சிங்கப்பூரர்கள் நெடுநாள் வாழ, வேலை செய்ய உதவும் திட்டம்

சிங்கப்பூரர்கள் நெடுநாள் வாழ, வேலை செய்ய உதவும் திட்டம்

3 mins read

சிங்­கப்­பூ­ரர்­கள் மூப்­ப­டை­யும்­போது தங்­கள் ஆரோக்­கி­யத்தை மேம்­படுத்­த­வும், காக்­க­வும் உத­வும் தேசிய அள­வி­லான திட்­டம் கூடு­த­லா­னோ­ரைச் சென்­ற­டை­ய­வி­ருக்­கிறது. அடுத்த ஐந்து ஆண்­டு­களில் 50 வய­தும் அதற்கு மேற்­பட்ட வய­தும் நிரம்­பிய அரை மில்­லி­ய­னுக்­கும் மேற்­பட்­டோ­ருக்கு இது உதவும்.

'நன்­றாக வாழ்­வோம், சிறப்­பு­டன் முது­மை­ய­டை­வோம்' என்­பது இத்திட்­டத்­தின் பெயர். சுகா­தார மேம்­பாட்டு வாரி­ய­மும் மக்­கள் கழ­க­மும் இதை இணைந்து நடத்துகின்­றன.

2015ல் அறி­விக்­கப்­பட்ட வெற்­றி­க­ர­மாக மூப்­ப­டை­தல் எனும் சிங்­கப்­பூ­ரின் செய­லாக்­கத் திட்­டத்­தின் மேம்­ப­டுத்­தப்­பட்ட அங்­க­மாக இது அமை­யும். வய­தான சிங்­கப்­பூ­ரர்­கள் நீண்­ட­கா­லம் பணி­செய்­ய­வும் சமூ­கத்­து­டன் தொடர்­பில் இருக்­க­வும் வழி­வ­குப்­பது இதன் நோக்­கம்.

ஹவ்­காங்­கில் உள்ள சி யுவான் சமூக மன்­றத்­தில் நேற்று நடை­பெற்ற இத்­திட்­டத்­தின் தொடக்க நிகழ்ச்­சி­யில் சுகா­தார அமைச்­சர் ஓங் யி காங் கலந்­து­கொண்­டார். மூப்­ப­டை­தல் தொடர்­பான அம்­சங்­க­ளுக்­கான அமைச்­சர்­நி­லைக் குழு இதற்கு ஏற்­பாடு செய்­தி­ருந்­தது.

சிங்­கப்­பூ­ரில் 2030ஆம் ஆண்­டில் நான்­கில் ஒரு­வர் 65 அல்­லது அதற்கு மேற்­பட்ட வயது நிரம்­பி­ய­வ­ராக இருப்­பார். சிங்­கப்­பூ­ரர்­க­ளின் ஆயுட்­கா­லம் அதி­க­ரித்­தி­ருப்­ப­தும் தம்­ப­தி­யர் குறை­வான எண்­ணிக்­கை­யில் பிள்­ளை­க­ளைப் பெற்­றுக்­கொள்­வ­தும் இதற்­குக் கார­ணங்­கள். முதி­யோ­ரில் கூடு­த­லா­னோர் தனி­யாக வசிப்­பர் என்­றும் கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளது.

'நன்­றாக வாழ்­வோம், சிறப்­பு­டன் முது­மை­ய­டை­வோம்' திட்­டத்­தின்­கீழ் இத­யம், ரத்த நாளங்­கள் ஆகி­ய­வற்­றின் செயல்­தி­றனை அதி­க­ரிக்க உத­வும் 'ஏரோ­பிக்ஸ்' வகை­யான உடற்­ப­யிற்சி, சீனப் பாரம்­ப­ரிய மருத்­து­வ­ மு­றை­யி­லான 'சி கோங்' உடற்­ப­யிற்சி போன்ற நட­வ­டிக்­கை­க­ளுக்கு ஏற்­பாடு செய்­யப்­படும்.

இவற்­று­டன், மன­ந­லம் குறித்­துக் கற்­பிக்­கும் பயி­ல­ரங்­கு­களும் இடம்­பெ­றும். சமூக மன்­றங்­கள், துடிப்­பு­டன் முது­மை­ய­டை­வ­தற்­கான நிலை­யங்­கள் போன்­ற­வற்­றில் இவை தற்­போது படிப்­ப­டி­யாக அறி­மு­கம் செய்­யப்­ப­டு­கின்­றன.

'நன்­றாக வாழ்­வோம், சிறப்­பு­டன் முது­மை­ய­டை­வோம்' திட்­டத்­தில் கூடு­த­லா­னோரை இணைப்­ப­தற்கு அர­சாங்­கம் முய­லும் வேளை­யில், இவ்­வாண்­டுப் பிற்­பா­தி­யில் தொடங்­கப்­படும் 'ஹெல்­தி­யர் எஸ்ஜி' திட்­டத்­தி­லும் அதி­க­மா­னோர் பதிவு செய்­வர் என்று நம்­பு­வ­தாக அமைச்­சர் ஓங் குறிப்­பிட்­டார்.

'ஹெல்­தி­யர் எஸ்ஜி' திட்­டத்­தின்­கீழ், 60ம், அதற்கு மேற்­பட்ட வய­தும் நிரம்­பி­ய­வர்­கள் குடும்ப மருத்­து­வர் ஒரு­வ­ரு­டன் பதி­வு­செய்­து­கொள்­ளும்­படி அழைப்பு விடுக்­கப்­படும். அவர்­க­ளுக்­குத் தனிப்­பட்ட பரா­ம­ரிப்­புத் திட்­டத்தை உரு­வாக்­கு­வது இதன் நோக்­கம்.

மேலும், 'நன்­றாக வாழ்­வோம், சிறப்­பு­டன் முது­மை­ய­டை­வோம்' திட்­டத்­தின்­கீழ், முதிய ஊழி­யர்­க­ளைப் பணி­ய­மர்த்­து­வதை ஊக்­கு­விக்­கும் வகை­யில் மானி­யம், நிதி­யு­த­வித் திட்­டம் ஆகி­யவை மேலும் விரி­வு­ப­டுத்­தப்­படும். மாத சம்­ப­ள­மாக $4,000 வரை பெறும் 60 அல்­லது அதற்கு மேற்­பட்ட வய­து­டைய ஊழி­யர்­களை வேலைக்கு அமர்த்­தி­னால் அளிக்கப்படும் சம்­பள உதவி திட்­டம் 2025ஆம் ஆண்­டு­வரை நீட்­டிக்­கப்­படும்.

கடந்த 2020ஆம் ஆண்டு அறி­விக்­கப்­பட்ட இந்த சம்­பள உத­வித் திட்­டத்­தின்­கீழ், 55 வய­துக்கு மேற்­பட்ட ஊழி­யர்­க­ளைப் பணி­ய­மர்த்­தும் நிறு­வ­னங்­களுக்கு இந்த ஊழி­யர்­க­ளின் மாதச் சம்­ப­ளத்­தில் எட்டு விழுக்­காடு வரை அர­சாங்­கம் நிதி­யு­தவி வழங்­கும்.

சென்ற ஆண்டு செப்­டம்­பர் மாத நில­வ­ரப்­படி ஏறக்­கு­றைய $450 மில்­லி­யன் சம்­பள உதவி வழங்­கப்­பட்­டுள்­ளது. இதன் மூலம், 460,000 மூத்த ஊழி­யர்­களும் 100,000 நிறு­வ­னங்­களும் பல­ன­டைந்­துள்­ள­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது.

பகுதிநேர மறு­வே­லை­வாய்ப்­புத் திட்­டம், நீக்­குப்போக்­கான வேலைத் திட்­டம் ஆகி­ய­வற்றை நிறு­வ­னங்­கள் கடைப்­பி­டிப்­பதை ஊக்­கு­விக்­கும் வகை­யில் இதற்­கான மானி­ய­மும் 2025ஆம் ஆண்டு வரை நீட்­டிக்­கப்­பட்­டுள்­ளது. தகு­தி­பெ­றும் ஒவ்­வொரு மூத்த ஊழி­ய­ருக்­கும் நிறு­வ­னம் $2,500 சம்­பள ஆத­ர­வைப் பெற இது வகை­செய்­யும்.

கடந்த 2015ல் மக்­கள்­தொ­கை­யில் எட்­டில் ஒரு­வர் 65 அல்­லது அதற்கு மேற்­பட்ட வயது நிரம்­பி­ய­வ­ராக இருந்­தார். அப்­போது அர­சாங்­கம் $3 பில்­லி­யன் மதிப்­புள்ள வெற்­றி­க­ர­மாக மூப்­ப­டை­தல் எனும் திட்­டத்தை அறி­வித்­தது. மூத்­தோர் கற்­றல், தொண்­டூ­ழி­யம், யாரை­யும் சாரா­மல் வாழ்­தல் ஆகிய வாய்ப்­பு­க­ளைப் பெற அது கைகொ­டுத்­தது.

தற்­போது மறு­ஆய்வு செய்­யப்­பட்ட இத்­திட்­டம் கூடு­த­லான சமூக திட்டங்களில் கவ­னம் செலுத்­து­கிறது. இதன் தொடர்­பில், 40க்கு மேற்­பட்ட சந்­திப்­பு­களில் 5,000க்கு மேற்­பட்ட சிங்­கப்­பூ­ரர்­க­ளி­டம் கருத்­த­றி­யப்­பட்­டது. வருங்­கால முதி­யோர் கல்வி அறி­வும் தொழில்­நுட்ப அறி­வும் உடை­ய­வர்­க­ளா­க­வும் வேறு­பட்ட நட­வ­டிக்­கை­களில் ஆர்­வ­மு­டை­யோ­ரா­க­வும் இருப்­பர் என்று சுகா­தார அமைச்சு குறிப்­பிட்­டது.

பரா­ம­ரிப்பு, பங்­க­ளிப்பு, தொடர்­பில் இருத்­தல் எனும் மூன்று அம்­சங்­களில் மறு­ஆய்வு செய்­யப்­பட்ட செய­லாக்­கத் திட்­டம் கவ­னம் செலுத்­தும். சிங்­கப்­பூ­ரர்­கள் வாழ்க்­கையை நிறை­வு­டன் வாழ உத­வு­வது இதன் நோக்­கம்.

'ஸ்போர்ட் சிங்­கப்­பூர்' அமைப்பு, முதி­யோ­ரும் இளை­யர்­களும் இணைந்து ஈடுபட உத­வும் வகை­யில் மறு­வ­டி­வ­மைக்­கப்­பட்ட விளை­யாட்டு அம்­சங்­க­ளைக்­கொண்ட விளையாட்டிடத்தை உருவாக்கும் எனக் கூறப்பட்டது.

மேலும் செய்தி பக்கம் 2ல்