ஏர் இந்தியா நிறுவனத்தின் வளர்ச்சித் திட்டம்

ஏர் இந்தியா நிறுவனத்தின் வளர்ச்சித் திட்டம்

2 mins read

ஏர் இந்­தியா நிறு­வ­னம் பல பில்­லி­யன் டாலர் மதிப்­பில் கிட்­டத்­தட்ட 495 ஜெட் விமா­னங்­களை வாங்­கத் திட்­ட­மிட்­டுள்­ளது.

இதில் பாதி எண்­ணிக்­கை­யி­லான விமா­னங்­களை வாங்­கு­வது தொடர்­பில் 'போயிங்' நிறு­வ­னத்­து­ட­னும் விமான இயந்­தி­ரங்­களை விநி­யோ­கிக்­கும் 'ஜென­ரல் எலெக்­டி­ரிக்', 'சிஎ­ஃப்­எம் இண்­டர்­நே­ஷ­னல்' ஆகிய நிறு­வ­னங்­களு­ட­னும் நேற்று அது ஒப்­பந்­தம் செய்­து­கொண்­டது.

இந்­திய அர­சி­ட­மி­ருந்து சென்ற ஆண்டு ஏர் இந்­தியா நிறு­வ­னத்தை வாங்­கிய டாடா குழு­மம், நிறு­வ­னத்­திற்­குப் புது­மெ­ரு­கூட்டி போட்­டித்­தன்­மை­யு­டன் செயல்­பட விழை­கிறது.

நிறு­வ­னம் கைமா­றிய முத­லாம் ஆண்டு நிறை­வில் இந்த ஒப்­பந்­தம் செய்­து­கொள்­ளப்­பட்­டது.

மாதக்­க­ணக்­கில் நீடித்த பேச்சு­வார்த்­தைக்­குப் பிறகு, குறு­க­லான 190 போயிங் 737 மேக்ஸ் ரக விமா­னங்­கள், 20 போயிங் 787 ரக விமா­னங்­கள், 10 போயிங் 777எக்ஸ் ரக விமா­னங்­கள் ஆகி­ய­வற்றை வாங்­கு­வ­தற்­கான உடன்­ப­டிக்கை இது என்று ராய்ட்­டர்ஸ் செய்தி நிறு­வ­னம் கூறி­யது.

அடுத்த சில நாள்­களில், ஒரு நடை­பாதை மட்­டுமே கொண்ட ஏறக்­கு­றைய 235 ஏர்­பஸ் விமா­னங்­களும் அக­ல­மான 40 ஏர்­பஸ் ஏ350 ரக விமா­னங்­களும் வாங்­கப்­படும் என்று தெரி­விக்­கப்­பட்­டது. இருப்­பி­னும் இது­கு­றித்த அதி­கா­ர­பூர்வ அறி­விப்பு எப்­போது வெளி­யா­கும் எனத் தெரி­ய­வில்லை. 'ஏரோ இந்­தியா' விமா­னக் கண்­காட்சி அடுத்த மாதம் நடை­பெ­ற­வி­ருக்­கிறது.

இத்­த­கைய அறி­விப்­பு­கள் இந்­தக் கண்­காட்­சி­யில் வெளி­யா­வது வழக்­கம்.

ஏர் இந்­தியா நிறு­வ­னம் இது­கு­றித்த கேள்­விக்­குப் பதி­ல­ளிக்­க­வில்லை. விமா­னத் தயா­ரிப்பு நிறு­வ­னங்­க­ளான போயிங், ஏர்­பஸ் போன்­ற­வை­யும் கருத்­து­ரைக்க மறுத்­து­விட்­டன.

ஏர் இந்­தியா கிட்­டத்­தட்ட 500 புதிய விமா­னங்­களை வாங்­கக்­கூ­டும் என்று ராய்ட்­டர்ஸ் சென்ற மாதம் தக­வல் வெளி­யிட்­டி­ருந்­தது. இந்­தி­யா­வில் உள்­நாட்டு விமா­னப் பய­ணி­க­ளின் எண்­ணிக்கை சென்ற ஆன்டு 47 விழுக்­காடு அதி­க­ரித்­தது.

அடுத்த ஐந்து ஆண்­டு­களில் உள்­நாட்டு விமா­னச் சந்­தை­யில் 30 விழுக்­காட்டை வசப்­ப­டுத்­து­வது ஏர் இந்­தி­யா­வின் இலக்கு.

உள்­நாட்­டுச் சேவை, அனைத்­து­ல­கச் சேவை­ இரண்­டி­லும் ஏர் இந்தியா நிறு­வ­னம் கடும் போட்­டியை சந்­திக்கக்கூடும்.