ஐஎம்எஃப்: 2023ல் சிங்கப்பூர் பொருளியல் வளர்ச்சி குறையும்

ஐஎம்எஃப்: 2023ல் சிங்கப்பூர் பொருளியல் வளர்ச்சி குறையும்

3 mins read

'ஐஎம்­எஃப்' எனப்­படும் அனைத்­து­லக பண நிதி­யம் 2023க்கான சிங்­கப்­பூ­ரின் பொரு­ளி­யல் வளர்ச்சி முன்­னு­ரைப்­பைக் குறைத்­தி­ருக்­கிறது.

சிங்­கப்­பூர் பொரு­ளி­யல் இவ்­வாண்டு 1.5 விழுக்­காடு வளர்ச்சி அடை­யும் என்று நிதி­யம் முன்­னு­ரைத்­தது. இது கடந்த ஆண்டு காணப்­பட்ட 3.7 விழுக்­காடு வளர்ச்­சி­யை­விட குறை­வா­கும்.

சிங்­கப்­பூ­ரு­டன் மற்ற ஆசி­யான் நாடு­க­ளின் வளர்ச்சி முன்­னு­ரைப்­பை­யும் நிதி­யம் குறைத்­துள்­ளது. சீனா அதன் பொரு­ளி­யலை மீண்­டும் திறந்­து­வி­டத் தொடங்­கி­யுள்­ள­போ­தும் உல­கப் பொரு­ளி­ய­லில் ஏற்­பட்­டுள்ள மெது­வ­டைவை அத­னால் ஈடு கட்ட முடி­யாது என்று நிதி­யம் கூறி­யது.

பண நிதி­யத்­தின் தலை­மைப் பொரு­ளி­யல் நிபு­ணர் பியேர்-ஒலி­வி­யேர் கோரிஞ்­சாஸ் அந்த விவ­ரங்­களை நேற்று தெரி­வித்­தார். நிதி­யம் அதன் உல­கப் பொரு­ளி­யல் முன்­னு­ரைப்பை வெளி­யிட்­டதை ஒட்டி சிங்­கப்­பூ­ரில் நடை­பெற்ற செய்­தி­யா­ளர் கூட்­டத்­தில் அவர் பேசி­னார்.

சிங்­கப்­பூர் பொரு­ளி­யல் 2023ல் 3.7 விழுக்­காடு வளர்ச்சி அடை­யும் என்று ஆணை­யம் கடந்த அக்­டோ­ப­ரில் முன்­னு­ரைத்­தி­ருந்­தது. ஆனால் சிங்­கப்­பூ­ரின் பெரும்­பா­லான முக்­கிய வர்த்­த­கப் பங்­காளி நாடு­களில் பொரு­ளி­யல் வளர்ச்சி குறை­யும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது. அத­னால் குடி­ய­ர­சின் பொரு­ளி­யல் வளர்ச்சி முன்­னு­ரைப்­பும் குறைக்­கப்­பட்­ட­தாக டாக்­டர் கோரிஞ்­சாஸ் கூறி­னார்.

சிங்­கப்­பூ­ரின் இந்த ஆண்­டுப் பொரு­ளி­யல் வளர்ச்சி 0.5 விழுக்­காட்­டுக்­கும் 2.5 விழுக்­காட்­டுக்­கும் இடைப்­பட்­டி­ருக்­கும் என்று வர்த்­தக, தொழில் அமைச்சு ஏற்­கெ­னவே முன்­னு­ரைத்­தி­ருந்­தது. நிதி­யத்­தின் நேற்­றைய முன்­னு­ரைப்பு அதை ஒத்­துள்­ளது.

அதே வேளை­யில், உல­கப் பொரு­ளி­யல் இவ்­வாண்டு 2.9 விழுக்­காடு வளர்ச்சி அடை­யும் என்று பண நிதி­யம் நேற்று கூறி­யது.

கடந்த அக்­டோ­ப­ரில் நிதி­யம் முன்­னு­ரைத்த 2.7 விழுக்­காடு வளர்ச்சி முன்­னு­ரைப்­பை­விட இது சற்று அதி­கம்.

வாடிக்­கை­யா­ளர்­க­ளின் மீட்­சி­யை­யும் சீனப் பொரு­ளி­யல் மீண்­டும் திறந்­து­வி­டப்­ப­டு­வ­தை­யும் நிதி­யம் அந்த உயர்­வுக்­குக் கார­ணங்­க­ளா­கச் சுட்­டி­யது.

2022ல் மூன்று விழுக்­காடு மட்­டும் வளர்ச்சி கண்ட சீனப் பொரு­ளி­யல், இவ்­வாண்டு 5.2 விழுக்­காடு அதி­க­ரித்து மீட்சி அடை­யும் என்று நிதி­யம் எதிர்­பார்த்து வரு­கிறது.

ஆனால் சிங்­கப்­பூ­ரின் முக்­கிய வர்த்­த­கப் பங்­கா­ளி­க­ளான அமெ­ரிக்­கா­வி­லும் ஐரோப்பா விலும் இவ்­வாண்டு பெரி­தான வளர்ச்சி இருக்­காது.

அமெ­ரிக்­கப் பொரு­ளி­யல் 2023ல் 1.4 விழுக்­காடு வளர்ச்சி பெறும் என்று நிதி­யம் கூறி­யுள்­ளது. அது 2022ல் காணப்­பட்ட இரண்டு விழுக்­காடு வளர்ச்­சி­யை­வி­டக் குறை­வா­கும்.

"வர்த்­த­கத்­துக்கு திறந்த மனப்­பான்­மை­யு­டன் இருப்­பதே சிங்­கப்­பூ­ருக்­கும் ஆசி­யா­வின் மற்ற பல பெரிய பொரு­ளி­யல்­களுக்­கும் முக்­கி­யம். இந்­நாடு, உலக நடப்­பு­க­ளால் அதி­கத் தாக்­கத்தை எதிர்நோக்கக்­கூ­டிய பொரு­ளி­ய­லா­கும்," என்று டாக்­டர் கோரிஞ்­சாஸ் குறிப்­பிட்­டார்.

பண­வீக்­கம் உயர்ந்­தி­ருக்­கும்

சிங்­கப்­பூ­ரில் இவ்­வாண்டு பண­வீக்­கம் உயர்ந்­தி­ருக்­கும் என்­றும் 2023 தொடக்­கத்­தில் பொருள், சேவை வரி உயர்த்­தப்­பட்­டது அதற்­கொரு கார­ணம் என்­றும் டாக்­டர் கோரிஞ்­சாஸ் தெரி­வித்­தார். பண­வீக்­கம் அதி­க­மாக இருக்­கும் என்­ப­தால் சிங்­கப்­பூர் நாணய ஆணை­யம் அதன் நிதிக் கொள்­கை­களை இறுக்­க­மா­கவே வைத்­தி­ருக்­கும் என்­றார் அவர்.

அத்­து­டன், சிங்­கப்­பூர், மலே­சியா, இந்­தோ­னீ­சியா, தாய்­லாந்து, பிலிப்­பீன்ஸ் ஆகிய ஐந்து நாடு­களும் 2023ல் கூட்­டாக 4.3 விழுக்­காடு வளர்ச்சி காணும் என்று நிதி­யம் முன்­னு­ரைத்­துள்­ளது. இது கடந்த ஆண்டு ஏற்­பட்ட 5.2 விழுக்­காடு வளர்ச்­சி­யை­விட குறை­வா­கும்.

மேலும் செய்­தி­கள்:

5ஆம், 7ஆம் பக்­கங்­கள்