சேர்ந்து செயல்பட்டால் கண்கூடான நன்மைகள்: லீ

சேர்ந்து செயல்பட்டால் கண்கூடான நன்மைகள்: லீ

2 mins read
3ed04473-7358-40f9-982c-fe2a8337066b
-

நெருங்­கிய நட்பு நாடு­கள் என்ற முறை­யில் சிங்­கப்­பூர், மலே­சியா இரண்­டின் எதிர்­கா­ல­மும் பின்­னிப் பிணைந்­தி­ருப்­ப­தாக பிர­த­மர் லீ சியன் லூங் கூறி­யி­ருக்­கி­றார்.

இரு நாடு­களும் ஆக்­க­க­ர­மாக ஒத்­து­ழைத்­தால், இரு­தரப்­புக்­கும் வெற்றி கிட்­டும். இரு நாட்டு மக்­களும் வர்த்­த­கங்­களும் நன்­மை­ய­டைய முடி­யும் என்­றார் அவர்.

மலே­சி­யப் பிர­த­மர் அன்­வார் இப்­ரா­ஹி­முக்கு மதிய விருந்து அளித்து உப­ச­ரித்த வேளை­யில் திரு லீ இவ்­வாறு கூறி­னார்.

மலே­சி­யா­வின் பிர­த­ம­ரா­கப் பொறுப்­பேற்­றுக்­கொண்ட பிறகு திரு அன்­வார் இப்­ரா­ஹிம் நேற்று சிங்­கப்­பூ­ருக்கு முதல்­மு­றை­யாக அதி­கா­ரத்­து­வப் பய­ணம் மேற்­கொண்­டார்.

இரு நாடு­களும் தொடர்ந்து ஒத்­து­ழைத்து இரு­த­ரப்பு உறவை மேம்­ப­டுத்­து­வது குறித்­துத் திரு லீ மகிழ்ச்சி தெரி­வித்­தார். அதற்­குப் பதி­ல­ளித்த மலே­சி­யப் பிர­த­மர் இரு­த­ரப்பு உற­வில் தீர்க்க இய­லா­தது என்று எந்­தப் பிரச்­சி­னை­யும் இல்லை என்­றார். மலே­சி­யா­வும் சிங்­கப்­பூ­ரும் மிகச் சிறந்த அண்டை நாடு­கள். இருநாட்டு மக்­க­ளுக்­கும் கூடு­தல் நன்­மை­ய­ளிக்­கும் வகை­யில் இரண்­டும் மேலும் இணைந்து செயல்­பட இய­லும் என்­றார் திரு அன்­வார்.

நேற்­றுக் காலை தாங்­கள் இரு­வ­ரும் பல­னுள்ள கலந்­து­ரை­யா­டலை நிகழ்த்­தி­ய­தா­க­வும் நிலு­வை­யில் இருக்­கும் இரு­த­ரப்பு விவ­கா­ரங்­கள் தொடர்­பில் முன்­னேற்­றம் காண்­பது குறித்­துக் கலந்­து­பே­சி­ய­தா­க­வும் திரு லீ கூறி­னார்.

பிர­த­மர் அன்­வா­ரின் ஒத்­து­ழைப்­போடு சிங்­கப்­பூர்- மலே­சியா உற­வு­கள் புதிய உச்­சத்தை எட்­டும் என்று தாம் நம்­பு­வ­தா­கத் திரு லீ சொன்­னார்.

இரு நாடு­களும் புவி­யி­யல் ரீதி­யா­கப் பிணைந்­துள்­ளன. இரு­த­ரப்­புக்­கும் பொது­வான வர­லாறு உண்டு என்­ப­தை­யும் இரு நாட்டு மக்­க­ளுக்கு இடை­யில் ஆழ­மான குடும்ப, கலா­சா­ரத் தொடர்பு இருப்­ப­தை­யும் அவர் சுட்­டி­னார்.

மலே­சி­யா­வில் சிங்­கப்­பூர் $56 பில்­லி­ய­னுக்­கு­மேல் முத­லீடு செய்­துள்­ளது. இது மலே­சி­யப் பொரு­ளி­யல்­மீ­தான சிங்­கப்­பூ­ரின் நம்­பிக்­கை­யைப் பிர­தி­ப­லிப்­ப­தா­கத் திரு லீ குறிப்­பிட்­டார்.

கொவிட்-19 கால­கட்­டத்­தில் இரு நாடு­களும் ஒன்­றுக்­கொன்று கைகொ­டுத்­தன. விநி­யோ­கம் தடை­ப­ட­வில்லை என்று கூறிய அவர் திரு அன்­வா­ரு­டன் தமக்கு நீண்­ட­கா­லத் தொடர்பு உண்டு என்­றார்.

மலே­சிய ஊழி­யர்­கள் அதி­கா­லை­யில் எழுந்து சிங்­கப்­பூர் வர வரி­சை­யில் காத்­தி­ருப்­பது குறித்த திரு லீயின் அக்­கறை தம்மை நெகிழ்த்­தி­ய­தாக திரு அன்­வார் கூறி­னார். இதற்­குத் தீர்­வு­காண்­பது தங்­கள் இரு­வ­ரின் விருப்­பம் என்­றார் அவர்.

இரு நாடு­களும் உண­வுப் பாது­காப்­பில் ஒத்­து­ழைப்பை மேம்­ப­டுத்­த­லாம்.

சிங்­கப்­பூ­ரு­டன் உற­வைத் தொடர்­வதே மலே­சி­யா­வின் விருப்­பம் என்­று பிரதமர் அன்வார் குறிப்பிட்டார்.

தமது நிர்வாகம் புதியது என்றாலும் சிங்கபூருடனான உறவைப் பொறுத்தவரை தாமும் தமது அமைச்சரவையும் தெளிவான நிலைப்பாட்டில் இருப்பதாக திரு அன்வார் கூறினார்.

மேலும் செய்தி பக்கம் 2ல்