ஜெயலலிதாவின் பொருள்களை ஏலம்விட நீதிமன்றம் உத்தரவு

ஜெயலலிதாவின் பொருள்களை ஏலம்விட நீதிமன்றம் உத்தரவு

2 mins read
0eb18748-5b2f-462d-8b2c-88db8cf61fd2
-

மறைந்த தமி­ழக முன்­னாள் முதல்­வர் ஜெய­ல­லி­தா­மீ­தான சொத்­துக் குவிப்பு வழக்­கில் பறி­மு­தல் செய்­யப்­பட்ட பொருள்­கள், கர்­நா­டக மாநி­லக் கரு­வூ­லத்­தில் வைக்­கப்­பட்­டுள்­ளன.

பல்­வேறு நகை­கள், வைரம், முத்து, பவ­ளம், தங்­கம் உள்­ளிட்ட அனைத்­துப் பொருள்­க­ளை­யும் ஏலம்­வி­டும்­படி கர்­நா­டக நீதி­மன்­றம் உத்­த­ர­விட்­டுள்­ளது.

சொத்­துக் குவிப்பு வழக்­கில் திரு­வாட்டி ஜெய­ல­லி­தா­வி­டம் இருந்து பல கோடி ரூபாய் மதிப்­புள்ள சொத்­து­கள் பறி­மு­தல் செய்­யப்­பட்­டன.

கடந்த 17 வரு­டங்­க­ளாக கர்­நா­ட­கக் கரு­வூ­லத்­தில் உள்ள சேலை­கள், கால­ணி­கள், சால்­வை­கள் போன்­றவை வீணாகி வரு­கின்­றன.

எனவே, குறிப்­பிட்ட 27 வகை­யான பொருள்­களை மட்­டும் ஏலம்விட்டு அதில் வரும் நிதி­யைக் கொண்டு சொத்­துக் குவிப்பு வழக்­கிற்கு செல­வி­டப்­பட்ட தொகையை வசூல் செய்­ய­வேண்­டும் என வழக்­குத் தொட­ரப்­பட்­டது.

பெங்­க­ளூரு நகர சிவில் நீதி­மன்ற வளா­கத்­தில் உள்ள சிறப்பு நீதி­மன்­றத்­தில் ஆர்­டிஐ ஆர்­வ­லர் டி.நர­சிம்ம மூர்த்தி சென்ற ஆண்டு ஜூன் 22ஆம் தேதி இவ்­வாறு வழக்­குத் தொடர்ந்­தார்.

இந்த மனுவை நீதி­மன்­றம் தள்­ளு­படி செய்­தது. இருப்­பி­னும் நர­சிம்ம மூர்த்தி மேல்­மு­றை­யீடு செய்­தார்.

மேல்­மு­றை­யீட்டு மனுவை விசா­ரித்த நீதி­பதி ராமச்­சந்­திரா, நேற்று முன்­தி­னம் தீர்ப்பளித்­தார்.

தீர்ப்­பில், வழக்­க­றி­ஞர் ஒரு­வரை நிய­மித்து ஜெய­ல­லி­தா­வின் அனைத்து சொத்­து­க­ளை­யும் ஏலம்­விட நட­வ­டிக்கை எடுக்­கும்­படி மாநில அர­சுக்கு அவர் உத்­த­ர­விட்­டுள்­ளார்.

அதன்­படி, திரு­வாட்டி ஜெய­ல­லி­தா­விற்­குச் சொந்­த­மான வைரம், முத்து, பவ­ளம் உள்­ளிட்ட விலை உயர்ந்த கற்­கள் பதிக்­கப்­பட்ட தங்க நகை­கள் விற்­ப­னைக்கு விடப்­படும்.

சொத்­துக் குவிப்பு வழக்­கில் பறி­மு­தல் செய்­யப்­பட்ட பொருள்­களில் மேலும் 700 கிலோ­கி­ராம் எடை­யுள்ள வெள்­ளிப் பொருள்­களும் இடம்­பெற்­றுள்­ளன.

அவற்­று­டன் 11 ஆயி­ரத்து 344 விலை உயர்ந்த புட­வை­கள், 250 சால்­வை­கள், 91 கைக்­க­டி­கா­ரங்­கள், 27 சுவர்க் கடி­கா­ரங்­களும் பறி­மு­தல் செய்­யப்­பட்­டுள்­ளன.

இவை தவிர்த்து, 86 மின்­வி­சி­றி­கள், 146 அலங்­கார நாற்­கா­லி­கள், 81 தொங்­கு­வி­ளக்­கு­கள், 44 குளிர்­சா­தன இயந்­தி­ரங்­கள், 12 குளிர்­ப­த­னப் பெட்­டி­கள், 10 தொலைக்­காட்­சிப் பெட்­டி­கள் உள்­ளிட்­ட­வை­யும் கர்­நா­டக மாநில அர­சின் கரூ­வூ­லத்­தில் வைக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன.

திரு­வாட்டி ஜெய­ல­லி­தா­வின் வீடு­களில் இருந்து கைப்­பற்­றப்­பட்ட‌ தங்க, வைர, வெள்ளி நகை­க­‌ளின் மொத்த மதிப்பு ரூ.5 கோடியே 47 லட்­சத்து 91 ஆயி­ரத்து 252 என மதிப்­பி­ட­‌ப்­பட்­டி­ருந்­தது. தனது ஆலோ­ச­க­ரி­டம் 1,116 கிலோ வெள்­ளிப் பொருள்­களை வழங்­கு­மாறு ஜெய­ல­லிதா கோரி­ய­தால் அவை ஆலோ­ச­கரி­டம் வழங்­கப்­பட்­டன.

சொத்­துக்­கு­விப்பு வழக்­கில் திரு­வாட்டி ஜெய­ல­லிதா, அவ­ரது தோழி சசி­கலா, இள­வ­ரசி, சுதா­க­ரன் ஆகி­யோ­ருக்கு நான்கு ஆண்­டுச் சிறைத்­தண்­டனை விதிக்­கப்­பட்­டது.

அந்த வழக்­கில் சிறைத் தண்­டனை விதிக்­கப்­பட்ட திரு­வாட்டி ஜெய­ல­லிதா திடீ­ரென கால­மா­னார். அதை­ய­டுத்து சசி­கலா உள்­ளிட்ட மற்ற மூவ­ரும் நான்கு ஆண்­டுச் சிறைத்­தண்­ட­னையை நிறை­வேற்­றி­னர். ஜெய­ல­லி­தா­வின் பொருள்­களை ஏலத்­தில்­விட நீதி­மன்­றம் உத்­த­ர­விட்­டி­ருப்­பது அனைத்­திந்­திய அண்ணா திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­தி­ன­ரி­டையே கவ­லையை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.