மகாதீர், முகைதீன் மீது வழக்கு

மகாதீர், முகைதீன் மீது வழக்கு

2 mins read
d14f3e7d-ed8e-43b9-adf4-709f343b42fe
-
multi-img1 of 2

சிங்கப்பூர்- மலேசியாவுக்கு இடையிலான அதிவேக ரயில் திட்டத்தை மீண்டும் தொடங்க மனுதாரர் விண்ணப்பம்

சிங்­கப்­பூ­ருக்­கும் மலே­சி­யா­வுக்­கும் இடை­யி­லான அதி­வேக ரயில்­சே­வைத் திட்­டம் ரத்து செய்­யப்­பட்­ட­தன் தொடர்­பில் மலே­சி­யா­வின் முன்­னாள் பிர­த­மர்­க­ளான மகா­தீர் முக­மது, முகை­தீன் யாசின் இரு­வர்­மீ­தும் நீதி­மன்­றத்­தில் வழக்கு தொடுக்­கப்ட்­டுள்­ளது.

அவ்­வி­ரு­வ­ரும் ஒவ்­வொரு மலே­சிய குடி­ம­க­னுக்­கும் ஒரு மில்­லி­யன் ரிங்­கிட் (S$308,000) இழப்­பீ­டாக வழங்­க­வேண்­டும் என்­றும் வழக்­கில் கோரப்­பட்­டது. அத்­து­டன், அந்த ரயில் சேவைத் திட்­டம் மீண்­டும் தொடங்­கப்­பட வேண்­டும் என்­றும் அதில் கேட்­டுக்­கொள்­ளப்ப்­பட்­டது. மலே­சி­யா­கினி, மலாய் மெயில் ஆகி­யவை நேற்று அதைத் தெரி­வித்­தன.

பொரு­ளி­ய­லுக்­குப் பொறுப்பு வகித்த முன்­னைய பிர­த­மர் அலு­வ­லக அமைச்­சர் முஸ்­தபா முக­மது, முன்­னைய போக்­கு­வ­ரத்து அமைச்­சர் வீ கா சியோங் ஆகி­யோ­ருக்­கும் எதி­ராக அழைப் பாணை விடுக்க கோரப்­பட்­டது.

முக­மது ஹட்டா சன்­சூரி எனும் 46 வயது மலே­சி­யர் கடந்த டிசம்­பர் 30ஆம் தேதி வழக்­கைத் தொடுத்­துள்­ளார்.

2018 செப்­டம்­பர் 5ஆம் தேதி, ரயில்­சே­வைத் திட்­டத்­தைத் தள்ளி வைக்க முடிவு எடுத்­த­தில் டாக்­டர் மகா­தீர் அலட்­சி­ய­மா­க­வும் பத­வி­யில் கடமை தவ­றி­யும் நடந்து­கொண்­டார் என்று வழக்­கில் கூறப்­பட்­டது. அத­னால் மலே­சியா சிங்­கப்­பூ­ருக்கு 46 மில்­லி­யன் ரிங்­கிட் இழப்­பீடு தந்­தது.

மேலும், 2020ல் அத்­திட்­டத்தை ரத்து செய்த திரு முகை­தீன் அலட்­சி­யம் காட்டி, கடமை தவ­றி­னார் என்­றும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. அதன் விளை­வாக சிங்­கப்­பூ­ருக்கு 320 மில்­லி­யன் ரிங்­கிட் இழப்­பீடு தரப்­பட்­டது.

முக­மது ஹட்டா ஏற்­கெ­னவே 2021ல் மலே­சிய அர­சாங்­கத்­தின்­மீது வழக்கு தொடுத்­துள்­ளார்.

பெட்ரா பிராங்கா தீவு சிங்­கப்­பூ­ருக்­குச் சொந்­த­மென அனைத்­து­லக நீதி­மன்­றம் அளித்த தீர்ப்பு மீதான மறு­ஆய்வு மனுவை மலே­சிய அர­சாங்­கம் மீட்­டுக்­கொண்­ட­தற்கு எதி­ராக அவர் வழக்கு தொடுத்­தார்.