ஆக்லாந்தை முடக்கிப்போட்ட அடைமழை

ஆக்லாந்தை முடக்கிப்போட்ட அடைமழை

1 mins read
57c20c83-7e7d-402b-9d59-1b9e80747be5
-

நியூ­சி­லாந்­தின் வடக்­குத் தீவில் கன­மழையால் இறந்­த­வர்­க­ளின் எண்­ணிக்கை நேற்று நான்­காக உயர்ந்­தது. 1.6 மில்­லி­யன் மக்­கள் வசிக்­கும் நியூ­சி­லாந்­தின் மிகப்­பெ­ரிய நக­ர­மான ஆக்­லாந்­தில் சென்ற வெள்­ளிக்கிழ­மை­யி­லி­ருந்து வானத்­தைக் கிழித்­துக் கொண்டு மழை கொட்­டித் தீர்க்­கிறது. சாலை­களில் வாக­னங்­கள் வெள்­ளத்­தில் மிதக்­கின்­றன. நிலப் பகு­தி­களை வெள்­ளம் மூழ்­க­டித்­துள்­ளது.

வானிலை முன்­ன­றி­விப்­பு­களை அடுத்து, இன்­றும் மிக மோச­மான வானி­லையை எதிர்­பார்க்­க­லாம் என்று ஆக்­லாந்து அவ­சரகால நிர்­வாக கட்­டுப்­பாட்­டா­ளர் ரேச்­சல் கேலஹர் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் கூறி­னார்.

ஆக்­லாந்­தி­லி­ருந்து 220 கிலோ­மீட்­டர் தொலை­வில் உள்ள வைடோமோ மாவட்­டத்­தில் நேற்று முன்­தி­னம் அவ­சரநிலை பிர­க­ட­னப்­ப­டுத்­தப்­பட்­டது. இது வடக்­குத் தீவின் பெரும் பகு­தி­களை­யும் உள்­ள­டக்­கி­யது. வைடோமோ மாவட்­டத்­தில் அடைமழை­யி­னால் வெள்­ள­மும் சாலைகளில் சறுக்­கல், சேதங்­கள் ஏற்­பட்­டுள்­ளதை அடுத்து அங்கு போக்­கு­வ­ரத்து நிர்­வா­கம், சாலை மூடல்­களில் உதவி வரு­வ­தாக காவல் துறை கூறியது.

ஆயி­ரக்­க­ணக்­கான கட்­ட­டடங்­களில் மின்­சா­ரம் இன்­றி­யும் நூற்­றுக்­க­ணக்­கான கட்­டங்­களில் தண்­ணீர் விநி­யோ­கம் இன்­றி­யும் இருப்­ப­தாக அதி­கா­ரி­கள் நேற்று கூறி­னர்.