜன­வரி 2020ல் ஒரு நள்­ளி­ர­வில் அறி­விக்­கப்­பட்ட முடக்க நிலை வூஹா­னில் 76 நாள்­கள் நீடித்­தது. கிரு­மித்­தொற்று பர­வ­லுக்­குக் கார­ண­மா­கக் கரு­தப்­பட்ட கட­லு­ண­வுச் சந்தை இன்­னும் திறக்­கப்­ப­ட­வில்லை.

கிரு­மிப் ­ப­ர­வல் தொடங்­கி­ய­தில் இருந்து அண்­மைய வாரங்­க­ளில்­தான் சீனா­வில் நோய்த்­தொற்று மோச­மா­கப் பர­வி­யது. சென்ற மாதம் நாட்­டில் கட்­டுப்­பா­டு­கள் அகற்­றப்­பட்­ட­தை­ய­டுத்து கிட்­டத்­தட்ட 80 விழுக்­காட்­டி­ன­ருக்கு கொவிட்-19 கிருமி தொற்­றி­ய­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

ஒரு வாரத்­தில் 13,000 பேர் கிரு­மித்­தொற்­றால் உயி­ரி­ழந்­த­தா­க சீனா தெரி­வித்­தது. ஆனால் அது நோய்ப் பரவல் குறித்த உண்மையான தகவல்களை வெளியிடவில்லை என்று உலக நாடுகள் குறைகூறுகின்றன.