கலிஃபோர்னியா துப்பாக்கிச்சூட்டில் பலியானோரில் ஐவர் சீனக் குடிமக்கள்

கலிஃபோர்னியா துப்பாக்கிச்சூட்டில் பலியானோரில் ஐவர் சீனக் குடிமக்கள்

2 mins read
3a418a10-62da-4cfc-9d8e-aa57d0d16808
-

வட­க­லி­ஃபோர்­னியா வட்­டா­ரத்­தில் இவ்­வா­ரம் இரண்டு பண்­ணை­களில் நடந்த துப்­பாக்­கிச்­சூட்­டில் பலி­யா­னோ­ரில் ஐவர் சீனக் குடி­மக்­கள் என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. அமெ­ரிக்­கா­வின் சான் ஃபிரான்­சிஸ்கோ நக­ரில் அமைந்­துள்ள சீனத் துணைத் தூத­ர­கம் இத­னைத் தெரி­வித்­தது.

சீனா இச்­சம்­ப­வங்­களை வன்­மை­யா­கக் கண்­டிப்­ப­தாக 'வீசேட்' வாயி­லாக விடுத்த அறிக்­கை­யில் துணைத் தூத­ர­கப் பேச்­சா­ளர் கூறி­னார்.

சம்­ப­வங்­கள் தொடர்­பான விசா­ரணை குறித்­துத் தக­வல் பெற, சம்­பந்­தப்­பட்ட அமெ­ரிக்க அதி­கா­ரி­க­ளு­டன் தொடர்­பில் இருப்­ப­தாக அவர் குறிப்­பிட்­டார்.

சான் ஃபிரான்­சிஸ்கோ நக­ருக்­குத் தெற்கே உள்ள ஹாஃப் மூன் பே பகு­தி­யில் அமைந்­துள்ள இரண்டு பண்­ணை­களில் சென்ற திங்­கட்­கி­ழமை நடத்­தப்­பட்ட துப்­பாக்­கிச்­சூட்­டில் ஏழு பேர் மாண்­ட­னர். மேலும் ஒரு­வர் காய­ம­டைந்­தார்.

இதன் தொடர்­பில் 66 வய­தான சந்­தேக நபர் தடுப்­புக் காவ­லில் வைக்­கப்­பட்­டுள்­ளார்.

பெய்­ஜிங் இரட்­டைக் குடி­யு­ரி­மையை அனு­ம­திப்­ப­தில்லை என்­ற­போ­தும், சீனா குறிப்­பி­டும் ஐவ­ரில் யாரும் அமெ­ரிக்­கக் குடி­யு­ரி­மை­யும் பெற்­ற­வர்­களா என்று தெளி­வா­கத் தெரி­ய­வில்லை.

பண்­ணைத் துப்­பாக்­கிச்­சூட்டு சம்­ப­வங்­க­ளுக்­குக் கிட்­டத்­தட்ட இரண்டு நாள் முன்­பாக கலி­ஃபோர்­னி­யா­வின் மொன்டரே பார்க் பகு­தி­யில் சீனப் புத்­தாண்­டுக் கொண்­டாட்­டத்­தின்­போது பெரிய அள­வி­லான துப்­பாக்­கிச்­சூடு நடந்­தது. அதில் 11 பேர் உயி­ரி­ழந்­த­னர். மேலும் ஒன்­பது பேர் காய­ம­டைந்­த­னர்.

சீன அர­சாங்க ஊட­கம் நீண்­ட­கா­ல­மா­கவே அமெ­ரிக்­கா­வில் நடை­பெ­றும் பெரிய அள­வி­லான துப்­பாக்­கிச்­சூ­டு­கள், ஆசி­யர்­க­ளுக்கு எதி­ரான வன்­செ­யல்­கள் ஆகி­ய­வற்­றைச் சுட்­டிக்­காட்டி அமெ­ரிக்க சமூ­கம் பாது­காப்­பற்­றது என்று கூறி­வந்­துள்­ளது.

இருப்­பி­னும் அமெ­ரிக்க அதி­கா­ரி­கள் அண்­மை­யில் நடந்த இவ்­விரு சம்­ப­வங்­க­ளை­யுமே வெறுப்­பால் விளைந்த குற்­றச்­செ­யல்­க­ளாக வகைப்­ப­டுத்­த­வில்லை.

இது­வரை கிடைத்த தக­வல்­க­ளின் அடிப்­ப­டை­யில், பண்­ணை­யில் நடந்த துப்­பாக்­கிச்­சூடு வேலை­யிட வன்­மு­றை­போல் தோன்­று­வ­தாக அதி­கா­ரி­கள் கூறு­கின்­ற­னர்.

சந்­தேக நபர் சுன்லி சாவ், பண்­ணை­யில் பணி­பு­ரி­யும் ஊழி­யர். தான் வேலை­யி­டத் துன்­பு­றுத்­த­லுக்கு ஆளா­ன­தாக விசா­ர­ணை­யில் அவர் குறிப்­பிட்­டார்.

சான் ஃபிரான்­சிஸ்கோ துணைத் தூத­ர­கத்­தின் அறிக்கை வெளி­யான மூன்று மணி நேரத்­தில், 'வெய்போ' சமூக ஊட­கத்­தில் இரண்டு மில்­லி­ய­னுக்­கும் அதி­க­மா­ன­ முறை அது பார்க்­கப்­பட்­டது.

வெள்ளை மாளி­கை­யில் நேற்று முன்­தி­னம் இரவு நடை­பெற்ற சீனப் புத்­தாண்டு நிகழ்ச்­சி­யில், அமெ­ரிக்க அதி­பர் ஜோ பைடன் கலி­ஃபோர்­னியா துப்­பாக்­கிச்­சூட்டு சம்­ப­வங்­க­ளைக் குறிப்­பிட்டு பாதிக்­கப்­பட்­டோ­ருக்கு அஞ்­சலி செலுத்­தி­னார்.

"ஒரு நாடாக நாங்­கள் அனை­வ­ரும் உங்­க­ளுக்­குத் துணை­நிற்­போம்," என்று அவர் கூறி­னார்.

மொன்டரே பார்க் சம்­ப­வத்­திற்­குப் பிறகு இரண்­டா­வ­தா­கத் தாக்­கு­தல் நடந்த முனைந்த துப்­பாக்­கிக்­கா­ர­ரைத் தடுத்து நிறுத்­திய பிரண்­டன் சாய் என்­ப­வ­ரு­டன் தாம் பேசி­ய­தாக அதி­பர் பைடன் கூறி­னார்.

முத­லில் தான் இறக்க நேரி­டும் என்று நினைத்த பிரண்­டன் பின்­னர் உள்ளே இருந்த மக்­களை நினைத்­துப் பார்த்­த­தா­கக் குறிப்­பிட்­டதைக் கூறிய அவர், "சில நேரங்­களில் வியக்­கத்­தக்க துணிச்­ச­லான நட­வ­டிக்­கை­களை நாம் குறைத்து மதிப்­பிட்­டு­வி­டு­கி­றோம்," என்­றார்.