கெப்பல் முனையத்தில் கொள்கலன் ஏற்றும் வாகனம் கடலில் விழுந்தது; ஓட்டுநர் மரணம்

கெப்பல் முனையத்தில் கொள்கலன் ஏற்றும் வாகனம் கடலில் விழுந்தது; ஓட்டுநர் மரணம்

2 mins read
7fc79f77-06c6-46c5-ac5c-63b19808b910
-

கொள்­க­லன்­களை ஏற்­றிச் செல்­லும் கன­ரக வாக­னம் ஒன்று கெப்­பல் முனை­யத்­தில் கட­லுக்­குள் விழுந்­தது.

அதை ஓட்­டிச்­சென்ற 44 வயது லாரி ஓட்­டு­நர் உயிர் இழந்­தார். அச்­சம்­ப­வம் நேற்று அதி­காலை நடந்­தது.

நேற்று அதி­காலை 1.45 மணிக்கு 101 கெப்­பல் சாலை­யி­லி­ருந்து உதவி கோரி காவல் துறைக்கு அழைப்பு கிடைத்­தது.

அந்த இடத்­துக்­குச் சென்ற சிங்­கப்­பூர் குடி­மைத் தற்­காப்­புப் படை, கப்­பல் துறை­யில் முனை­யில் கன­ரக வாக­னம் ஒன்று இருந்­த­தா­கக் கூறி­யது. வாக­னத்­தின் கொள்­க­லன் ஏற்­றும் பின் ப­குதி கட­லுக்­குள் விழுந்து மூழ்­கி­யி­ருந்­த­தாக குடி­மைத் தற்­காப்புப் படை­யி­னர் தெரி­வித்­த­னர்.

வாக­னத்­தின் முன்­ப­குதி நக­ரா­மல் இருக்க சிங்­கப்­பூர் துறை­முக ஆணைய ஊழி­யர்­கள் உத­வி­னர் என்­றும் குடி­மைத் தற்­காப்­புப் படை­யின் பேரி­டர் உதவி, மீட்­புக் குழு­வி­னர் நீருக்­குள் தேடி­னர் என்­றும் கூறப்­பட்­டது.

சிங்­கப்­பூர் கடற்­துறை, துறை­முக ஆணை­யம், அச்­சம்­ப­வம் பற்றி தனது கடற்­து­றைப் பாது­காப்­புக் கட்­டுப்­பாட்டு நிலை­யத்­துக்கு அதி­காலை 2 மணி அள­வில் தக­வல் கிடைத்­த­தா­கக் கூறி­யது.

மீட்­புப் பணி­களில் உதவ ஆணை­யம் தனது சுற்­றுக்­கா­வல் படகை உட­ன­டி­யாக அனுப்­பி­யது.

14 மீட்­டர் ஆழத்­தி­லி­ருந்து ஓட்­டு­ந­ரின் சட­லத்­தைத் தனது முக்­கு­ளிப்­பா­ளர்­கள் மீட்­ட­தாக சிங்­கப்­பூர் குடி­மைத் தற்­காப்­புப் படை சொன்­னது. அவ­ரது சட­லம் வாக­னத்­தில் ஓட்­டு­நர் அமர்ந்­தி­ருக்­கும் பகு­தி­யி­லி­ருந்­தது.

அவர் உயிர் இழந்­து­விட்­ட­தாக சம்­பவ இடத்­தி­லேயே மருத்­துவ அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர்.

முதற்­கட்ட விசா­ர­ணை­யின் அடிப்­ப­டை­யில் இச்­சம்­ப­வத்­தில் சூது நிகழ்ந்­தி­ருக்­கும் சாத்­தி­ய­மில்லை என்று காவல்­துறை கூறி­யது. விசா­ரணை தொடர்­கிறது.