கொவிட்-19 நெருக்கடிநிலையின்போது தேவைக்கு ஏற்ப கட்டப்படும் வீடுகளுக்கான (பிடிஓ) கட்டுமானப் பணிகள் தாமதமடைந்தன.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட இந்த பிடிஓ திட்டங்களில் 50 விழுக்காட்டுக்கும் மேற்பட்ட திட்டங்கள் நிறைவடைந்து
விட்டதாக வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் நேற்று கூறியது.
52 பிடிஓ திட்டங்கள் நிறை
வடைந்துவிட்டதாக கழகம் தெரிவித்தது.
"ஆக அண்மைய பிடிஓ கட்டுமானப் பணி நிறைவு விகிதம் கொவிட்-19 நெருக்கடி
நிலைக்கு முன்பு இருந்ததைவிட அதிகம். கடந்த ஐந்து ஆண்டுகளில் இதுவே ஆக அதிகமான நிறைவு விகிதம்," என்று கழகம் கூறியது.
அடுத்த இரண்டு ஆண்டுகளில் பிடிஓ திட்டம் தாமத
மடைவது தொடர்ந்து குறைக்கப்படும் என்று அது உறுதி அளித்தது.
நிர்ணயிக்கப்பட்ட தேதிக்குள் தயாராகாமல் தாமத
மடைந்த பிடிஓ வீடுகளின் விகிதம் 2021ஆம் ஆண்டில் 90 விழுக்காட்டுக்கும் அதிகமாக இருந்தது. ஆனால் அந்த விகிதம் தற்போது 40 விழுக்காடாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தாமதமடைந்து, தற்போது விற்பனைக்குத் தயாராக இருக்கும் பிடிஓ திட்டங்களில் பொங்கோல் வட்டாரத்தில் உள்ள நார்த்ஷோர் எட்ஜ் திட்டமும் ஒன்று. ஒப்பந்ததாரருக்கு ஏற்பட்ட நிதிப் பிரச்சினையால் பாதிக்கப்பட்ட சென்ஜா ரிட்ஜஸ், சென்ஜா ஹைட்ஸ், ஸ்கை விஸ்டா@புக்கிட் பாத்தோக் ஆகிய பிடிஓ திட்டங்களின்
கட்டுமானப் பணிகளும் நிறை
வடைந்துவிட்டன.
கொவிட்-19 நெருக்கடிநிலையால் பாதிக்கப்பட்டு, தாமத
மடைந்து இன்னும் நிறைவடையாத பிடிஓ திட்டங்களின் எண்ணிக்கையைக் கழகம் வெளியிடவில்லை.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாத நிலவரப்படி, ஆறு மாதங்கள் அல்லது அதற்கும் அதிகமான காலகட்டத்துக்குத் தாமத
மடைந்துள்ள பிடிஓ திட்டங்
களின் எண்ணிக்கை 58 ஆகும்.
ஒட்டுமொத்த திட்டங்கள் எண்ணிக்கையில் இது 60 விழுக்காட்டுக்கும் குறைவு.
இந்நிலையில், 94 வீவக திட்டங்களுக்கான கட்டுமானப் பணிகள் இன்னும் நடந்துகொண்டிருப்பதாக கடந்த வாரம் தெரிவிக்கப்பட்டது.
அவற்றில் கொவிட்-19 நெருக்கடிநிலையால் தடைபட்ட திட்டங்களும் அடங்கும் என்று கழகம் கூறியது. கொவிட்-19 பாதிப்பு குறைந்திருப்பதாலும் வெளிநாட்டு ஊழியர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாலும் கூடுதல் பிடிஓ திட்டங்கள் நிறைவடைந்திருப்பதாக கழகம் கூறியது.

