தோ பாயோவில் புதிய அடுக்குமாடிக் குடியிருப்பு

தோ பாயோவில் புதிய அடுக்குமாடிக் குடியிருப்பு

3 mins read
0b7aa8e9-a164-4b43-8a35-579f0edf6ef4
-

தோ பாயோ­வில் மேலும் புதிய அடுக்­கு­மாடி வீடு­கள் அமைய உள்­ளன. தோ பாயோ ரைஸ்- பிரேடல் ரைஸ் சந்­திப்­பில் உள்ள காலி இடம் வீட­மைப்­புக்­காக ஒதுக்­கப்­பட்டு உள்­ளது.

நகர மறு­சீ­ர­மைப்பு ஆணை­யத்­தின் பெருந்­திட்­டத்­தில் ஜன­வரி 20ஆம் தேதி வெளி­யி­டப்­பட்ட பரிந்­து­ரை செய்யப்­பட்ட திருத்­தத்­தில், கேல்­டி­காட் எம்­ஆர்டி நிலை­யத்­தி­லி­ருந்து 200 மீட்­டர் தொலை­வில் உள்ள பகு­தி கல்வி பயன்­பாட்­டி­லி­ருந்து குடி­யி­ருப்பு பயன்­பாட்­டிற்கு மாற்­றப்பட்டு உள்­ளது.

முன்பு இங்கு ஃபர்ஸ்ட் தோ பாயோ தொடக்­கப்­பள்ளி இருந்­தது. 1960களின் பிற்­ப­கு­தி­யி­லி­ருந்து தோ பாயோ லோரோங் 1ல் செயல்­பட்ட அந்­தப் பள்ளி, பின்­னர் பள்­ளி­கள் இணைப்­பைத் தொடர்ந்து 2002 ஜன­வ­ரி­யில் தோ பாயோ லோரோங் 8க்கு இடம்­மா­றி­யது.

அந்­தப் பள்­ளிக் கட்­ட­டம் இடிக்­கப்­ப­டு­வ­தற்கு முன்பு பல்­வேறு பள்­ளி­க­ளின் இடைக்­கால இட­மாக இருந்­தது.

அந்­தப் பகு­தி­யில் அதிக அடர்த்­தி­யான குடி­யி­ருப்பு இருக்­கும் என்று ஆணையம் கூறி­யது. அரு­கில் உள்ள போக்கு­வ­ரத்து வச­தி­க­ளால் எதிர்­காலக் குடி­யி­ருப்­பா­ளர்­கள் பய­ன­டை­வார்­கள் என்று ஆணையம் சுட்­டி­யது.

திட்­ட­மி­டப்­பட்­டுள்ள குடி­யி­ருப்­பில், குடி­யி­ருப்­பா­ளர்­க­ளின் தேவை­களை நிறைவு செய்­யும் வகை­யில் சில்­லறை வர்த்­தக இடங்­கள் போன்ற வச­தி­கள் இருக்­கும் என்று நகர மறு­சீ­ர­மைப்பு ஆணை­யப் பேச்­சா­ளர் கூறி­னார். தயா­ரா­ன­தும் முழு­வி­வ­ரங்­களும் அறி­விக்­கப்­படும் என்­றார் அவர்.

தோ பாயோ­வில் இருக்­கும் கல்வி நிறு­வ­னங்­கள் தற்­போதைய தேவையை பூர்த்தி செய்­யப் போது­மா­னவை என்று ஆணை­யம் குறிப்­பிட்­டது.

வீட­மைப்பு வளர்ச்­சிக் கழக வீடு­களா அல்­லது கொண்­டோ­மி­னிய குடி­யி­ருப்பா என்­ப­தைப் பொறுத்து, இப்­ப­கு­தி­யில் 850 வீடு­க­ளுக்கு மேல் கட்­டப்­ப­டக்­கூ­டும் என்று சொத்து ஆய்­வா­ளர்­கள் மதிப்­பிட்­டுள்­ள­னர்.

இந்த இடம் கேல்­டி­காட் எம்­ஆர்டி நிலை­யத்­திற்கு அருகே உள்­ளது. வட்ட ரயில் பாதை, தாம்­சன்-ஈஸ்ட் கோஸ்ட் ரயில் பாதை­க­ளி­லும் வடக்கு-தெற்கு ரயில் பாதை­யின் பிரே­டல் எம்­ஆர்டி அரு­கே­யும் உள்­ளது.

இது மேம்­பாட்­டா­ளர்­க­ளை­யும் வீடு வாங்­கு­வோ­ரை­யும் ஈர்க்­கும் என்று ஈஆர்ஏ ரியா­லிட்­டி­யின் ஆய்வு, ஆலோ­ச­னைப் பிரி­வின் தலை­வர் நிக்­க­லஸ் மேக் குறிப்­பிட்­டார்.

இந்­தப் பகு­தி­யி­லி­ருந்து 2 கிலோ­மீட்­ட­ருக்­குள் சில பிர­ப­ல­மான பள்­ளி­கள் உட்­பட பல பள்­ளி­கள் உள்­ள­தால், இங்கு கட்­டப்­படும் வீடு­கள் பெற்­றோர்­க­ளி­டையே பிர­ப­ல­மா­கும் என்றார் அவர்.

பொது வீட­மைப்­புக்­குப் பயன் படுத்­தப்­ப­டு­வ­தற்­குப் பதி­லாக தனி­யார் குடி­யி­ருப்பு மேம்­பாட்­டா­ள­ரி­டம் இந்த இடம் விற்­கப்­ப­டு­வ­தற்­கான அதிக வாய்ப்பு இருப்­ப­தாக திரு மேக் கூறினார்.

தோ பாயோ­வில் ஏற்­கெனவே பல வீவக வீடு­கள் இருப்­ப­தைக் குறிப்­பிட்ட ஆரஞ்ச்டீ அண்ட் டையின் ஆய்வு, பகுப்­பாய்­வுத் துறை­யின் மூத்த துணைத் தலை­வர் திரு­வாட்டி கிறிஸ்­டின் சன், நக­ரத்­தில் தனி­யார் வீடு­களுக்­கான தேவை அதி­கம் என்­றார்.

முதிர்ச்­சி­ய­டைந்த, எம்­ஆர்டி நிலை­யத்­திற்கு அரு­கா­மை­யில் இடம் இருப்­ப­தால், அங்கு அத்­த­கைய வசதி பிர­ப­ல­மா­கும்.

இப்­ப­கு­தி­யில் மறு­விற்­பனை வீடு­க­ளின் விலை ஒப்­பீட்­ட­ள­வில் அதி­க­மாக இருப்­ப­தால் பொது வீட­மைப்­புக்­குப் பயன்­படுத்­தப்­பட்­டா­லும் தேவை அதி­க­மா­க­வும் இருக்­கும்.

இப்­ப­கு­தி­யில் 2022 மே மாதம் அறி­விக்­கப்­பட்ட 'பிடிஓ' வீட்டுத் திட்டமான 'கிம் கியட் ஹைட்சி'ல் 385 வீடுகளுக்கு 2,483 விண்­ணப்­ப­தா­ரர்­கள் போட்­டி­யிட்­ட­னர் என்பதை அவர் சுட்டினார்.

இப்­ப­கு­தி­யில் ஏறக்­கு­றைய 1,000 கொன்டோமினிய வீடு­கள் அல்­லது 1,300 வீவக அடுக்­கு­மாடி குடி­யி­ருப்­பு­கள் வரை கட்­­லாம் என்­பது அவ­ரது மதிப்பீடு.

பரிந்­து­ரைக்­கப்­பட்­டுள்ள இந்த குடி­யி­ருப்­புப் பகு­திக்கு அருகே மற்­றொரு பிடிஓ திட்டமான 'தோ பயோ ரிட்ஜ்' 920 வீடு­க­ளு­டன் தற்­போது கட்டப்­பட்டு வரு­கிறது.

அடுத்த 10 முதல் 15 ஆண்­டு­களில் வளர்ச்­சிக்கு வழி­காட்­டும் நகர மறுசீர­மைப்பு ஆணையத்­தின் பெருந்திட்­டத்­தின் அடிப்­ப­டை­யில், தோ பாயோ மேற்­குப் பகு­தி­யில் அதி­க­மான வீடு­கள் உள்­ளன.

மேலும், தோ பாயோ லிங்­கின் இரு­பு­ற­மும் நிலப்­ப­ரப்­பு­களும் வீட­மைப்­புக்­காக ஒதுக்­கப்­பட்­டுள்­ளன.