மனிதவள அமைச்சு: இதுவரை இல்லாத அளவு 231,700 வேலைகள் கூடின வெளிநாட்டு ஊழியர் வரவால் 2022ல் வேலைகள் பெருகின

மனிதவள அமைச்சு: இதுவரை இல்லாத அளவு 231,700 வேலைகள் கூடின வெளிநாட்டு ஊழியர் வரவால் 2022ல் வேலைகள் பெருகின

2 mins read
9cd4dac3-b61f-4769-86fb-7b20ff0087a4
கடந்த ஆண்டு புதி­தாக வேலை­யில் அமர்த்தப்­பட்­ட­வர் களில் பெரும்­பா­லா­னோர் வெளி­நாட்­ட­வர்­கள். எல்­லை­கள் திறக்­கப்­பட்­டதை அடுத்து, அதி­க­மா­ன­வர்­கள் இங்கு வேலை­யில் சேர்க்­கப்­பட்­ட­னர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்­கப்­பூ­ரில் வேலை நில­வ­ரம் 2021ஆம் ஆண்­டைக் காட்­டி­லும் 2022ல் பெரி­தும் மேம்­பட்­டி­ருந்­தது. முன்­னெப்­போ­தும் இல்­லாத அள­வுக்கு கடந்த ஆண்டு 231,700 கூடு­த­லான ஊழி­யர்­கள் வேலை­களில் சேர்ந்­த­னர். அது 2019ல், பெருந்­தொற்­றுக்கு முன்பு­இருந்த நில­வ­ரத்­தை­விட மூன்று விழுக்­காடு அதி­கம் ஆகும்.

ஆண்­டி­று­தி­யில் வேலை­நீக்­கம் அதி­க­ரித்­த­போ­தும் சென்ற ஆண்டு முழு­வ­தும் வேலை­யின்மை விகி­தம் நிலை­யா­க­வும் வேலை­நீக்­கம் குறை­வா­க­வும் இருந்­த­தாக மனி­த­வள அமைச்சு நேற்று தெரி­வித்­தது. 2022க்கான தனது முன்­னோடி வேலை நில­வர அறிக்­கையை அமைச்சு நேற்று வெளி­யிட்­டது.

கடந்த ஆண்டு புதி­தாக வேலை­யில் அமர்த்தப்­பட்­ட­வர் களில் பெரும்­பா­லா­னோர் வெளி­நாட்­ட­வர்­கள். எல்­லை­கள் திறக்­கப்­பட்­டதை அடுத்து, அதி­க­மா­ன­வர்­கள் இங்கு வேலை­யில் சேர்க்­கப்­பட்­ட­னர்.

அதே நேரம், உள்­ளூர் ஊழி­யர்­க­ளின் எண்­ணிக்கையும் கூடி­யது. ஆனால் 2021ஆம் ஆண்­டை­விட குறை­வான விகி­தத்­தில் அந்த வளர்ச்சி இருந்­தது. நிதிச் சேவை­கள், தக­வல் தொடர்பு, சமூ­கம், தனிப்­பட்ட சேவை­கள் உள்­ளிட்ட துறை­களில் அந்தப் புதிய வேலை­கள் பெரும்­பா­லும் இருந்­தன.

2021ல் 2.7 விழுக்­கா­டாக இருந்த வேலை­யின்மை விகி­தம் 2022ல் 2.1 விழுக்­கா­டா­கக் குறைந்­தது. பெருந்­தொற்­றுக்கு முன்பு இருந்த 1.9 விழுக்­காடு வேலை­யின்மை விகி­தத்­தை­விட இது சற்றே அதி­க­மா­கும்.

அத்­து­டன், சென்ற ஆண்டு 6,450 வேலை இழப்­பு­கள் ஏற்­பட்­டன. இது முந்­தைய மூன்று ஆண்­டு­க­ளை­வி­டக் குறை­வா­கும். வேலை இழப்­பு­க­ளின் எண்­ணிக்கை 2021ல் 8,020ஆக­வும் 2019ல் 10,690ஆக­வும் இருந்­தது.

"சிங்­கப்­பூர் பொரு­ளி­யல் மீட்சி அடைந்த நிலை­யில், திற­னா­ளர்­களை ஈர்க்க அதி­க­மான முத­லா­ளி­கள் கூடு­தல் சம்­ப­ளம் வழங்க முன்­வந்­த­னர். அத­னால் வேலை தேடு­வோ­ருக்­கான வேலை விகி­தம் அதி­க­ரித்­தது.

"வேலை­யில்­லாத ஒவ்­வொரு நப­ருக்­கும் இரண்டு காலி வேலை­யி­டங்­கள் இருந்­தன," என்று அடேக்கோ எனும் மனித வள ஆலோ­சனை நிறு­வ­னத்­தின் சிங்­கப்­பூர் மேலா­ளர் பெத்­துல் கெங்க் ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்­சி­டம் கூறி­னர்.

காலாண்டு அடிப்­ப­டை­யில் பார்த்­தால், வேலை­யில் இருப்­ப­வர்­க­ளின் எண்­ணிக்கை கடந்த ஆண்­டின் இறு­திக் காலாண்­டில் தொடர்ந்து ஐந்­தா­வது காலாண்­டாக அதி­க­ரித்­தது. உள்­ளூர் ஊழி­யர் அணி­யில் 47,400 புதிய வேலை­கள் உரு­வாக்­கப்­பட்­ட­தாக அமைச்சு தெரி­வித்­தது.

இவ்­வே­ளை­யில். சென்ற அக்­டோ­பர் முதல் டிசம்­பர் வரை சுமார் 3,000 ஊழி­யர்­கள் ஆட்­குறைப்பு செய்­யப்­பட்­ட­னர்.

ஆனால் முந்­தைய மூன்று காலாண்­டு­களில் ஆட்­கு­றைப்பு செய்­யப்­பட்­ட­வர்­க­ளின் எண்­ணிக்கை 800க்கும் 1,300க்கும் இடைப்­பட்­டி­ருந்­தது. மின்­னி­யல், தக­வல் தொழில்­நுட்­பத் துறை, ஒட்­டு­மொத்த வர்த்­தகத் துறை ஊழி­யர்­கள் பெரி­தும் பாதிக்­கப்­பட்­ட­னர். வர்த்­தக மறு­சீ­ர­மைப்­பால் பல வேலை­கள் குறைக்­கப்­பட்­டன.

இவ்­வாண்டு வேலை நில­வ­ரத்­தைக் கண்­கா­ணித்து வரு­வ­தாக மனி­த­வள அமைச்சு கூறி­யது. நிறு­வ­னங்­கள் தொடர்ந்து ஊழி­யர்­களை வேலைக்கு எடுக்­கத் திட்­ட­மிட்­டுள்­ளதை அமைச்சு நடத்­திய கருத்­தாய்வு எடுத்­து­ரைத்­தது.

டிசம்­ப­ரில் நடத்­தப்­பட்ட கருத்­தாய்­வில் கலந்­து­கொண்ட 64.6 விழுக்­காட்டு நிறு­வ­னங்­கள் அடுத்த மூன்று மாதங்­களில் ஊழி­யர்­க­ளைச் சேர்க்­கத் திட்­ட­மிட்­டன.

ஆனால் வேலைச்­சந்­தை­யில் ஏற்­பட்ட முன்­னேற்­றம் வேகம் இழக்­க­லாம் என்­றும் அண்­மைய வேலை இழப்­பு­களால் வேலை­யின்மை விகி­தம் உய­ரக்­கூ­டும் என்­றும் அமைச்சு கூறி­யது.