மலேசியாவின் பொது மருத்துவமனை அவசர சிகிச்சைப் பிரிவுகளில் நோயாளிகள் அவதி

2 mins read

மலே­சி­யா­வில் பொது மருத்­து­வ­மனை­கள் அதிக எண்­ணிக்­கையி­லான நோயா­ளி­க­ளைக் கையாள முடி­யா­மல் திண­று­வ­தாக தி ஸ்டார் செய்தி தெரி­வித்­துள்­ளது.

அவ­சர சிகிச்­சைப் பிரி­வில் சிலர் தங்­கள் 'ஐவி' பைக­ளைத் தாங்­களே தூக்­கிக்கொண்டு நிற்­கின்­ற­னர், உட்­கார இட­மில்­லா­மல் சிலர் நிற்­கின்­ற­னர், சிலர் தரை­யில் அமர்ந்­தி­ருக்­கி­றார்­கள். படுக்­கை­கள் இல்­லா­த­தால் வேறு சிலர் மருத்­து­வ­ம­னை­யில் அனு­ம­திக்­கப்­ப­ட­வில்லை என்று சமூக ஊடகப் பதி­வு­கள் கூறு­கின்­றன.

ஒப்­பந்த மருத்­து­வர்­க­ளுக்­கான உரி­மை­க­ளுக்கு குரல் கொடுக்­கும் @HKontrak என்ற குழு, ஜன­வரி 18ஆம் தேதி கோலா­லம்­பூர் பொது மருத்­து­வ­ம­னை­யில் நோயா­ளி­கள் நிரம்பி வழி­யும் அவ­சர சிகிச்­சைப் பிரி­வின் படத்தை தனது டுவிட்­டர் பக்­கத்­தில் பகிர்ந்­துள்­ளது.

உச்ச நேரத்­தில் அவ­சர சிகிச்சைப் பிரி­வில் கிட்­டத்­தட்ட 100 நோயா­ளி­கள்­வரை காத்திருப்­ப­தால், மருத்­து­வ­ம­னை­யில் அனு­மதிக்­கப்­பட 24 மணி நேரத்­திற்­கும் மேலாகிறது என அப்­ப­திவு குறிப்­பிட்­டுள்­ளது.

விபத்­தில் சிக்­கிய தனது மக­னுக்கு கிளந்தான் பாசிர் மாஸ் மருத்­து­வ­ம­னை­யில் அளிக்­கப்­பட்ட சிகிச்சையின் ஏமாற்றம் குறித்து திரு­வாட்டி அசிமா அப்­துல்லா ஜவாவி, ஜன­வரி 17 அன்று ஃபேஸ்புக்கில் பதி­விட்­டுள்­ளார்.

"எனது மகன் விபத்­தில் சிக்கியதை அறிந்து ஒரு மணி நேரத்­திற்­குப் பிறகு நான் மருத்­து­வ­ம­னைக்­குச் சென்­றேன். முகத்­தில் ரத்த வடிய, என் மகன் சக்­கர நாற்­கா­லி­யில் அமர்ந்­தி­ருந்தான். உடம்­பில் வாந்தி வடிந்­தி­ருந்­தது. உடை­யெல்­லாம் ரத்­தத்­தில் நனைந்­தி­ருந்­தது.

"சிகிச்­சை­யின்­போது (வாய் காயங்­க­ளைத் தைக்க), கிட்­டத்­தட்ட 30 முதல் 40 நிமி­டங்­கள் வாயைத் திறந்­த­படி மேற்­பார்­வை­யின்றி அவன் தனி­யாக விடப்­பட்டான்," என்று அவர் கூறி­னார்.

சிகிச்சை அளித்த மருத்­து­வர் அவனை மருத்­து­வ­ம­னை­யில் சேர்க்காததால், தனது மகனை வேறொரு மருத்­து­வ­மனைக்கு அழைத்­துச் சென்­ற­தாக அவர் கூறி­னார். அங்கு, அவ­ரது மக­னின் தையல்­கள் மீண்­டும் சரி செய்­யப்­பட்­டன. முன்­னர் கவ­னிக்­கப்­படாத வயிற்­றில் ஏற்­பட்­டி­ருந்த காய­மும் சுத்­தம் செய்­யப்­பட்­டது. இதுகுறித்து சுகா­தார அமைச்­சிடம் புகார் செய்யப்போவ­தாக திரு­வாட்டி அசிமா கூறி­னார்.

நிபு­ணத்­துவ சிகிச்சை மருத்­து­வ­ம­னை­களும் பிரச்­சி­னை­களை எதிர்­கொள்­கின்­றன.

பிரச்­சி­னை­க­ளுக்கு தமது அமைச்சு விரி­வான தீர்­வு­க­ளைக் கண்­ட­றி­யும் என்று சுகா­தார அமைச்­சர் ஸலிஹா முஸ்தஃபா தெரி­வித்­தார்.

வேலை நேரத்தை நீட்­டித்­தல், படுக்கை நிர்­வாக அமைப்­பு­களை ஒழுங்­கு­ப­டுத்­து­தல், கூடு­தல் சுகா­தார சேவை வழங்­கு­வோரை பணி­யில் சேர்ப்­பது உள்­ளிட்­டவை இதில் அடங்­கும்.

போதிய இட­வ­சதி உள்ள மருத்­து­வ­ம­னை­களில் "குறு­கிய கால வார்டு" அறி­மு­கப்­ப­டுத்­தப்­படும் என்­று அவர் சொன்னார்.

"மருத்­து­வர்­கள், தாதி­யர்­கள் உள்­ளிட்ட அதிக மனி­த­வ­ளத்­தைப் பெறு­வ­தற்­கான ஏற்­பா­டு­கள் தொடர்ந்து மேற்­கொள்­ளப்­படும்," என்றார் அவர்.