பாகிஸ்தான் பள்ளிவாசலில் குண்டுவெடிப்பு; பலர் பலி

பாகிஸ்தான் பள்ளிவாசலில் குண்டுவெடிப்பு; பலர் பலி

1 mins read
b752bf7d-faf3-4477-9040-f204343449f4
-

பாகிஸ்­தா­னின் பெஷா­வர் நக­ரில் உள்ள பள்­ளி­வா­ச­லில் நேற்று நடந்த குண்­டு­வெ­டிப்­பில் 45க்கு மேற்பட்டோர் உயி­ரி­ழந்­த­னர். மேலும் 150க்கு மேற்­பட்­டோர் காய­ம­டைந்­த­னர்.

உயி­ரி­ழந்­தோ­ரில் பெரும்­பா­லோர் காவல்­துறை அதி­கா­ரி­கள் என்­றும் அவர்­கள் நண்­ப­கல் தொழு­கைக்­கா­கக் கூடி­யி­ருந்­த­தா­க­வும் தெரி­விக்­கப்­பட்­டது.

மாநி­லக் காவல்­துறை, பயங்­க­ர­வாத ஒழிப்­புப் பிரிவு ஆகி­ய­வற்­றின் தலை­மை­ய­கங்­கள் அமைந்­தி­ருக்­கும் வளா­கத்­திற்­குள் அந்­தப் பள்­ளி­வா­சல் இருப்­ப­தாக பெஷா­வர் மாநி­லக் காவல்­து­றைத் தலை­வர் இஜாஸ் கான் கூறி­னார்.

தாக்­கு­தல்­கா­ரர் தனது உட­லில் வெடி­பொ­ரு­ளைப் பிணைத்­துக்­கொண்டு அங்கு வந்து அதை வெடிக்­கச் செய்­தி­ருக்­க­லாம் என்­பதை மறுப்­ப­தற்­கில்லை என்­றார் அவர். பள்­ளி­வா­ச­லுக்­குள் சிறி­த­ளவு வெடி­பொ­ருள் காணப்­பட்­ட­தா­க­வும் அவர் குறிப்­பிட்­டார். தாக்­கு­த­லுக்கு இன்­னும் யாரும் பொறுப்­பேற்­றுக்­கொள்­ள­வில்லை.

தாக்­கு­தல் நடந்த நேரத்­தில், ஏறக்­கு­றைய 260 பேர் அங்கு இருந்­த­தா­கக் கூறப்­பட்­டது.குண்டு வெடித்­த­தால் சுவர் ஒன்று இடிந்து விழுந்­த­தா­கத் தெரி­கிறது. சிலர் அந்த இடி­பாடு­களில் சிக்­கி­யி­ருக்­கக்­கூ­டும் என்று அஞ்­சப்­ப­டு­கிறது.

மீட்­புப் பணி­கள் தொடர்­கின்­றன. பாகிஸ்­தா­னிய உள்­துறை அமைச்­சர் ரானா சனா­வுல்லா, விரி­வான விசா­ரணை நடத்த உத்­த­ர­விட்­டுள்­ள­தாக பாகிஸ்­தா­னிய ஊட­கங்­கள் கூறின.