தந்தை, மகள் விழுந்த சம்பவம்: பாலத்தின் துவாரத்தை செப்பனிடும் பணி நிறைவுற்றது

தந்தை, மகள் விழுந்த சம்பவம்: பாலத்தின் துவாரத்தை செப்பனிடும் பணி நிறைவுற்றது

2 mins read
4c7fd7fb-bde0-4002-858c-d51291d2ae5f
-

சுங்கை பூலோ சதுப்­பு­நில இயற்­கை­வ­ளப் பாது­காப்­புப் பாலத்­தின் துவா­ரத்­தில் தந்­தை­யும் மகளும் விழுந்த சம்­ப­வத்­தைத் தொடர்ந்து அப்­ப­குதி செப்­ப­னி­டப்­பட்­டது. அப்­ப­கு­தி­யின் குளத்­தின் நீர்­மட்­டத்­தைக் கட்­டுப்­ப­டுத்­த­வ­தற்­கான மதகு வாயி­லின் பாலம் அது.

கடந்த திங்­கட்­கி­ழமை தமது குடும்­பத்­தி­ன­ரு­டன் அங்கு சென்­றி­ருந்­த­தாக பக்கி ஹுசைன் என்­னும் ஆட­வர் தமது இன்ஸ்­ட­கி­ராம் பதி­வில் குறிப்­பிட்­டார். முற்­ப­கல் 11 மணி­ய­ள­வில் கடு­மை­யான மழை பெய்­த­தால் தமது குடும்­பத்­

து­டன் அந்த இடத்தைவிட்­டுப் புறப்படத் தயா­ராகி பாலத்­தைக் கடந்­த­போது 3 முதல் 5 சென்­டி­மீட்­டர் உய­ரத்­திற்கு மழை­நீர் ஓடிக்­கொண்டு இருந்­த­தாக அவர் தெரி­வித்­தார்.

அப்­போது ஆஷ்லி எனப்­படும் தமது 2 வயது மகள், பாலத்­தி­லி­ருந்த பெரிய துவா­ரம் வழி­யாக விழுந்­து­விட்­ட­தா­க­வும் அழுக்­கும் சேறும் நிறைந்த நீர் அவ­ரைச் சூழ்ந்­த­தா­க­வும் திரு ஹுசைன் தமது பதி­வில் குறிப்­பிட்­டார். உட­ன­டி­யாக தமது மக­ளைத் தூக்க முயன்­ற­போது ஆழம் எந்த அள­வுக்கு இருக்­கிறது என்று தெரி­யா­மல் தாமும் அந்­தப் பாலத்­தின் அடி­யில் இழுக்­கப்­பட்­ட­தா­க­வும் அத­னால் சில சிராய்ப்­புக் காயங்­கள் தமக்கு ஏற்­பட்­ட­தா­க­வும் அவர் தெரி­வித்­தார்.

நான்கு வயது மக­னு­டன் இருந்த தமது மனைவி திகைப் புடன் இருந்­தார் என்­றும் அந்த இரு நிமி­டங்­கள் வாழ்­வின் போராட்­டம் என்­றும் அவர் கூறி­னார். ஒரு­வ­ழி­யாக எப்­ப­டியோ தப்­பித்து மேலே வந்­த­தா­க­வும் இன்­னும் சில நொடி­கள் தாம­தித்து இருந்­தா­லும் தாங்­கள் இரு­வ­ரும் மூழ்கி இருப்­போம் என்­றும் அவர் ஆதங்­கத்­து­டன் குறிப்­பிட்­டி­ருந்­தார்.

இது­கு­றித்து விளக்­கிய தேசிய பூங்­காக் கழ­கத்­தின் இயற்­கை­வ­ளப் பாது­காப்­புக் குழும இயக்­கு­நர் லிம் லியாங் ஜிம், கடு­மை­யா­கப் பெய்த மழை­யின் கார­ண­மாக மதகு வாயில் பாலத்­தின் பல­கை­கள் பெயர்ந்து துவா­ரம் ஏற்­பட்­ட­தா­க­வும் சம்­ப­வம் நிகழ்ந்த அன்றே, மழை­நீர் வடிந்­த­தும் பல­கை­கள் திருப்பி வைக்­கப்­பட்டு துவா­ரம் அடைக்­கப்­பட்­ட­தா­க­வும் தெரி­வித்­தார்.

மேலும், முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­யாக, எல்­லாப் பலகைகளும் சரி­யாக உள்­ள­னவா என்று கழக அதி­கா­ரி­கள் சோதித்­த­தா­க­வும் வழக்­க­மாக துவா­ரங்­களை அடைக்­கும் பணி­க­ளின் ஒருபகுதி இது என்­றும் அவர் குறிப்­பிட்­டார்.

சம்­ப­வம் நடை­பெற்ற பாலத்­தில் நேற்று இரு ஊழி­யர்­கள் பழு­து­பார்ப்­புப் பணி­யில் ஈடு­பட்டு இருந்­ததை ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்­தி­யா­ளர் கண்­டார்.