2022: சிங்கப்பூரில் 40 ஆண்டுகளில் ஆக அதிக அளவு மழை பெய்த ஆறாவது ஆண்டு

2022: சிங்கப்பூரில் 40 ஆண்டுகளில் ஆக அதிக அளவு மழை பெய்த ஆறாவது ஆண்டு

1 mins read
82847609-a368-4a11-ab12-79c3c3ab12a8
-

சிங்­கப்­பூ­ரில் கடந்த 40 ஆண்­டு­களில் ஆக அதிக மழை பெய்த ஆண்­டு­களில் சென்ற ஆண்­டும் ஒன்று. 2022ல் இரண்டு மாதங்­களில் வர­லாறு காணாத அளவு மழை­யும் பெய்­தது; அதே­போல் இரண்டு மாதங்­களில் ஆக அதிக வெப்­பம் நில­வி­யது.

கடந்த 1980ஆம் ஆண்­டுக்­குப் பிறகு ஆக அதிக மழை பெய்த ஆண்­டு­க­ளின் பட்­டி­ய­லில் சென்ற ஆண்டு ஆறா­வது இடத்­தில் உள்­ள­தாக வானிலை ஆய்­வ­கம் தெரி­வித்­தது.

தென்­கி­ழக்­கா­சி­யா­வில் அதிக மழை பெய்­யக் கார­ண­மான லா நினா இயற்கை நிகழ்­வும் இதற்­கொரு கார­ணம்.

சிங்­கப்­பூ­ரில் சென்ற ஆண்டு முழு­வ­தும் பெய்த சரா­சரி மழை­யின் அளவு, 1991 முதல் 2020 வரை­யி­லான சரா­ச­ரி­யை­விட 19 விழுக்­காடு அதி­கம் எனக் கூறப்­பட்­டது.

சென்ற ஆண்டு அக்­டோ­பர் மாதம் 412 மில்லிமீட்டர் மழை பெய்தது. அது 40 ஆண்­டில் ஆக அதிக மழை என்றும், சென்ற ஆண்டு மே மாதம் வெப்­ப­நிலை ஆக அதி­க­மாக 36.7 டிகிரி செல்­சி­யஸ் பதி­வா­ன­தா­க­வும் வானிலை ஆய்­வ­கம் கூறி­யது.

சென்ற ஆண்டு மொத்­தம் 210 நாள்­கள் மழை பெய்­தது.

இருப்­பி­னும் சென்ற ஆண்­டின் வரு­டாந்­தர சரா­சரி வெப்­ப­நிலை, 1929க்குப் பிறகு 10வது ஆக அதி­க­மான வெப்­ப­நிலை என்­றும் சிங்­கப்­பூ­ரின் வெப்­ப­நி­லைப் போக்கு உல­கெங்­கும் பதி­வா­கும் வெப்­ப­நிலைக்கு ஏற்­பவே இருப்­ப­தா­க­வும் ஆய்­வ­கம் கூறி­யது.