ஜோகூர் வெள்ளம்: 4,000 பேர் வெளியேற்றம்

ஜோகூர் வெள்ளம்: 4,000 பேர் வெளியேற்றம்

2 mins read
eb5602f7-f438-472e-8d86-6013b56e889e
-

மலே­சி­யா­வின் ஜோகூர் மாநி­லத்­தில் வெள்­ளத்­தால் பாதிக்­கப்­பட்­டோர் எண்­ணிக்கை வெகு­வாக உயர்ந்­துள்­ளது.

நேற்­றுப் பிற்­ப­கல் நில­வ­ரப்­படி, ஏறக்­கு­றைய 4,000 பேர் பாது­காப்­பான இடங்­க­ளுக்கு வெளி­யேற்­றப்­பட்­ட­னர். நேற்று முன்­தி­னத்­தை­விட இது இரு­ம­டங்­குக்­கு­மேல்.

கடந்த திங்­கட்­கி­ழமை முதல் தொடர்ந்து மழை பெய்­த­தால், நேற்று முன்­தி­னம் இரவு எட்டு மணிக்கு 469 குடும்­பங்­க­ளைச் சேர்ந்த 1,703 பேர் வெளி­யேற்­றப்­பட்­ட­னர்.

மூவார் உள்­ளிட்ட ஆறு மாவட்­டங்­கள் பாதிக்­கப்­பட்­ட­தாக மா நிலப் பேரி­டர் நிர்­வா­கக் குழு தெரி­வித்­தது.

செகா­மட்டில் ஆக அதி­க­மாக 1,417 பேர் பாதிக்­கப்­பட்­ட­னர். குளு­வாங்கில் 1.191 பேரும் மெர்­சிங்­கில் 640 பேரும் கோத்தா திங்­கி­யில் 568 பேரும் பத்து பகாட்­டில் 151 பேரும் வெள்­ளத்தை முன்­னிட்­டுப் பாது­காப்­பான இடங்­க­ளுக்கு வெளி­யேற்­றப்­பட்­ட­தாக அக்­குழு நேற்­றுத் தெரி­வித்­தது.

முன்­ன­தாக, செவ்­வாய்க்­கிழமை இரவு 16 நிவா­ரண நிலை­யங்­கள் திறக்­கப்­பட்­டன. நேற்­றுப் பிற்­ப­க­லில் 41 நிவா­ரண நிலை­யங்­கள் செயல்­ப­டு­வ­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது.

ஜோகூர் மாநிலத்­தின் மூன்று ஆறு­களில் நீர்­மட்­டம் அபா­ய­க­ர­மான அளவை எட்­டி­யுள்­ளது. மேலும் ஆறு நதி­களின் நீர்­மட்­டம் எச்­ச­ரிக்கை விடுக்­கு­ம­ளவு உயர்ந்­துள்­ள­தா­கக் கூறப்­பட்­டது.

ஜாலான் சுங்கை திராம்-உலு தெப்­ராவ் பகு­தி­யில் நிலச்­ச­ரிவு ஏற்­பட்­ட­தை­ய­டுத்து அங்கு சாலை போக்­கு­வ­ரத்­துக்கு மூடப்­பட்­டது.

லாபிஸ் நக­ரில் கடு­மை­யான மழை பெய்த வேளை­யில் கார் ஒன்று ஏரி­யில் விழுந்­தது. அதில் பய­ணம் செய்த மூவ­ரும் 13 வய­துக்­கும் 23 வய­துக்­கும் இடைப்­பட்­ட­வர்­கள் என்­றும், செகா­மட் நோக்­கிச் செல்­லும்­போது ஓட்­டு­நர் காரின் கட்­டுப்­பாட்டை இழந்­த­தா­க­வும் தீய­ணைப்பு, மீட்­புத் துறை கூறி­யது.

சம்­ப­வத்­தில் லேசா­கக் காய­ம­டைந்த மூவ­ரும் மருத்­து­வ­ம­னை­யில் சிகிச்சை பெற்­ற­னர்.

ஜோகூ­ரில் மழை தொட­ரும் என்று மலே­சிய வானிலை ஆய்­வ­கம் முன்­னு­ரைத்­தி­ருக்­கிறது. மலே­சி­யா­வில் மேலும் சில மாநிலங்­களில் தொடர்ந்து மழை பெய்­யக்­கூ­டும் என்­றும் முன்­னு­ரைக்­கப்­பட்­டுள்­ளது.

வானிலை குறித்த அண்­மைய தக­வல்­க­ளுக்கு மலே­சிய வானிலை ஆய்­வ­கத்­தின் இணை­யத் தளம், சமூக ஊட­கப் பக்­கங்­கள் ஆகி­ய­வற்றை நாடும்­படி பொது­மக்­கள் அறி­வு­றுத்­தப்­பட்­டுள்­ள­னர்.

நிலை­மையை அணுக்­க­மா­கக் கண்­கா­ணித்து வரு­வ­தாக மலே­சிய தேசி­யப் பேரி­டர் நிர்­வாக அமைப்பு ஃபேஸ்புக்­கில் பதி­விட்­டுள்­ளது.