கலிஃபோர்னியா பண்ணை துப்பாக்கிச்சூட்டில் எழுவர் பலி

அமெ­ரிக்­கா­வின் கலி­ஃபோர்­னியா மாநி­லம், சான் மேட்­டியோ கவுன்­டி­யில் உள்ள இரு பண்­ணை­களில் சிறு­வர்­கள் முன்­னால் ஏழு ஊழி­யர்­கள் சுட்­டுக்­கொல்­லப்­பட்ட சம்­ப­வம் தொடர்­பில் ஆசிய பண்ணை ஊழி­யர் ஒரு­வர் தடுப்­புக்­கா­வ­லில் வைக்­கப்­பட்­டுள்­ளார்.

சான் ஃபிரான்­சிஸ்­கோ­வுக்கு தெற்கே உள்ள சான் மேட்­டியோ கவுன்­டி­யில் அந்­தப் பண்­ணை­களுக்கு நேற்று முன்­தி­னம் அவ­சர உத­வி­யா­ளர்­கள் வர­வ­ழைக்­கப்­பட்­ட­னர். அங்கு சிலர் மாண்டு கிடந்­த­தை­யும் பலர் காய­முற்று இருந்­த­தை­யும் அதி­கா­ரி­கள் கண்­ட­றிந்­த­னர்.

இந்த துப்­பாக்­கிச்­சூட்­டுச் சம்­ப­வம் தொடர்­பில் சுன்லி ஸாவ் எனும் 67 வயது ஆட­வர் ஒரு­வர் கைது செய்­யப்­பட்­ட­தாக அரசாங்க அதி­காரி கிறிஸ்­டினா கோர்­பஸ் தெரி­வித்­தார்.

“துப்­பாக்­கிச்­சூட்­டுச் சம்­பவ இடத்­துக்கு வந்த அதிகாரிகள், துப்­பாக்­கிச்­சூட்­டுக் காயங்­கள் கார­ண­மாக நால்­வர் மாண்டு கிடந்­ததைக் கண்­ட­னர்.

“ஐந்­தா­ம­வர், உயி­ருக்கு ஆபத்­தான நிலை­யில் ஸ்டான்­ஃபர்ட் மருத்­துவ நிலை­யத்­துக்­குக் கொண்டு செல்­லப்­பட்­டார்.

“துப்­பாக்­கிச்­சூடு நடந்த வேறோர் இடத்­தில், மேலும் மூவர் மாண்டு கிடந்­தது கண்­ட­றி­யப்­பட்­டது,” என்­றார் திரு­வாட்டி கோர்­பஸ்.

காவல் நிலை­யம் ஒன்­றுக்கு ஸாவ் வாக­னத்தை ஓட்­டிச்­சென்­ற­தாக திரு­வாட்டி கோர்­பஸ் தெரி­வித்­தார். செய்­தி­யா­ளர் சந்­திப்­புக்­காக ‘ஏபிசி7’ செய்­திக்­கு­ழு­வி­னர் அப்­போது அங்கு காத்­தி­ருந்­த­னர்.

ஆயு­த­மேந்­திய அதி­கா­ரி­கள், ஆசிய ஆட­வர் ஒரு­வரை மடக்கிப் பிடிப்­ப­தைக் காணொளி ஒன்று காட்­டி­யது.

“தடுப்­புக்­கா­வ­லில் சாவ் வைக்­கப்­பட்­டுள்­ளார். அவ­ரது வாக­னத்­தில் பகுதி தானி­யக்க கைத்­துப்­பாக்கி ஒன்று கண்­டெ­டுக்­கப்­பட்டது,” என்­றார் திரு­வாட்டி கோர்பஸ்.

துப்­பாக்­கிச்­சூட்­டிற்­கான கார­ணம் இன்­னும் தெரி­ய­வில்லை என்று சொன்ன அவர், மக்கள் வசிக்கும் பகு­தி­யில் துப்­பாக்­கிச்­சூடு நடந்­த­தா­கக் கூறி­னார்.

“பள்ளி முடிந்து மாண­வர்­கள் வீடு திரும்­பும் வேளை­யில் இச்­சம்­ப­வம் நிகழ்ந்­தது. சிறு­வர்­கள் இந்­தத் துப்­பாக்­கிச்­சூட்­டைப் பார்த்­தி­ருப்­பது பற்றி சொல்­வதற்கு வார்த்­தை­களே இல்லை,” என்­றார் திரு­வாட்டி கோர்­பஸ்.

துப்­பாக்­கிச்­சூட்­டிற்­குப் பலி­யா­ன­வர்­கள் சீனப் பண்ணை ஊழி­யர்­கள் என்று ஹாஃப் மூன் பே நகரமன்ற ஊழி­யர் ஒரு­வர் கூறி­யதை ‘என்­பிசி பே ஏரியா’ ஊட­கம் மேற்­கோள்­காட்­டி­யது.

இரு பண்­ணை­களும் ஹாஃப் மூன் பே புற­ந­கர்ப் பகு­தி­யில் அமைந்­துள்­ளன.

லாஸ் ஏஞ்­ச­லிஸ் அருகே உள்ள நட­னக்­கூ­டத்­தில் 11 பேரின் உயி­ரைப் பறித்த துப்­பாக்­கிச்­சூடு நடந்த 48 மணி நேரத்­திற்­குள் இந்­தத் துப்­பாக்­கிச்­சூட்­டுச் சம்­ப­வம் நிகழ்ந்­துள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!