அன்­வார் இப்­ரா­கிம் சிங்கப்பூர் வருகை

அன்­வார் இப்­ரா­கிம் சிங்கப்பூர் வருகை

2 mins read

மலே­சி­யப் பிர­த­மர் அன்­வார் இப்ரா­ஹிம் இன்று சிங்­கப்­பூர் வரு­கி­றார். சென்ற நவம்­பர் 24ஆம் தேதி மலே­சி­யா­வின் 10வது பிரத­ம­ரா­கப் பத­வி­யேற்ற பிறகு திரு அன்­வார் சிங்­கப்­பூ­ருக்கு மேற்­கொள்­ளும் முதல் அதி­கா­ரத்­துவ பய­ணம் இது.

மலே­சி­யா­வின் நிதி அமைச்­ச­ரு­மான திரு அன்­வார், அதி­பர் மாளி­கை­யில் நடை­பெ­றும் வரவேற்பு நிகழ்வில் கலந்­து­கொள்­வார் என்று சிங்­கப்­பூர் வெளி­யு­றவு அமைச்சு நேற்று வெளி­யிட்ட அறிக்­கை­யில் தெரி­வித்­துள்­ளது.

அதி­பர் ஹலிமா யாக்­கோப்பை சந்­திக்­கும் மலே­சி­யப் பிர­த­மர், பிர­த­மர் லீ சியன் லூங்­கு­டன் பேச்சு நடத்­து­வார். அன்­வா­ருக்கு திரு லீ மதிய விருந்­த­ளிப்­பார்.

திரு அன்­வா­ரின் வருகை, சிங்­கப்­பூர்- மலே­சியா இரு நாடு­க­ளுக்­கும், மக்­க­ளுக்­கும் இடையே உள்ள நெருக்­க­மான, நீடித்த உறவைக் ­கோ­டிட்­டுக் காட்டு­வதாக வெளி­யு­றவு அமைச்சு கூறி­யது.

திரு அன்­வா­ரின் ஒரு­நாள் பய­ணத்­தின்­போது இரு தலை­வர்­களும் மூன்று ஒப்­பந்­தங்­களில் கையெ­ழுத்­தி­டு­வார்­கள்.

சிங்­கப்­பூர் வர்த்­தக தொழில் அமைச்சு, மலே­சி­யா­வின் அனைத்­து­லக வர்த்­தக தொழில் அமைச்சு ஆகி­ய­வற்­றுக்கு இடையே மின்­னி­லக்­கப் பொரு­ளி­யல், பசு­மைப் பொரு­ளி­யல் குறித்த ஒப்­பந்­தங்­கள்; சிங்­கப்­பூரின் தொடர்பு தக­வல் அமைச்சு, மலே­சி­யா­வின் தக­வல் தொடர்பு மின்­னி­லக்க அமைச்சு ஆகி­ய­வற்­றுக்கு இடையே தனி­நபர் தரவு பாது­காப்பு, இணைய பாது­காப்பு, மின்­னி­லக்­கப் பொருளி­யல் ஆகி­ய­வற்­றில் ஒத்­து­ழைப்பு குறித்த புரிந்­து­ணர்வு ஒப்­பந்­த­மும் கையெ­ழுத்­தா­கும்.

திரு அன்­வா­ரு­டன் மலே­சிய வெளி­யு­றவு அமைச்­சர் சாம்பிரி அப்துல் காதிர், போக்­கு­வ­ரத்து அமைச்­சர் ஆண்டனி லோக், அனைத்­து­லக வர்த்­தக, தொழில்­துறை அமைச்­சர் தெங்கு சஃப்ருல் அஸிஸ், தக­வல் தொடர்பு மின்­னி­லக்க அமைச்­சர் ஃபாமி ஃபாட்சில், சர­வாக் முத­ல­மைச்­சர் ஜொஹாரி தும் அபாங், ஜோகூர் முத­லமைச்சர் ஓன் ஹஃபிஸ் கசி­யும் வருகை தர­வுள்­ள­தாக அமைச்­சின் அறிக்கை கூறி­யது.

முன்­ன­தாக ஜன­வரி மாதம் மலே­சி­யா­வில் திரு அன்­வாரைச் சந்­தித்த வெளி­யு­றவு அமைச்­சர் விவி­யன் பால­கி­ருஷ்­ணன், இரு நாடு­க­ளுக்­கும் இடை­யி­லான உன்­ன­த­மான நீண்­ட­கால உற­வு­களை மறு­வு­று­திப்­ப­டுத்­தி­னார்.

கொவிட்-19 கொள்­ளை­நோய் பர­வ­லால் இடை­யூ­று­கள் ஏற்­பட்­ட­போ­தி­லும் வர்த்­த­கம் தொடர்ந்து வளர்ந்து வரு­வ­தாக அவர் கூறி­னார். 2021ல், இரு நாடு­க­ளுக்­கும் இடை­யி­லான மொத்த வர்த்­த­கம் $128 பில்­லி­யன் ஆகும்.

இரு­த­ரப்­புத் திட்­டங்­களில் ஒன்­றான ஜோகூர் பாரு-சிங்­கப்­பூர் விரைவு போக்­கு­வ­ரத்­துச் சேவை 2026 இறு­தி­யில் நிறை­வு­பெ­றும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

பரு­வ­நிலை மாற்­றங்­களை குறைப்­பது, கரிம தடங்­களை குறைப்­பது, மின்­னி­லக்­கம் மற்­றும் பசு­மைப் பொரு­ளி­யல் போன்ற துறை­களில் புதிய இரு­த­ரப்பு ஒத்­து­ழைப்­பு­கள் முக்­கி­ய­மா­னவை என்று டாக்­டர் விவி­யன் கூறினார்.

கடந்த நவம்­பர் மாதம் பிர­த­மர் பதவி ஏற்­ற­போது திரு அன்­வாரை வாழ்த்­திய பிர­த­மர் லீ சியன் லூங், விரை­வில் சிங்­கப்­பூர் வரு­மாறு அழைத்­தி­ருந்­தார்.

பசுமை, மின்­னி­லக்­கப் பொரு­ளி­யல்­கள் தொடர்­பான இரு­த­ரப்பு ஒப்­பந்­தங்­கள் வணி­கங்­க­ளுக்­கும் மக்­க­ளுக்­கும் புதிய வாய்ப்­பு­களை உரு­வாக்­கும் என்­றும் அவர் குறிப்­பிட்­டார்.

எம்ஜிஆரைப் போற்றிய அன்வார் - பக்கம் 7