கைரி நீக்கம்; ஹிஷாமுதீன் உசேன் இடைநீக்கம்

கைரி நீக்கம்; ஹிஷாமுதீன் உசேன் இடைநீக்கம்

2 mins read

மலே­சி­யா­வின் முன்­னாள் சுகா­தார அமைச்­சர் கைரி ஜமா­லு­தீன், அம்னோ கட்­சி­யி­லி­ருந்து நீக்­கப்­பட்­டுள்­ளார்.

அம்­னோ­வின் முன்­னாள் உத­வித் தலை­வ­ரும் மலே­சி­யா­வின் முன்­னாள் தற்­காப்பு அமைச்­ச­ரு­மான ஹிஷா­மு­தீன் உசேன்,

கட்­சி­யி­லி­ருந்து ஆறு ஆண்­டு

க­ளுக்கு இடை­நீக்­கம் செய்­யப்­பட்­டுள்­ளார். நேற்று முன்­தி­னம் மலே­சி­யத் தலை­ந­கர் கோலா­லம்­பூ­ரில் உள்ள அம்னோ தலை­மை­ய­கத்­தில் நடை­பெற்ற கூட்­டத்­தின்­போது கட்­சி­யின் தலைமை இந்த முடிவை எடுத்­தது.

மலேசியாவை ஆளும் கூட்டணியில் அம்னோ அங்கம் வகிக்கிறது.

கட்­சி­யின் நிலைப்­பாட்­டுக்கு திரு கைரி மதிப்பளிக்­க­வில்லை என்று தெரி­விக்­கப்­பட்­டது. திரு கைரி, முன்­னாள் மலே­சி­யப் பிர­த­மர் அப்­துல்லா படா­வி­யின் மரு­

ம­கன் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது. அண்­மை­யில் நடந்து முடிந்த மலே­சி­யப் பொதுத் தேர்­த­லில் அவர் சிலாங்­கூ­ரின் சுங்கை புலோ தொகு­தி­யில் போட்­டி­யிட்­டுத் தோற்­றார். கட்­சித் தலை­மைக்­கும் திரு கைரிக்­கும் இடையே விரி­சல் ஏற்­பட்­டி­ருந்­த­தா­க­வும் கூறப்­

ப­டு­கிறது. மலே­சி­யா­வின் பிர­த­ம­ரா­கப் பதவி வகிப்­பது தமது இலக்கு என்று தேர்­த­லுக்கு முன்பு திரு கைரி தெரி­வித்­தி­ருந்­தார். இது அம்னோ கட்­சித் தலை­வர் அக­மது ஸாஹிட் ஹமி­டிக்கு அவர் விடுத்த சவா­லா­கக்

கரு­தப்­பட்­டது.

"நான் மிக­வும் நேசிக்­கும்

கட்­சி­யி­லி­ருந்து நீக்­க­பட்­டுள்­ளேன். அம்­னோ­வுக்கு விசு­வா­ச­மாக இருந்­தேன்," என்று கட்­சி­யி­லி­ருந்து நீக்­கப்­பட்ட பிறகு டுவிட்­ட­ரில் பதி­விட்­டார் திரு கைரி. இதற்­கி­டையே, தேர்­த­லுக்­குப் பிறகு தொங்கு நாடா­ளு­மன்­றம் ஏற்­பட்­டதை அடுத்து, பெரிக்­கத்­தான் நேஷ­னல் தலை­வர் முகை­தீன் யாசின் பிர­த­ம­ராக வேண்­டும் என்று வெளிப்­ப­டை­யா­கக் கூறி, ஆத­ரவு திரட்­டி­ய­காரணத்தினால் செம்­பு­ரோங் நாடா­ளு­மன்ற வேட்­பா­ள­ரும் அம்­னோ­வின் முக்­கிய அர­சி­யல்­

வா­தி­களில் ஒரு­வ­ராக இருந்­த­

வ­ரு­மான ஹிஷா­மு­தீன் இடை­

நீக்­கம் செய்­யப்­பட்­டுள்­ள­தாக நம்­பப்­ப­டு­கிறது.

1946ஆம் ஆண்­டில் அம்னோ கட்­சியை நிறு­விய ஓன் ஜஃபார் இவ­ரு­டைய தாத்தா என்­பது குறிப்­பி­டத்­தக்­கது. மலே­சி­யா­வின் மூன்றா­வது பிர­த­ம­ரான உசேன் ஓன் இவ­ரது தந்தை.

திரு ஹிஷா­மு­தீ­னு­டன் வேறு சில முக்­கிய உறுப்­பி­னர்­களும் இடை­நீக்­கம் செய்­யப்­பட்­டுள்­ள­னர். இந்­நி­லை­யில், அம்னோ நீக்­கிய, இடை­நீக்­கம் செய்த அர­சி­யல்­வா­தி­க­ளுக்­குத் தனது ஆத­ரவு எப்­போ­தும் இருக்­கும் என்று பெரிக்­காத்­தான் நேஷ­னல் தெரி­வித்­துள்­ளது. அவர்­கள் அனை­

வ­ரும் பெர்­சத்து கட்­சி­யில் இணைய விண்­ணப்­பம் செய்­ய­லாம் என்று அக்­கட்­சி­யின் தலை­வர் முகை­தீன் யாசின் தெரி­வித்­துள்­ளார். அதே­போல, தங்­க­ளு­டன் இணைந்­து­கொள்­ளும்­படி பாஸ் கட்­சி­யும் கெராக்­கான் கட்­சி­யும் திரு கைரிக்கு அழைப்பு விடுத்­துள்­ளன.