உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் 18 வயது மாணவர் தடுத்துவைப்பு

ரச்­சனா வேலா­யு­தம்

‘ஐஎஸ்­ஐ­எஸ்’ அமைப்­புக்கு ஆத­ர­வாக 18 வயது மாண­வர் முகம்­மது இர்­ஃபான் டன்­யால் முகம்­மது நூர், சிங்­கப்­பூ­ரி­லும் வெளி­நா­டு­க­ளி­லும் ஆயு­தம் ஏந்தி வன்­மு­றை­யில் ஈடு­ப­டத் திட்­ட­மிட்­டி­ருந்­தார். சுய தீவி­ர­வா­தச் சிந்­த­னை­யால் தூண்­டப்­பட்ட இர்­ஃபான், கடந்த டிசம்­பர் மாதம் உள்­நாட்­டுப் பாது­காப்­புச் சட்­டத்­தின் கீழ் தடுத்து வைக்­கப்­பட்­டார்.

தனது நம்­பிக்­கைக்கு எதி­ரா­ன­வர்­க­ளைக் கத்­தி­யால் குத்­திக் கொல்­ல­வும் அமோய் குயீ முகா­மில் பலர் மீதான தாக்­கு­தல் ஒன்றை நடத்­த­வும் இர்­ஃபான் திட்­ட­மிட்­டி­ருந்­த­தாகக் கூறப்­ப­டு­கிறது.

முகா­மில் காரைக் கொண்டு தற்­கொ­லைத் தாக்கு­தல் நடத்­து­வ­தற்­காக இர்­ஃபான் ஆள் தேட­வி­ருந்­த­தா­க­வும் கூறப்­ப­டு­கிறது. இவற்­று­டன் தஞ்­சோங் பகா­ரில் உள்ள ஹஜி முகம்­மது சலே பள்­ளி­வா­ச­லின் இடு­காட்­டைக் குறி­வைத்து ‘சி4’ வெடி­குண்­டுக் கருவி ஒன்றை உரு­வாக்­க­வும் திட்­ட­மிட்­டி­ருந்­த­தாக நம்­பப்­ப­டு­கிறது.

சிங்­கப்­பூ­ரின் கோனி தீவை, ‘ஐஎஸ்­ஐ­எஸ்’ அமைப்­பின் ஒரு மாநி­ல­மா­கப் பிர­கடனப்­ப­டுத்­த­வும் இர்­ஃபான் திட்­ட­மிட்­டி­ருந்­தார்.

தனது தேசிய மாண­வர்ப் படை சீருடை, தானே தயா­ரித்த ‘ஐஎஸ்’ கொடி, தலைப் பட்டை ஆகி­ய­வற்­று­டன் ‘ஐஎஸ்’ அமைப்­பின் தலை­வ­ருக்­குத் தனது விசு­வா­சத்­தைத் தெரி­விக்­கும் உறு­தி­மொ­ழி­யைக் கடந்த ஆண்டு நவம்­பர் 12ஆம் தேதி­யன்று இர்­ஃபான் எடுப்­ப­தற்கு சில தினங்­களுக்கு முன் உள்­நாட்­டுப் பாது­காப்­புத் துறை (ஐஎஸ்டி) அதி­காரி­கள் இர்­ஃபா­னைக் கைது செய்­தனர்.

இர்­ஃபா­னின் தாக்­கு­தல்­கள் பற்றியோ அல்­லது வெளி­நாட்­டில் ஆயு­த­மேந்­தி வன்­மு­றை­யில் ஈடு­படும் நோக்­கம் பற்றியோ இர்­ஃபா­னின் குடும்ப உறுப்­பி­னர்­கள் அறிந்­தி­ருக்­க­வில்லை என்­றும் கண்­ட­றி­யப்­பட்­டது.

ஸாகிர் நாயக், அக­மது டீடத் போன்ற சம­ய தீவி­ர­வாத போத­னை­யா­ளர்­க­ளின் யூடி­யூப் காணொ­ளி­க­ளைக் கண்டு, அவர் சுய­தீ­வி­ர­வா­தப் போக்­கிற்கு மாறி­ய­தா­கக் கூறப்­பட்­டது.

இதன் தொடர்­பில் ஜூ சியாட்­டில் உள்ள காலித் பள்­ளி­வா­ச­லில் செய்­தி­யா­ளர்­க­ளைச் சந்­தித்து விளக்­க­ம­ளித்­தார் சட்ட, உள்­துறை அமைச்­சர் கா. சண்­மு­கம்.

“கைதா­ன­போது வன்­மு­றை­யில் இறங்க வேண்­டும் என்­ப­தில் இர்­ஃபான் உறு­தி­யாக இருந்­தார். எங்­க­ளது மதிப்­பீட்­டின்­படி, அவர் கத்­தி­யைக் கொண்டு தாக்­கு­தல் நடத்த வாய்ப்­பி­ருந்­த­தா­கக் கருது­கி­றோம்.

“பாது­காப்­புக்கு உட­ன­டி­யாக அச்­சு­றுத்­தல் அளிப்­ப­வ­ராக அவ­ரைக் கரு­தி­ய­தால் கைது­செய்­தோம்,” என்று அமைச்­சர் சண்­மு­கம் கூறி­னார்.

இர்­ஃபான் பனிச்­ச­றுக்கு முக­மூ­டி­யால் தன் முகத்தை மறைத்­த­வாறு 2021ன் பிற்­பா­தி­யில் புகைப்­ப­டங்­கள் எடுத்­துக்­கொள்ள தொடங்­கி­னார். இஸ்­லா­மிய ஆன்­மி­கத் தலை­வ­ராக வாழவேண்­டும் என்று 2021ஆம் ஆண்­டின் பிற்­பா­தி­யில் முடி­வெ­டுத்­தார்.

அதை­ய­டுத்து கடந்­தாண்டு ஆகஸ்ட் 9ஆம் தேதி­யன்று தானே வடி­வ­மைத்த கொடி ஒன்றை கோனி தீவில் நட்­டார். அக்­கொடி அல்­ காய்தா தொடர்­பு­டைய தீவி­ர­வாத அமைப்பு ஒன்­றோடு தொடர்­பு­டை­ய­தா­கும்.

சிங்­கப்­பூ­ரின் தேசிய தினத்­தன்று கொடி­யைக் காட்­டும் படங்­க­ளைத் தன் சமூக ஊட­கப் பக்­கத்­தில் பதி­வேற்­றம் செய்­த­து­டன் மற்­ற­வர்­க­ளை­யும் சேரச்­சொல்லி இர்­ஃபான் அழைப்பு விடுத்­த­தாக ஐஎஸ்டி கூறிற்று.

முஸ்­லிம் அல்­லாதோர், ‘ஷியா முஸ்­லிம்’, ‘சுஃபி முஸ்­லிம்’ ஆகி­யோ­ரைக் குறி­வைத்­துத் தாக்­கத் திட்­ட­மிட்ட இர்­ஃபான், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்­தில் ஒரு கத்­தியை வாங்­கி­னார். அங் மோ கியோ­வில் தேசிய சார­ணர் படை­யின் தலை­மை­ய­கம் அமைந்­துள்ள அமோய் குவீ முகா­மி­லும் தாக்கு­தல் நடத்தி, பெரும் சேதத்தை விளை­விக்க அவர் திட்­ட­மிட்­டி­ருந்­த­தா­கக் கூறப்­பட்­டது.

“தமது திட்­டங்­களில் ஏதே­னும் ஒன்றை அவர் செயல்­படுத்­தி­யி­ருந்­தால் உயி­ரு­டல் சே­தம், சம­யங்­க­ளுக்கு இடை­யி­லான அவ­நம்­பிக்கை போன்ற பாதிப்­பு­களை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கக்­கூ­டும்,” என்று அமைச்­சர் குறிப்­பிட்­டார்.

இர்­ஃபான் தனி­யா­கச் செயல்­பட்­டார் என்­றும் மற்­ற­வர்­க­ளைத் தன்­பக்­கம் இழுக்­கும் அல்­லது சுய­தீ­வி­ர­வா­தப் போக்­கிற்கு மாற்­றும் அவ­ரது முயற்­சி­கள் கைகூ­டி­ய­தற்­கான அறி­குறி தெரி­ய­வில்லை என்­றும் உள்­நாட்­டுப் பாது­காப்­புத் துறை தெரி­வித்­தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!