வெள்ளம்: ஜோகூர், பாகாங், சாபாவில் 14,000 பேர் பாதிப்பு

1 mins read
7a1a9015-5a31-4571-8218-69a6f755eea5
-

இடைவிடாது பெய்துவரும் கனமழை காரணமாக மலேசியாவின் ஜோகூர், பாகாங், சாபா மாநிலங்களில் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது.

வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள இந்த மாநிலங்களில் ஏறத்தாழ 14,000 பேர் தங்கள் வீடுகளிலிருந்து வெளியேறியுள்ளனர்.

அவர்களில் பலரை மீட்புப் பணியாளர்கள் படகுகளில் துயர்துடைப்பு மையங்களுக்குப் பத்திரமாகக் கொண்டுபோய் சேர்த்தனர்.

ஜோகூரில் நிலைமை மோசமடைந்திருப்பதாகவும் அம்மாநிலத்தின் மெர்சிங், குளுவாங், கோத்தா திங்கி, பத்து பஹாட், செகாமட், தங்காக் ஆகிய நகரங்களிலிருந்து துயர்துடைப்பு மையங்களில் தஞ்சம் அடைந்தோர் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாகவும் மலேசிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.