'கிருமிப் பரவல் நிலைப்பட்டுள்ளது'

'கிருமிப் பரவல் நிலைப்பட்டுள்ளது'

2 mins read
43a9f68b-642e-4268-a3cc-663cd4495fd6
-

சீனப் புத்தாண்டு விடுமுறைக் காலத்தில் சிங்கப்பூரில் கொவிட்-19 நோய்த் தொற்று குறித்து அமைச்சர் ஓங்

சிங்­கப்­பூ­ரின் கொவிட்-19 சூழல் நிலைப்­பட்டு வரு­வ­தா­கச் சுகா­தார அமைச்­சர் ஓங் யி காங் கூறி­யுள்­ளார். சீனப் புத்­தாண்டு விடு­மு­றைக் காலத்­தில் அன்­றாட பாதிப்பு எண்­ணிக்கை குறைந்த அள­வி­லேயே இருந்­தது என்­றார் அவர்.

சீனப் புத்­தாண்டை ஒட்­டிய வார­யி­று­தி­யின்­போது கிட்­டத்­தட்ட 100ஐ ஒட்­டி­யி­ருந்த இவ்­வெண்­ணிக்கை, கடந்த திங்­கட்­கி­ழமை 78ஆகக் குறைந்­ததை திரு ஓங் சுட்­டி­னார்.

கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்­டோ­ரின் தின­சரி எண்­ணிக்கை வெகு­நாள் கழித்து இவ்­வாறு இரட்டை இலக்­க­மா­கப் பதி­வா­கி­யுள்­ள­தைச் சுட்­டிய அமைச்­சர், பொது விடு­மு­றைக் கால­மும் இதற்­குக் கார­ண­மாக இருக்­கக்­கூ­டும் என்­றார்.

கிரு­மிப் பர­வல் தொடர்­பான கட்­டுப்­பா­டு­கள் சென்ற ஆண்டு தளர்த்­தப்­பட்ட பிறகு முதல்­முறை­யா­கச் சென்ற வாரம் சீனப் புத்­தாண்­டுக் கொண்­டாட்­டங்­கள் இடம்­பெற்­றன.

சீனப் புத்­தாண்டை ஒட்­டிய நீண்ட வார­யி­று­தி­யின்­போது கொவிட்-19 பர­வல் அதி­க­ரிக்­க­வில்லை என்­றும் நேற்று முன்­தின நில­வ­ரப்­படி, கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்­டுள்­ளோர் எண்­ணிக்கை கிட்­டத்­தட்ட 500ஆகப் பதி­வா­னது என்­றும் திரு ஓங் சொன்­னார்.

மருத்­து­வ­ம­னை­க­ளின் அவ­சர சிகிச்­சைப் பிரி­வு­கள் திறம்­படச் சமா­ளித்து வரு­வ­தா­க­வும் அவர் குறிப்பிட்டார்.

அன்­றாட கொவிட்-19 பாதிப்பு குறித்து இது­போல் இனி­யும் அலசி ஆராய வேண்­டி­ய­தில்லை என்­பது தமக்­குத் தெரி­யும் என்­றா­லும், சீனப் புத்­தாண்டு விடு­மு­றை­யின்­போது நிலை­மையை அணுக்­க­மா­கக் கண்­கா­ணித்­த­தா­க­வும் நிலைமை இப்­போது நிலைப்­பட்­டுள்­ள­தா­கத் தெரி­கிறது என்­றும் அமைச்­சர் ஓங் சொன்­னார்.

ஜூரோங் வெஸ்ட் ஸ்தி­ரீட் 52ல் நேற்று நடைபெற்ற என்­டி­யுசி ஹெல்த் ஜூரோங் ஸ்பி­ரிங் தாதிமை இல்­லத்­தின் அதி­கா­ர­பூர்­வத் திறப்­பு­வி­ழா­வில் கலந்­து­கொண்டு அவர் உரையாற்றினார்.

மூப்­ப­டை­யும் மக்­கள்­தொ­கை­தான் இந்­தத் தலை­முறை எதிர்­கொள்­ளும் ஆகப் பெரிய சமூக விவ­கா­ர­மாக இருக்­கும் என்­றார் அவர்.

கிரு­மிப்­ப­ர­வ­லால் சிங்­கப்­பூ­ரில் பல தாதிமை இல்­லங்­க­ளின் திறப்பு தள்­ளி­போ­டப்­பட்­டது. இத­னால் நீண்­ட­கா­லப் பரா­ம­ரிப்பு தேவைப்­படும் நோயா­ளி­களை மறு­வாழ்­வுப் பரா­ம­ரிப்­புக்­கா­கத் தாதிமை இல்­லங்­க­ளுக்கு அனுப்ப இய­லா­மல் மருத்­து­வ­மனை­கள் திண­றின என்­றார் அவர்.

அண்மையில் சீனா தனது எல்­லை­களை மீண்­டும் திறந்­து­விட்­ட­தால், அங்கு உயர்ந்­து­வரும் கொரோனா பாதிப்பு சிங்­கப்­பூ­ரி­லும் தாக்­கத்தை ஏற்­ப­டுத்­துமா என்று பல­ரும் கவ­லைப்­பட்­ட­தாக திரு ஓங் குறிப்­பிட்­டார். இப்­போது வாரத்­திற்கு 38 எனக் குறைந்த அளவு விமா­னங்­களே சிங்­கப்­பூ­ருக்­கும் சீனா­விற்­கும் இடையே இயக்­கப்­படு­வ­தால், அங்­கி­ருந்து வரு­ப­வர்­கள் மூலம் பதி­வா­கும் கொவிட்-19 பாதிப்பு மிகக் குறை­வா­கவே உள்­ளது என்­றார் அவர். கடந்த வாரம் சீனா­வில் இருந்து சிங்­கப்­பூர் வந்­தோ­ரில் யாரும் கொவிட்-19 தொற்­றால் பாதிக்­கப்­பட்­டி­ருக்­க­வில்லை என்று அமைச்­சர் குறிப்­பிட்­டார். சிங்­கப்­பூ­ரில் கிரு­மிப் பர­வல் நிலைப்­பட்­டி­ருப்­ப­தால் விரை­வில் மேல­திக வழக்­க­நி­லைக்­குத் திரும்­பு­வது பற்றி அதி­கா­ரி­கள் ஆலோ­சிப்­ப­தாக அமைச்சர் ஓங் கூறி­னார்.