பாதி வழியை எட்டியது வடக்கிலிருந்து விரைவாக நகரம் செல்ல வடக்கு-தெற்கு பாதை

பாதி வழியை எட்டியது வடக்கிலிருந்து விரைவாக நகரம் செல்ல வடக்கு-தெற்கு பாதை

2 mins read
2ef13c52-e0bc-46c6-9582-884c41923e74
-

வடக்கு சிங்­கப்­பூ­ரி­லி­ருந்து நக­ரம் வரை­யிலான $7.47 பில்­லி­யன் ஒருங்­கி­ணைந்த போக்­கு­வரத்து வழித்­த­டத் திட்­டம் பாதியை எட்­டி­யுள்­ளது.

அட்­மி­ரல்டி ரோடு வெஸ்ட்­டில் தொடங்கி, ரிபப்­ளிக் பொலி­வார்ட் அரு­கி­லுள்ள ஈஸ்ட் கோஸ்ட் பார்க்­வே­யில் முடி­வடை­யும் 21.5 கிலோமீட்­டர் நீள வடக்கு-தெற்கு பாதை­யின் கட்­டு­மா­னம் 2018ல் தொடங்­கியது. திட்­ட­மிட்­ட­படி 2027ல் நிறை­வ­டை­யும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

வடக்­கில் 8.8 கி.மீ. மேம்­பா­லச் சாலை தெற்­கில் 12.3 கி.மீ. சுரங்­கச் சாலை, பேருந்து பாதை­கள், சைக்­கிள் பாதை­கள் ஆகி­ய­வற்றை உள்­ள­டக்­கிய இந்த வடக்கு-தெற்கு பாதை, உட்­லண்ட்ஸ், செம்­ப­வாங், ஈசூன், அங் மோ கியோ ஆகிய பகு­தி­களி­லி­ருந்து நக­ரத்­துக்­குச் செல்­லும் பயண நேரத்தை 30 நிமி­டங்­கள் குறைக்­கும் என உறு­தி­ய­ளிக்­கப்­பட்­டுள்­ளது.

சுரங்­கப் பாதை­களின் கட்­டு­மா­னத்தைத் தொடங்­கு­வ­தற்கு முன்­ன­தாக, சுரங்­கப்­பாதை சுவர்­களை நிறு­வுதல், மின்­சா­ரம், தொலைத்­தொ­டர்பு இணைப்­பு­க­ளை­யும் போக்­கு­வ­ரத்­தை­யும் தடம் மாற்­று­வது போன்ற பணி­கள் நடை­பெற்று வரு­வ­தாக நிலப் போக்­கு­வ­ரத்து ஆணை­யம் (எல்­டிஏ) தி ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்­ஸி­டம் கூறி­யது.

முன்­னைய அறிக்­கை­க­ளின்­படி, வடக்கு-தெற்கு பாதை­யின் சுரங்­கப்­பாதை 2026ல் நிறை­வ­டை­யும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது. சுரங்­கப்­பா­தைக்கு மேலே உள்ள சாலை­கள் மற்­றும் பிற பாதை­க­ளின் மறு­சீ­ர­மைப்பு 2027ல் செய்­யப்­படும் என கணிக்­கப்­பட்­டுள்­ளது.

இது, சுரங்­கம் கட்டி அதன் மேற்­பகுதியை பழை­ய­படி ஆக்­கும் சிங்­கப்­பூ­ரின் மிகப்­பெரிய சுரங்­கப்­பாதைத் திட்­ட­மா­கும். தரைக்கு மேலும் கீழும் கட்­டு­மா­னங்­க­ளைக் கொண்ட பகு­தி­க­ளின் ஊடாக அமைக்­கப்­ப­டு­வது இதன் கட்­டு­மா­னச் சிக்­கலை அதி­க­ரிக்­கிறது என்றது ஆணை­யம்.

ஆழ­மான அக­ழியைத் தோண்டி, சுரங்­கப்­பா­தையை உரு­வாக்கி, அதன் மேற்­ப­ரப்பை அதன் முன்­னைய நிலை­யில் மறு­நிர்­மா­ணம் செய்யும் பாரம்­ப­ரிய சுரங்­கப்­பாதை முறை­யில் இது கட்­டப்­ப­டு­கிறது. 9 கி.மீ காலாங்-பாய லேபார் விரைவு சுரங்கப்­ பா­தை­யும் இந்த முறை­யில் கட்­டப்­பட்­டது.

தாம்­சன் சாலைப் பகு­தி­யில் அரு­க­ருகே கட்ட இட­மில்­லா­த­தால், சுரங்கப் பாதைகள் ஒன்­றன் மேல் ஒன்­றா­கக் கட்­டப்­ப­ட­வுள்­ளன. தெற்கு நோக்­கிச் செல்­லும் பாதை மேலே­யும் வடக்கு நோக்­கிச் செல்­லும் பாதை கீழே­யும் இருக்­கும்.

மற்ற நாடு­களில் வெற்­றி­க­ர­மாக பயன்­படுத்­தப்­படும் மேம்­பட்ட கட்­டு­மான முறை­கள் முதல் முறை­யாக சிங்­கப்­பூ­ரில் செயல்­படுத்­தப்­படும் என்று ஆணையம் தெரி­வித்­துள்­ளது. இந்தப் பணி­கள் 2024ல் தொடங்­கும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

புதிய பாதை நக­ரத்­திற்­கான பயண நேரத்தை குறைக்­கும் என்­ற­போ­தும் கட்­டு­மா­னப் பகு­தி­யின் அரு­கி­லுள்ள குடி­யி­ருப்­பா­ளர்­களும் வணி­கங்­களும் கட்­டு­மான இரைச்­சல், அதிர்­வு­கள் மற்­றும் போக்­கு­வரத்து மாற்­றங்­களை இன்­னும் நான்கு ஆண்­டு­கள் சமா­ளிக்க வேண்­டும் என்று கவலை தெரி­வித்­துள்­ளன.

இவ்வாண்டு அடித்­த­ளப் பணி­கள் முடிந்து அகழ்­வுப் பணி­கள் தொடங்­கி­ய­தும் இரைச்­சல் அதி­க­மாக இருக்­கும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது என்­றது ஆணை­யம்.

"சத்­தத்­தைக் குறைக்க நாங்­கள் எங்­க­ளால் முடிந்­த­வரை முயற்சி செய்­கி­றோம்," என்று இத்­திட்­டத்­திற்­கான ஆணை­யத்­தின் துணை இயக்­கு­நர் திரு ஆங் மௌ கூன் கூறினார்.

கட்டி முடிக்­கப்­பட்­டால், சிங்­கப்­பூ­ரின் வடக்­குப் பகு­தியை நேர­டி­யாக நக­ரத்­து­டன் இணைக்­கும் வகை­யில் 16 நுழை­வா­யில்­களும் 17 வெளி­யே­றும் வழி­களும் இப்­பா­தை­யில் இருக்­கும்.