ரஜினிகாந்தின் பெயர், படம், குரலைப் பயன்படுத்தத் தடை

ரஜினிகாந்தின் பெயர், படம், குரலைப் பயன்படுத்தத் தடை

1 mins read
ef8fb940-dcd4-42ba-b8d4-c074adbe0d6b
-

நடி­கர் ரஜி­னி­காந்­தின் புகைப்­படம், பெயர், குரல், அடையாளம் எதை­யுமே அனு­ம­தி­யின்றி பயன்­ப­டுத்­தக்­கூ­டாது என்று அறி­விப்பு விடுக்­கப்­பட்­டுள்­ளது.

மீறி பயன்­ப­டுத்­தி­னால் சிவில், குற்றவியல் நட­வ­டிக்­கை­கள் எடுக்­கப்­படும் என்று அவ­ரது வழக்­க­றி­ஞர் இளம்­பா­ரதி பொதுநல அறி­விப்பை வெளி­யிட்­டுள்­ளார்.

"இந்த அறி­விப்பு சென்னை போயஸ்­கார்­டன் முக­வ­ரி­யில் வசித்த வரும் நடி­கர் ரஜி­னி­காந்த் சார்­பில் வெளி­யி­டப்­ப­டு­கிறது.

"ரஜி­னி­காந்­தின் பெயர், குரல், புகைப்­ப­டம் ஆகி­யவை சில­ரால் தவ­றா­கப் பயன்­ப­டுத்­தப்­பட்­டு­வ­ரு­வ­தா­கத் தக­வல் கிடைத்­தி­ருக்­கிறது.

"மேலும், அவ­ரின் சூப்­பர் ஸ்டார் அடை­யா­ளத்­தைப் பயன்­ப­டுத்தி மக்­கள் மத்­தி­யில் சிலர் பிர­ப­ல­மாக முயல்­கி­றார்­கள். இது­போன்று அவ­ரின் அனு­ம­தி­யில்­லா­மல், சமூக வலை­த்த­ளங்­கள், பிற தளங்­களில் பயன்­ப­டுத்­து­வது குழப்­பத்தை ஏற்­ப­டுத்­தும்.

"ரஜி­னி­காந்த் மட்­டுமே தன்­னு­டைய பெயர், குரல், புகைப்­படம், அடை­யா­ளத்தை வர்த்­த­கப் பயன்­பாட்­டுக்கு அனு­ம­திக்­காமல் இருக்­கி­றார்.

"எனவே அவ­ரின் தனித்­தன்­மையை வர்த்­த­கப் பயன்­பாட்­டுக்கு யாரா­வது பயன்­ப­டுத்­தி­னால் அவர்­கள்­மீது, சிவில் மற்­றும் குற்றவியல் தண்டனைச் சட்­டத்­தின்­கீழ் நட­வடிக்கை எடுக்­கப்­படும்," என்று அந்த அறி­விப்­பில் தெரி­விக்­கப்­பட்­டி­ருக்­கிறது.

ரஜி­னி­காந்­தின் பெயர், புகைப்­படங்­கள், குரலை அவ­ரது அனுமதி­யின்றிப் பயன்­ப­டுத்­து­வ­தாக குற்­ற­ச்சாட்­டு­கள் எழுந்­தி­ருந்­தது. இந்த நிலை­யில் அதனைத் தடுக்­கும் வித­மாக இந்த அறி­விப்பு வெளி­யி­டப்­பட்­டுள்­ள­தாகக் கூறப்­படுகிறது.